டிடிஎஃப் வாசன்

தமிழ் யூடியூப் உலகின் தளபதி?.. TTF வாசன் கதை!

விஜய், நெய்வேலில ரசிகர்கள்கூட எடுத்த செல்ஃபி சோஷியல் மீடியால செம வைரலா இருந்துச்சு. அதேமாதிரி TTF வாசன் எடுத்த செல்ஃபிதான் இன்னை சோஷியல் மீடியால வைரல். “யார்ரா இவன்? லூசு மாதிரி பேசிட்டு பைக்ல இவ்வளவு ஃபாஸ்ட்டா சுத்துறான்”னு நிறைய பேர் அந்தப் பையனை வைச்சு செய்றாங்க. அதே நேரத்துல நண்டு சிண்டுல இருந்து பாட்டி வரைக்கும் ‘TTF… TTF… TTF…’னு அந்தப் பையனைப் பார்த்து உயிரைக் கொடுத்து கத்துறாங்க. “வாசன் உடையான் படைக்கு அஞ்சான். “TTF is not a name it’s a brand”னு மோட்டிவேட்டா அந்த பெயரை சொல்லும்போது ஃபீல் பண்றாங்க. யார் இந்த TTF வாசன்? TTF வாசனோட லவ் ஸ்டோரி தெரியுமா? TTF வாசன் பண்றது சரியா? தப்பா? TTF வாசன் அரசியல் கட்சி தொடங்குவாரா? இதெல்லாம்தான் இந்தெ வீடியோல பார்க்கப்போறோம்.

கோயம்புத்தூர்ல காரமடை பகுதில் உள்ள வெள்ளையங்காடு அப்டின்ற ஊரைச் சேர்ந்தவர்தான், வாசன். சின்ன வயசுல இருந்தே அப்பாவோட புல்லட்ல போறதுனா அவருக்குய் ரொம்ப புடிக்கும். அதுவும் அந்த புல்லட் சவுண்ட் கொடுத்த போதைல ரொம்பவே வாசன் மயங்கிட்டாருனு சொல்லலாம். போலீஸா இருந்த அவங்கப்பா வாசன் ஸ்கூல் படிக்கும்போதே தவறிட்டாரு. அதனால, வாசனோட அப்பா பைக் ரொம்ப நாளா வீட்டுலயே சும்மா இருந்துருக்கு. வாசன் ஃபஸ்ட் கியர் போட்டு பைக்லாம் ஓட்ட கத்துக்கிட்டது ஆர்.எக்ஸ் 100ல தான். அதுக்கப்புறம் அப்பாவோட புல்லட்டை எடுத்து ஸ்டார்ட் பண்ணி ஒட்ட ஆரம்பிச்சிருக்காரு. ஆனால், வண்டி சரியா மெயிண்டனன்ஸ் இல்லாததால வீட்டுல வண்டிய சரி பண்ணி கொடுங்கனு வாசன் கேட்ருக்காரு. வாசனோட அம்மா, “நீ 400 மார்க் மேல எடு. ரெடி பண்ணிடலாம்”னு சொல்லியிருக்காங்க. ஆனால், வாசனுக்கு படிப்பு சுமாராதான் வரும். கூடவே, மொபைல் ஃபோனும் வாங்கித்தறேன்னு வாக்கு கொடுத்துருக்காங்க.

அம்மா சொன்னதை நினைச்சு கஷ்டப்பட்டு படிச்சிருக்காரு, வாசன். பத்தாவதுல அவர் வாங்குன மார்க், 402. இவன் எப்படி இவ்வளவு மார்க் வாங்குனான்னா எல்லாருக்கும் ஆச்சரியம். ஆனால், வண்டியை ரெடி பண்ணி கொடுக்கல. 11வது படிக்கும்போதும் ரெடி பண்ணி கொடுக்கல. ரொம்ப கேட்டு மெக்கானிக் ஷட்ல ஒருவழியா பைக்கை கொண்டுபோய் கொடுத்துருக்காங்க. அவங்க 6 மாசம் அந்த பைக்கை ரெடி பண்ண எடுத்துருக்காங்க. அதுவரைக்கும் டெய்லி போய் மெக்கானிக் ஷெட்ல பைக்கை பார்த்துட்டு வருவாராம். கடைசில அவர் ரொம்ப நாள் வெறித்தனமா வெயிட் பண்ண பைக் கையில கிடைச்சுது. காலேஜ் ஃபஸ்ட் இயர் வரைக்கும் அந்த பைக்தான் யூஸ் பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் அப்பாச்சி, ஆர்.ஒன்.5 எல்லாம் வாங்கி ஓட்ட ஆரம்பிச்சிட்டாரு. அம்மா, பாட்டு கொடுக்குற காசை சேர்த்து வைக்கிறது. சின்ன சின்ன வேலைக்கு போறது. இப்படி கிடைக்கிற காசை வைச்சுதான் டிராவல்லாம் பண்ணுவாரு.

வாசனோட காலேஜ் லைஃபே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அவர் படிச்சது பி.ஏ இங்கிலீஷ். முதல்நாள் காலேஜ் போகும்போது கிளாஸ்ல 30 பொண்ணுங்க, 3 பசங்க. அதுலயும் 2 பசங்க டிஸ்கன்டினியூ பண்ணிட்டாங்க. வாசனுக்கு மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படிக்க ஆசை. ஆனால், அது நடக்கலை. சரி, பொண்ணுங்ககூட இருந்தா கடுப்பா இருக்கும். வேற டிபார்ட்மென்ட் போகலாம்னு முடிவு பண்ணி அம்மாவை கூப்பிட்டுட்டு காலேஜ்க்கு போய்ருக்காரு. ஆனால், அங்கப் போனதும் அவங்க அம்மா, “நீ இந்த டிபார்ட்மென்ட்லயே படி. உனக்கு பைக் வாங்கித்தறேன்னு சொல்லியிருக்காங்க”. ஒரு பைக் லவ்வருக்கு வேற என்ன வேணும்? அவர் சேர்த்து வைச்ச காசு எல்லாம் போட்டு வேற பைக் வாங்கியிருக்காரு. அதுக்கப்புறம் சின்ராச கையிலயே புடிக்க முடியலைன்ற மொமன்ட்தான்.

பைக் மேல மிகப்பெரிய காதல் இருக்குற வாசன், தன்னோட பேஷனையே புரொஃபஷனா மாத்திக்க ஆசை. அப்படிதான் மொதல்ல வாசன் என்ஃபீல்டர்னு ஒரு சேனல் ஆரம்பிச்சு, பைக் ரிவியூ போடுறது, பைக் பத்தி பேசுறதுனு பண்ணிட்டு இருந்தாரு. ஆனால், அந்த சேனல் சரியா போகலை. அதுக்கப்புறமா சரி, நாம ஏன் டிராவல் விளாக் போடக்கூடாதுனு யோசிச்சிருக்காரு. அப்படிதான் அந்த ட்வின் த்ரோட்லர்ஸ்ங்குற சேனலை ஸ்டார் பண்ணியிருக்காரு. அவரும் அவர் ஃப்ரண்ட் நிதினும் சேர்ந்துதான் அந்த ‘ட்வின் த்ரோட்லர்ஸ்’ பெயர். அதேமாதிரி கொஞ்சம் நாள் முன்னாடி கோப்ரா வாங்கலாமா? வேணாமா?னு ஒரு போல் போட்ருந்தாரு. அதுக்கு நிறைய பேர் காசு வேணுமா ப்ரோ… காசு அனுப்பட்டுமா ப்ரோ…னு கமெண்ட் பண்ணியிருக்காங்க. அதைப் பார்த்து எமோஷனல் ஆகி நீங்க என்னோட ஃபேமிலினு முடிவு பண்ணி ‘TTF’னு பெயர் வைச்சிருக்காரு.

லவ் ஸ்டோரி நம்ம எல்லாரோட வாழ்க்கைலயும் இருக்கும். வாசனோட லைஃப்லயும் அந்த ஸ்டோரி இருக்கு. அவர் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்காரு. அப்புறம் ரெண்டு பேரும் ஒத்து வரலைனு சொல்லி பிரிஞ்சிருக்காங்க. இன்னைக்கும் அவர் அந்தப் பொண்ணோட டச்லதான் இருக்காரு. சமீபத்துல அவர் ஒரு அவார்ட் வாங்குற ஃபங்ஷனுக்குக்கூட அந்தப் பொண்ணை இன்வைட் பண்ணியிருக்காரு. வாசனோட அப்பா டியூட்டில இருக்கும்போதே இறந்துட்டதுனால, அவர் வேலை இவருக்கு கிடைச்சதாகூட சொல்றாங்க. ஆனால், யூடியூப்தான் புடிச்சிருக்குனு அவங்க அம்மாக்கிட்ட சொல்லி கன்வைன்ஸ் பண்ணியிருக்காரு. யூடியூப்ல டெய்லி ஒரு வீடியோ போடணும்னு முடிவு பண்றாரு. இன்னைக்கு இருக்குற இளைஞர்களுக்கு கனவா இருக்குறது டிராவலிங்கும் பைக்கும்தான். அதையே நமக்கு புடிச்ச மாதிரி ஒருத்தர் பண்றாருனா, அவரை புடிக்காமலையா போகும்? இப்படிதான் அவருக்கு இளைஞர்கள் ஃபேன்ஸ் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிக்குது.

முதல்ல கோயம்புத்தூர்குள்ளயே சுத்திட்டு இருந்தாரு. அப்புறம் ஊரு விட்டு ஊரு சுத்த ஆரம்பிச்சாரு. லடாக் போகணும்ன்ற ஆசை ஆரம்பத்துல இருந்தே வாசனுக்கு இருந்துச்சு. அந்த தீப்பொறியை அணையவே விடல. கேரளா, கர்நாடகானு சவுத் இந்தியா ஃபுல்லா சுத்திட்டு, அப்புறம் லடாக்குக்கு போனாரு. லடாக் போகும்போது அவர் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 4 லட்சம். அங்க இருந்து திரும்பி வரும்போது 8 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ். இப்போ, ஃபாரீனுக்கு போனும்ன்றதுதான் அவரோட ஆசை. அதுக்கான முயற்சிலதான் இருக்காரு. டெய்லி ஒரு வீடியோ போடுறதுல கொஞ்சம்கூட சமரசம் காட்டமாட்டாரு. ஆக்சிடண்ட்லாம் ஆகியிருக்கு. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் ஹாஸ்பிடல்ல இருந்து வீடியோ போட்டாரு. லாங்கா முடியை வளர்க்குறது, மொட்டை அடிக்கிறது, ஷார்ட் கட் போடுறதுனு லுக் வைஸ் வெரைட்டியும் காட்டுவாரு. வாசன் மொட்டையடிச்சதுக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கு. அது என்னனா, முடியை மொத்தமா மொட்டையடிச்சு முடி தானம் பண்ணாருனா பார்த்துக்கோங்க.

TTF செம வைரல் ஆனதும் அவர் அரசியலுக்கு வரப்போறாரானுலாம் மீம் போட்டுட்டு இருந்தாங்க. இதுக்கு வாசன், “ஆமாங்க, எனக்கும் TTF முன்னேற்றக் கழகம்னு ஒண்ணு ஆரம்பிச்சா, எப்படி இருக்கும்ணு தோணியிருக்கு. சும்மா விளையாட்டுக்கு சொல்றேன். எல்லாம் கடவுள் கைலதான் இருக்கு”னு சொல்றாரு. ஒருவேளை அரசியலுக்கு வந்தா சி.எம் ஆயிடுவாரோ? இருக்குற ஆதரவுக்கு நடந்தாலும் நடக்கும். ஸ்பீடா பைக் ஓட்றாரு, வீலிங் பண்றாரு, பசங்களை ஹைப் ஏத்தி விடுறாரு – இப்படி அவர்மேல நிறை விமர்சனங்கள் வைக்கிறோம். நிச்சயமா இதெல்லாம் தவறான விஷயங்கள்தான். இதை எதை சொல்லியும் நியாயப்படுத்தப்போறதில்லை. ஆனால், 2 கே கிட்ஸ் மேல ஒரு வெறுப்பு மனநிலை இவங்களை வைச்சுலாம் வருதுல, அது ரொம்பவே தவறான விஷயம். TTF வாசன் போறப்போக்குல ஹெல்ப் பண்றாரு. குட்டி குட்டியா நல்ல விஷயங்கள் பண்றாரு. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட சொல்றாரு. உங்களுக்கு புடிச்சதை பண்ண சொல்றாரு. அதையும் 2 கே கிட்ஸ் கேக்கலாம். ஃபாலோ பண்ணலாம்.

எல்லாத்தையும் ஒரு வேகத்துல செய்றதால ஹைப்பர் ஆக்டிவா பலருக்கு வாசன் தெரிஞ்சாலும், 2 கே கிட்ஸின் ஆதர்ஸ நாயகன் இன்னைக்கு அவர்தான். அதை யாராலையும் மறுக்கவோ, மாத்தவோ முடியாது. அதுதான் உண்மை. நாமதான் அப்டேட் ஆகணும் போல!

TTF வாசன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – மக்கா… நாகர்கோவில்காரங்க ஏன் யுனீக் பீஸ் தெரியுமா?

1 thought on “தமிழ் யூடியூப் உலகின் தளபதி?.. TTF வாசன் கதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top