IndVsBan

11 பேருமே அறிமுகம்தான்… இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் Rivalry!

இந்தியா தனது ஹோம் டெஸ்ட் சீசனை சென்னை சேப்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. அந்தப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்க்கொள்கிறது. இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான டெஸ்ட் மேட்ச்சுக்கென தனி வரலாறு இருக்கிறது.

11 அறிமுக வீரர்கள்!


1997 ஐசிசி டிராஃபி வெற்றிக்குப் பின்னர் வங்கதேச அணி, 1999 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய வங்கதேசம், நார்தாம்ப்டனில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.

அதேநேரத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களையும் வரைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தது வங்கதேசம். அதேபோல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்த அணிகளும் வங்கதேச அணிக்கு ஆதரவாக இருந்த நிலையில், ஐசிசி வங்கதேசத்துக்கு டெஸ்ட் அந்தஸ்தை அளித்தது. இதையடுத்து, 10-வது அணியாக டெஸ்ட் அரங்கிற்குள் காலடி எடுத்து வைத்தது வங்கதேசம்.

வங்கதேச அணியின் முதல் டெஸ்டில் விளையாட இந்திய அணி முன்வந்தது. இதையடுத்து, அந்த அணி விளையாடிய முதல் டெஸ்ட் தாக்காவில் 2000-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தொடங்கியது. அந்தப் போட்டிதான் சவுரவ் கங்குலி கேப்டனாக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி. அதேபோல், ஜாகீர்கான், தொடக்கவீரர் ஷிவ்சுந்தர் தாஸ், விக்கெட் கீப்பர் சபா கரீம் ஆகியோர் இந்தியா தரப்பில் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர்.

மறுபுறம், கேப்டன் நைமூர் ரஹ்மான் தலைமையில் வங்கதேச அணியின் 11 வீரர்களும் அறிமுக வீரர்களாக அந்தப் போட்டியில் விளையாடினர். முதல் மேட்சில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அமினுல் இஸ்லாம் சதமடிக்க அந்த அணி 400 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, இந்தியா 429 ரன்கள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 91 ரன்கள் ஆல் அவுட்டானது. 63 ரன்கள் இலக்கை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிய இந்தியா, 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்யும். முதல் டெஸ்டைப் போலவே இரண்டு அணிகளுமே தங்களது முதல் இரவு/பகல் டெஸ்ட் மேட்சையும் கொல்கத்தாவில் 2019-ல் விளையாடின.

இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா – வங்கதேசம் விளையாடியிருக்கும் நிலையில் அதில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கிறது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தன.

Also Read – Cricket in Olympics : 128 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லாதது ஏன்?

6 thoughts on “11 பேருமே அறிமுகம்தான்… இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் Rivalry!”

  1. Eu concordo com todas as ideias que você introduziu em sua postagem. Elas são muito convincentes e com certeza funcionarão. Mesmo assim, as postagens são muito curtas para iniciantes. Você pode prolongá-las um pouco para as próximas vezes. Obrigado pela postagem.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top