உஷாரய்யா உஷாரு… OLX-ல இப்படியெல்லாம் கிரைம் நடக்குதா?

ஆன்லைன் மார்க்கெட் பிளேஸான OLX, Quickr போன்றவற்றில் டிசைன் டிசைனா நடக்கும் மோசடிகள் பத்தி தெரியுமா… அப்படியான தளங்களில் நடக்கும் 5 மோசடிகள் பத்திதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

OLX, Quikr
OLX, Quikr

ஆர்மி மேன்

OLX தளத்தில் சமீப நாட்களில் ரொம்பவே ஃபேமஸானது ஆர்மி மேன் கிரைம். அதென்ன ஆர்மி மேன் கிரைம்னு யோசிக்கிறீங்களா… சொல்றேன். OLX-ல ஒரு பொருளை விற்கப்போறதா போஸ்ட் போடுறவங்கதான் இந்த ஆர்மி மேன் கிரைம் கும்பலோட மெயின் டார்கெட். அப்படியான பழைய பொருட்கள் விற்கும் நபர்களுக்கு போன் செய்து, தங்களை ஒரு ஆர்மி ஆபிஸர் எனப் பெயரோடு அறிமுகப்படுத்திப்பாங்க.. அடிக்கடி போஸ்டிங் மாத்துவாங்க. அதனால எந்த ஊருக்குப் போறோமோ அங்கேயே செகண்ட் ஹேண்ட்ல பொருட்களை வாங்கி யூஸ் பண்ணிட்டு டிரான்ஸ்பர் பண்றப்ப கிடைச்ச விலைக்கு வித்துட்டுப் போய்டுவோம். புதுசா பொருட்கள்லாம் வாங்க மாட்டோம்’னு நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுறதுல பாதிப்பேர் நம்பிடுவாங்க. அதுக்கப்புறம் உங்ககிட்ட விக்குறதுக்கு வேற பொருட்கள் எதுவும் இருக்கானு கேட்டு நைஸா அந்தப் பொருட்களோடு போட்டோவெல்லாம் வாங்கி, விலையையும் பேசி ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க. இந்தக் கட்டம் வரைக்கும் ஒரு பிரச்னையும் இருக்காது. வினையே இதுக்கு அப்புறம்தான். பணத்தை உங்களுக்கு கூகுள் பே இல்லாட்டி பேடிஎம்-ல போடுறேன்னு சொல்லி UPI ID கேப்பாங்க. அந்த ஐடியை வாங்கிட்டு ஒரு QR Code அனுப்பி ஸ்கேன் பண்ணச் சொல்வாங்க.. ஆனால், அதுல பேமெண்ட் ரிசீவ்ன்றதுக்குப் பதிலா பேமெண்டை நீங்க அவங்களுக்கு அனுப்புற மாதிரி இருக்கும். அப்படி பேமெண்ட் போயிடுச்சுன்னா... உடனே அவங்ககிட்ட இருந்து கால் வரும்..அய்யய்யோ சாரிங்க மாத்தி அனுப்பிட்டேன். தப்பாயிடுச்சு.. இருங்க இன்னோரு கோட் அனுப்புறேன்’னு முந்தின அமவுண்டுக்கு டபுள் அமவுண்ட் மதிப்புல அடுத்தடுத்து வலை விரிப்பாங்க… கொஞ்சம் அசந்தா மூன்று மடங்கு பணம் பறிபோய்டும். இப்படி நார்த் இண்டியால நூத்துக்கணக்கான கேஸ்கள் பதிவாகியிருக்கு மக்களே..

மோசடி
மோசடி

அமுக்கு டுமுக்கு

OLX மோசடிகள்ல இது வேற ரகம். டூவீலர், கார், லேப்டாப்னு கொஞ்சம் விலை கூடுன பொருட்கள்தான் இந்த மாதிரி கேங்கோட டார்கெட். போலியான பெயர்கள்ல OLX-ல அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி காத்திருப்பாங்க. இதைப்பத்தி தெளிவா புரிஞ்சுக்க டெல்லி ஜகத்புரி போலீஸ் ஸ்டேஷன்ல பதிவான ஒரு கேஸை எடுத்துக்கலாம். மாருதி சுசூகி Eeco வண்டியை விக்குறதுக்காக OLX-ல அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருத்தர் போஸ்ட் போட்டிருக்காரு. அவருக்குப் போன் பண்ணி வண்டியை வாங்குற மாதிரியே பேசுன வாரிஸ் என்பவரும், அவரோட கேங் ஆட்களும், `வண்டி புடிச்சுப் போச்சு, டாக்குமெண்ட்ஸெல்லாம் அனுப்பி வைங்க. நாங்க வெரிஃபை பண்ணனும்’னு பேசிருக்காங்க. அப்படி டாக்குமெண்ட்ஸை எல்லாம் வாங்குற அந்த கும்பல், அதே OLX-ல வேறொரு அக்கவுண்ட்ல இருந்து அதே வண்டியை விக்கப்போறதா போஸ்ட் போடுவாங்க.. உண்மையான ஓனர் சொன்னதை விட கூடுதல் விலைக்கு போஸ்ட் போட்டுட்டு, அதை வித்து கூடுதலா வர்ற காசுல லாபம் பாக்குறதுதான் இவங்களோட ஸ்டைல். பல டிரேசிங்குகளுக்கு அப்புறம் டெல்லி சைபர் கிரைம் போலீஸ் டீம் வாரிஸைக் கைது பண்ணினாங்க..

Job Offer

வேலை தேடுபவர்கள்தான் இவங்களோட டார்கெட். நல்லா படிச்சும் வேலையில்லைனு தீவிரமா வேலை தேடுறவங்களைக் குறிவைச்சு பெரிய பெரிய கம்பெனிகள் பேர்ல Job Offer விளம்பரங்களை OLX-ல இந்தக் கும்பல் போடுவாங்க. ஆனால், அந்த விளம்பரங்களை எல்லாம் தங்களோட பெர்சனல் நம்பரைக் குடுத்து பதிவு பண்ணுவாங்க. கம்பெனி பேனர், சம்பளம் இதையெல்லாம் பார்த்து, வலைல விழுறவங்க அவங்களுக்கு கால் பண்ணா, வாட்ஸ் அப்ல ரெஸ்யூம் அனுப்பச் சொல்வாங்க.. அதுக்கப்புறம் வீடியோ கால்லயே இண்டர்வியூனு சம்பிரதாயமா பேசி முடிச்சு, வாட்ஸ் அப்லயே வேலைக்கான ஜாய்னிங் லெட்டரும் வந்து சேரும். அதுக்கப்புறம் அக்கவுண்ட் ஓபனிங், கேட் பாஸ், ஆன்லைன் டிரெய்னிங் லேப்டாப், பாண்ட் அக்ரிமெண்ட்னு பல காரணங்களைச் சொல்லி குறிப்பிட்ட அமவுண்ட் கட்டச் சொல்வாங்க. அதான் வேலை கெடச்சிருச்சேன்னு பணத்தை கட்டிட்டா, அவ்ளோதான் நீங்க ஏமாந்தது பணம் கட்டுனத்துக்குப் பிறகுதான் தெரியவரும்.

மோசடி
மோசடி

GPS Tracker

OLX திருட்டுகள்ல இது தனி ரகம். எங்க கிட்ட யூஸ்டு கார் நல்ல கண்டிஷன்ல இருக்குனு போஸ்ட் போட்டு, சரியான ஆளுக்காகக் காத்திருக்கும் இந்த கேங். சரியான ஆள் கிடைச்சவுடனே நல்ல விலைக்கு காரையும் எந்த பிரச்னையும் இல்லாம வித்துடுவாங்க.. ஆனா, அங்கதான் இருக்கு ட்விஸ்டே. காரை விக்குறதுக்கு முன்னாடியே அதுல GPS Tracker-ஐ செட் பண்ணிட்டு, காருக்கு ஒரு டூப்ளிகேட் சாவியையும் ரெடி பண்ணி வைச்சிடுவாங்க. காரை வாங்குனவர் அதை ஓட்டிட்டு போன பிறகு, அதை டிராக் பண்ணிட்டே இருக்கும் இந்த கேங். அவர் அசந்த நேரம் பார்த்து டூப்ளிகேட் சாவியைப் போட்டு நைஸா லவட்டிட்டுப் போறது இவங்க வழக்கம். ஒரே காரை இப்படி பல பேருக்கு வித்து, அதைத் திருடி மறுபடி அடுத்த ஆளைப் பார்க்குறதுனு இப்படி ஓஹோனு வாழ்க்கை நடத்திட்டு வந்த கேரள கும்பலை பெங்களூருல சமீபத்துல அரெஸ்ட் பண்ணிருக்காங்க.. இதுல விசேஷம் என்னன்னா, இப்படி மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட காரை அந்த கும்பல் OLX-லதான் வாங்கிருக்காங்க. OLX-ல கார் வாங்குறதா இருந்தா கொஞ்சம் சூதானமா பார்த்து வாங்குங்க.

மோசடி
மோசடி

டெஸ்ட் டிரையல்

இது பழைய மெத்தட்தான்.. ஆனா, இன்னமும் நடந்துட்டு இருக்கு அப்டிங்குறதுதான் உண்மை. டூவீலர் ஓனர்கள்தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்காங்க. OLX-ல உங்க பைக்கையோ, காரையோ விக்குறதுக்காக போஸ்ட் போட்டிருக்கவங்கதான் டார்க்கெட். அவங்களை வந்து நேர்ல பாக்குற நபர்கள், வண்டியை ஓட்டிப் பார்க்கணும்னு சொல்லி டெஸ்ட் டிரையல் கேப்பாங்க.. அப்படியே வண்டியை ஓட்டிட்டுப் போறது இந்த கேங்கோட ஸ்டைல். இப்படி டெஸ்ட் டிரையல்களில் டூவீலர்களை இழந்தவர்கள் எத்தனையோ பேர்… சில இடங்களில் கார்களை இழந்தவர்களும் இருக்கிறார்கள். சென்னையில் சமீபத்தில் இப்படி ஒரு புல்லட்டைத் திருட முயன்ற கேரள இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Also Read – `கொக்கி குமார் முதல் ராம்சே வரை…’ – `Thug life’ மொமன்ட்ஸ் ஆஃப் செல்வராகவன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top