தேர்வு

#ExamStress – ல இருக்கீங்களா.. இந்த 5 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!

தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுப்பதற்கும், தோல்வியைத் தழுவுவதற்கும் காரணம், சரியாக படிக்காமல் போவது அல்ல. தன்மீது நம்பிக்கையின்மையும், தேர்வு தொடர்பான பயமும், தேர்வை நினைக்கும்போது வரும் மனஅழுத்தமும் (ExamStress) பதற்றமும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுக்கும் அழுத்தமும் காரணமாக அமைகின்றது. மாணவர்கள் நினைத்தால் ExamStress – ல் இருந்து விடுபட்டு வெளியே வந்து மனஅழுத்தமின்றி தைரியமாக தேர்வை எதிர்கொள்ளலாம். அதற்கான சில வழிகள் இங்கே…

சுவாசப்பயிற்சி

தேர்வு நேரத்தில் மாணவர்கள் விடாமல் படித்துக்கொண்டு இருப்பர். இதனால், மனது எப்போதும் அமைதியாக இருக்காது. இது நிச்சயமாக தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் முடிந்த அளவு குறைந்த நேரமாவது சுவாசப் பயிற்சியினை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால், உங்களது மனம் அமைதியடையும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தேவையில்லாத சிந்தனைகளை அப்புறப்படுத்தும். தேர்வை சமாளிப்பதற்கான மன தைரியம் கிடைக்கும்.

நல்ல சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி

காலை எழுந்ததும் சிறிது நேரம் உடற்பயிற்சிக்கு என ஒதுக்குங்கள். இதனால், உங்களது உடல் எப்போதும் ஆரோக்கியமுடனும் வலுவுடனும் இருக்கும். அதேபோல மூன்று வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக தூங்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் உங்களது உடல் நிச்சயம் பாதிக்கப்படும்.

எதார்த்தமான இலக்குகள்

உங்களால் என்ன முடியுமோ அதை நீங்கள் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு படிப்பதை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடியாதவற்றை அல்லது உங்களது சூழ்நிலைக்கு மீறியவற்றை நீங்கள் செய்ய நினைத்தால் உள்ளதும் பறிபோகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக தேர்வு சமயங்களில் புதிதாக ஒன்றைப் படிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே படித்தவற்றை ரிவிஸன் செய்ய அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

தன்னம்பிக்கை முக்கியம்

எப்போதாவது நிறைய கஷ்டமான விஷயங்களை ஃபேஸ் பண்றோம்னு நீங்க நினைச்சா, கடந்த வந்த பாதைகளை கொஞ்சம் திரும்பி பாருங்க. அதுல நீங்க வாங்கிய பதக்கங்கள், கோப்பைகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ‘இது நம்மளால முடியாது போல இருக்கே’ அப்டினு நினைச்சிடாதீங்க. அதையும் மீறி நீங்க ரொம்பவே டௌனாவோ, பயமாவோ ஃபீல் பண்ணீங்கனா. கொஞ்சம் நேரம் மூச்சு நல்லா இழுத்து விடுங்க. கொஞ்சம் தண்ணி குடிங்க. அப்புறம் நீங்களே கொஞ்சம் ரிலாக்ஸா உணர்வீங்க.

உதவி கேளுங்க

உங்களோட சூழலை சமாளிக்க முடியாத நிலையில் உங்க அப்பா, அம்மா, ஆசிரியர் மற்றும் நண்பர்களிடம் தைரியமா உதவி கேளுங்க. உதவி கேக்குறதை என்னைக்கும் அசிங்கமா நினைக்காதீங்க. உங்களோட மனநிலையை அவங்கக்கிட்ட விளக்கி அதுல இருந்து வெளிய வர உதவி கேளுங்க. அதுவும் முடியாத நிலைல மனநிலை மருத்துவரைக்கூட தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Also Read: Chlorinated water: பலன்கள் என்னென்ன… பாதிப்புகள் என்னென்ன?

1 thought on “#ExamStress – ல இருக்கீங்களா.. இந்த 5 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top