பிரித்வி ராஜ்

மலையாள சினிமாவின் பக்கா ஹீரோ… பிருத்விராஜ் ஜெயித்த கதை!

மலையாள சினிமால பிரித்விராஜ் படங்களையெல்லாம் பார்க்கும்போது, “பக்கா ஹீரோப்பா இவரு” அப்டினு தான் எப்பவும் தோணும். முதல் படத்துல கேமரா முன்னால நிக்கத் தெரியமால் தடுமாறுன மனுஷன் இன்னைக்கு அய்யப்பனும் கோஷியும், ஜன கன மன, ப்ரோ டாடி, டிரைவிங் லைசென்ஸ், குருது இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து மலையாள இண்டஸ்ட்ரீல சூப்பர் ஸ்டாரா வளர்ந்து நிக்கிறாரு. 24 வயசுலயே மோகன்லாலோட 20 வருஷ ரெக்கார்டை பிரேக் பண்ணாரு. அது என்ன? ப்ரித்வி வாழ்க்கைல வில்லன் யாரு தெரியுமா? நிறைய காதல் படங்கள் மூலமா நம்மள ஃபீல் பண்ண வைச்சவரு ப்ரித்வி. அவரோட நிஜ காதலையே ஒரு படமா எடுக்கலாம். அந்த கதையை கேள்விபட்ருக்கீங்களா? ஏன், மலையாள சினிமால இருந்து தமிழ் சினிமாவுக்கு ப்ரித்வி வந்தாரு? ப்ரித்வியை அழ வைச்ச தமிழ் சினிமா என்ன? ரஜினிகாந்த், ப்ரித்விராஜ் நடிப்பைப் பார்த்து பாராட்டுன படம் என்ன? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

கேரளா சினிமாவை ஒரு கலக்கு கலக்குன சுகுமாரன் – மல்லிகா சுகுமாரன், ரெண்டு பேருக்கும் ரெண்டாவதா பிறந்தவர்தான், பிரித்விராஜ். ஆரம்பத்துல சென்னைலதான் ஸ்கூல்லாம் பண்ணியிருக்காரு. அவர் அப்பா சுகுமாரன் நாகர்கோயில்ல இருக்குற ஸ்கார்ட் கிறிஸ்டியன் காலேஜ்லதான் இங்கிலீஷ் புரொஃபஸ்ரா வேலை பார்த்துட்டு இருந்தாரு. அப்புறம், சினிமால வாய்ப்பு வந்ததும் குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் செட்டில் ஆயிட்டாங்க. சின்னவயசுல பிரித்விராஜ் வீட்டுல உள்ளவங்க, பிரித்வி சிவில் சர்வீஸ் எக்ஸாம்லாம் எழுதி அதுல பெரிய ஆளா வருவான்னுதான் நினைச்சுட்டு இருந்துருக்காங்க. ப்ரித்விக்கும் சினிமாதான் கனவு அப்டின்றதுலாம் இல்லை. ஆனால், அவரோட அண்ணன் இந்திரஜித் சினிமால பெரிய ஆளா வருவாருனு வீட்டுல உள்ளவங்க நினைச்சிருக்காங்க. அவரும் இன்னைக்கு சினிமால ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா கலக்கிட்டு இருக்காரு.

இந்திரஜித், பிரித்விராஜ் – ரெண்டு பேருமே கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான். இவங்களுக்கு இப்படி பெயர் வைக்கிறதுக்கு பின்னாடு ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை இருக்கு. என்னனா, அவங்களோட அப்பா சுகுமாரனோட பெயர்ல அவர் ஸ்கூல்லயும் சரி தெரிஞ்சவங்கள்லயும் சரி நிறைய பேர் இருந்தாங்களாம். அவரோட அப்பாவைத் தேடி யாராவது வந்தா, “எந்த சுகுமாரன்?” அப்டின்னு கேப்பாங்களாம். அதுனால, என் பிள்ளைகளோட பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு தேடிக் கண்டுபிடிச்சு இந்த பெயரை வைச்சிருக்காரு. பிருத்விராஜ், இந்திரஜித் ரெண்டு பேரும் படிச்ச ஸ்கூல்லயோ, காலேஜ்லயோ அவங்க பெயர்ல வேற யாருமே இல்லையாம். ரெண்டு பேருக்குமே அவங்க அப்பாதான் ஹீரோ. அவர் அப்பாவைப் பார்த்துதான் எல்லாமே கத்துக்கிட்டார்னு சொல்லலாம். உண்மையை பேசணும்னு சொல்லிக் கொடுத்தது அப்பாதான். நிறைய புத்தகங்கள் பிருத்விராஜ் வாசிப்பாரு. அந்த உலகத்துக்கு அவரைக் கூட்டிட்டு வந்தது அவரோட அப்பாதான். எப்படி வாழ்க்கைல இருக்கணும். எப்படி பேசணும். இப்படி சின்ன சின்ன விஷயங்களைக்கூட அப்பாக்கிட்ட இருந்துதான் அவர் கத்துக்கிட்டாரு.

பிருத்விராஜ் பத்தாவது படிக்கும்போது திடீர்னு ஒருநாள் அவரோட அப்பா இறந்துட்டாரு. என்னப் பண்றதுனு தெரியாமல் திணறும்போது அவங்களை கையப் புடிச்சி இவ்வளவு பெரிய லெவலுக்கு கூட்டிட்டு வந்தது அவரோட அம்மாதான். பத்தாவது படிக்கும்போது நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டீஸை அவங்க அம்மா பிருத்விக்குய் கொடுத்துருக்காங்க. சுயமா முடிவுகளை எடுக்க கத்துக்கொடுத்துருக்காங்க. பழைய இண்டர்வியூஸ்லாம் பார்த்தா தெரியும் பிருத்வி அவ்வளவு தெளிவா விஷயங்களைப் பேசுறதுக்கு சின்ன வயசுல அவரு அவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டீஸ் எடுத்துக்கிட்டதுதான் காரணமா இருக்கும். இப்படியே ஸ்கூல் முடிச்சுட்டு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க கிளம்பிட்டாரு. அங்க படிச்சிட்டு திரும்ப இந்தியா வந்து ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சிட்டு சினிமாக்குள்ள வரணும்னுதான் நினைச்சிருக்காரு. அவர் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு நாள் டைரக்டர் ஃபாஸில் அவரை லுக் டெஸ்டுக்காக கூப்பிட்ருக்காரு. அவர் வந்து லுக் டெஸ்ட்லாம் எடுத்து பார்த்துட்டு, “நான் ஒரு ரொமான்ஸ் படம் பண்ணப்போறேன். நீ அதுக்கு செட் ஆக மாட்ட. உனக்கு ஆக்‌ஷன் படம்தான் செட் ஆகும்”னு சொல்லியிருக்காரு. அந்த ஆடிஷன்ல அவர்கூட அசினும் கலந்துக்கிட்டாங்க. அப்புறம் அந்தப் படத்துல நடிச்சது நம்ம ஃபகத் ஃபாஸில். அது தான் அவருக்கு முதல் படம். அந்தப் படம் பெயர், ‘கையெத்தும் தூரத்து’.

டைரக்டர் ஃபாஸில், டைரக்டர் ரஞ்சித்கிட்ட பிருத்வியை இன்ட்ரொடியூஸ் பண்ணி வைச்சிருக்காரு. அப்போ அவர் டைரக்ட் பண்ணப்போற ‘நந்தனம்’ படத்துக்கு செலக்ட் ஆயிட்டாரு. இதுதான் பிரித்வியோட ஃபஸ்ட் படம். செட்ல கேமரா முன்னாடி எப்படி நிக்கணும், எப்படி பேசணும்னு எல்லாமே அவருக்கு சொல்லிக்கொடுத்து இன்னைக்கு வருக்கு பிருத்விக்கு குருவா இருக்குறது டைரக்டர் ரஞ்சித்தான். ஆனால், ஃபஸ்ட் ரிலீஸ் ஆன படம், ‘நக்‌ஷத்திரக்கண்ணுள்ள ராஜகுமாரன் அவனுண்டொரு ராஜகுமாரி’ன்ற படம்தான்.  அடுத்தடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்து மலையாள சினிமால முன்னணி ஹீரோவா இருந்தாரு. ஒரு வருஷத்துக்கு 4 படம், 5 படம்னு பண்ணி சினிமால எல்லா துறை பத்தியும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கத் தொடங்கினாரு. 19 வயசுல இருந்து 24 வயசுக்குள்ள 50 படங்கள் நடிச்சிட்டாரு. அதுமட்டுமில்ல, சின்ன வயசுல கேரளா ஸ்டேட் ஃபிலிம் அவார்ட் வாங்குனவரு மோகன்லால். அதாவது 26 வயசுல. அந்த சாதனையை 20 வருஷம் யாருமே முறியடிக்கலை. ஆனால், பிரித்விராஜ் அந்த ரெக்கார்டை 24 வயசுல அவார்ட் வாங்கி பிரேக் பண்ணாரு. பிருத்விராஜ் வேறலெவல் மோகன்லால் ஃபேன். அவர் பண்ண சாதனையை அவர் ஃபேனா இருந்து முறியடிக்கிறது செம கெத்தான ஃபீல்தான!

என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் இப்படி நிறைய காதல் படங்களை தந்து நம்மள உருக வைச்சவரு, பிருத்வி. அவரோட லவ் ஸ்டோரியும் செமயா இருக்கும். தன்னோட ஆரம்பலால இண்டர்வியூ எல்லாத்துலயுமே பிரித்வி சொல்ற விஷயம், “என்னோட ஃபஸ்ட் லவ் எப்பவுமே சினிமாதான். என்னை கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கு இந்த விஷயம் உறுத்தலா இருக்கும்”னு சொல்லுவாரு. பிருத்வியோட மனைவி என்.டி.டி.வில ரிப்போர்ட்டரா வேலை பார்த்துட்டு இருந்துருக்காங்க. அப்போ ஒரு இண்டர்வியூக்காக பிரித்விராஜ்க்கு ஃபோன் பண்ணியிருக்காங்க. அப்புறம் அவர் ஃபோன் பண்ணியிருக்காரு. அப்போ, சுப்ரியா “நான் டான் படத்துல இருக்கேன். முடிஞ்சதும் ஃபோன் பண்றேன்”னு சொல்லியிருக்காங்க. அன்னைக்கு எதேர்ச்சையா பிருத்வியும் டான் படத்தை பார்த்துருக்காரு. அதைப் பத்தி ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க். புத்தகங்கள் பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு பேரோட டேஸ்டும் ஒரேமாதிரியா இருந்ததும் நல்ல ஃப்ரெண்டா மாறியிருக்காங்க. அப்புறம் ஒரு புக் படிச்சிட்டு பாம்பே பார்க்கணும்னு ஆசை வந்துருக்கு. சுப்ரியா பாம்பேல இருந்ததும், சேர்ந்து சுத்தியிருக்காங்க. அப்போதான் காதல்ல விழுந்துருக்காங்க. அப்புறம் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

தமிழ் சினிமாவுக்கு பிரித்வி நடிக்க வந்ததும் ஒரு ஆக்ஸிடண்ட்னு சொல்லலாம். ஏன்னா, 2005 காலகட்டத்துல தொடர்ந்து மூணு சினிமாக்கள் இவருக்கு ட்ராப் ஆயிருக்கு. ஏன்னு சொல்லாமலேயே அந்தப் படத்தை ட்ராப் பண்ணியிருக்காங்க. ஒரு படத்தோட குழு மட்டும், அந்தப் படத்துல மத்த ஆக்டர்ஸ் உங்க்கூட நடிக்க விரும்பலை. அதனால, படம் நடக்காதுனு சொல்லியிருக்காங்க. அப்போ தமிழ்ல கனா கண்டேன் ஆஃபர் வந்துருக்கு. அதுல வில்லனா நடிச்சிருப்பாரு. அப்புறம் தமிழ்ல அவரை எல்லார்கிட்டடும் கொண்டுபோய் சேர்த்த, இன்னைக்கும் ஃபீல்குட்டா ஃபீல் பண்ண வைக்கிற படம் மொழி. இந்தப் படத்துல நடிச்சாரு. இந்தப் படத்தை ரஜினிகாந்த் பார்த்துட்டு பிரித்விராஜ்க்கு ஃபோன் பண்ணி முக்கால் மணி நேரம் பேசு நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டியிருக்காரு. அப்புறம், மலையாள சினிமாவால பிரித்வியை தவிர்க்க முடியலை தொடர்ந்து பல படங்கள் அதுக்கப்புறம் வர ஆரம்பிச்சிருக்கு. புரொடியூஸராவும் அவதாரம் எடுத்து பெஸ்ட் படங்களை தயாரிக்கவும் தொடங்குனாரு. தமிழ் மார்க்கெட்டைப் பார்த்து ரொம்பவே அசந்து போற ஆள் பிருத்விராஜ். அந்த மாதிரி மலையாள சினிமாவையும் மாத்தனும்னு நினைப்பாரு. அதுக்காக அவர் எடுத்த முயற்சிதான் லூசிஃபர். அவர் நினைச்ச மாதிரி மலையாள சினிமால புதிய பல ரெக்கார்டை அந்த படம் பண்ணிச்சு.

தமிழ் சினிமால அசுரன் படத்துல வர்ற கிளைமாக்ஸ் பார்த்து பிருத்விராஜ் அழுதாராம். இப்படி தமிழ் சினிமா மேலயும் அதிக காதல் அவருக்கு இருக்கு. மணிரத்னம் படத்துல அவர் நடிச்சதை நினைச்சு, ஒரு நடிகனா ரொம்பவே பெருமையும் படுவாரு. வாழ்க்கைல பொதுவா பசங்களுக்கு வில்லன் அப்பாதான். ஆனால், இவரோட வில்லன் சோஷியல் மீடியா. ஏகப்பட்ட கான்ட்ரோவெர்ஸில சிக்கியிருக்காரு. அதுக்குக் காரணம் மனசுல பட்டதை உடனே வெளிப்படையா பேசுறதுதான். ரஞ்சித்லாம் சொல்லுவாராம், “இண்டர்வியூல பார்த்து பேசு” அப்டினு. அதுக்கு இவர் சொல்ற பதில் என்னனா, “ என்னால சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் கட்டுப்படுத்த முடியுது. ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலை” அப்டின்றது தான். சும்மா கூகுள்ல பிரித்விராஜ் கான்ட்ரோவெர்ஸினு சர்ச் பண்ணாலே அவ்வளவு வரும். மனுஷன் அவ்வளவு சம்பவம் பண்ணியிருக்காரு. ப்ருத்விராஜை இலுமினாட்டினுலாம் சொல்லுவாங்க. அவரும் அதுக்கு எந்த ரிப்ளையும் கொடுக்க மாட்டாரு. ஒருவேளை பிருத்வி ஹீரோவா ஆகலை அப்டினா டிராவலரா இருந்துருப்பேன்னு சொல்லுவாரு. இன்னைக்கும் நிறைய இடங்களுக்கு மனுஷன் சுத்துட்டுதான் இருக்காரு.

புதுசா நிறைய விஷயங்களை ட்ரை பண்றதுல எப்பவும் பிரித்வி இண்ட்ரஸ்டா இருப்பாரு. அவரோட படங்களை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் புரியும். போலீஸ், வில்லன், க்ரே ஷேட் கேரக்டர், வயசான கேரக்டர்னு மேக்ஸிமம் எல்லாமே ட்ரை பண்ணிட்டாரு. டைரக்டாராவும் புரொடியூஸராவும் தன்னை நிரூபிச்சிட்டாரு. ஆனால், இன்னும் சினிமால எதாவது பண்ணனும்னு வெறித்தனமா வொர்க் பண்ணிட்டு இருக்காரு. இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு நிறைய ஹிட்களை கொடுத்து டைரக்டர்ஸ் ஆக்டரா மனுஷன் இருக்காரு.

பிருத்வி நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: Madras Day 2022: சென்னை தினம் ஏன் ஆகஸ்ட் 22-ல் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

1 thought on “மலையாள சினிமாவின் பக்கா ஹீரோ… பிருத்விராஜ் ஜெயித்த கதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top