இன்னைக்கு பேயை வச்சுக்கிட்டு வர்ற படங்களை தியேட்டர்ல பார்க்குறப்போ, படத்துக்கு போனா பேயைப் பார்த்து சிரிச்சுகிட்டு வர்றோம். ஆனா, அன்னைக்கு டிவியில் பார்த்தாலே பயந்து நடுங்கினோம். ‘இன்னைக்கு என்ன பேய் படங்கள் எடுக்கிறீங்க, நாங்க பார்த்தோம் பாருங்க…’ என 90’ஸ் கிட்ஸ் காலரைத் தூக்கிவிட்டு சொல்வதற்குப் பல பேய் படங்கள் இருக்கிறது. அப்படி 90’ஸ் கிட்ஸ அலறவிட்ட படங்களைத்தான் இந்த கட்டுரையில பார்க்கப்போகிறோம்!
‘பயமா எனக்கா… cha cha’ என்று கெத்தாக சொல்லி பெட்ஷீட்க்குள் ஒளிந்து பார்த்த 6 படங்களை நாம கதையாவே பார்க்கலாமா?
13ஆம் நம்பர் வீடு
ஓபன் பண்ணா பயங்கரமா மழை .. ஒரு பெரிய காட்டு பங்களா.. பங்களாவே terror-ஆ இருக்கும். அதுக்குள்ள ஒருத்தரு அந்த terror பங்களாவை வரைஞ்சுகிட்டு இருப்பாரு.. அப்போ நம்ம பேய் ஒரு அழகான பொண்ணு மாதிரி entry கொடுக்கும். அப்பறம் அவரு செத்துருவாரு. கட் பண்ணா இந்த Hollywood படத்துல பேய் வீடுனு தெரிஞ்சும் ஒரு குடும்பம் வரும்ல But இங்க பேய் வீடுனு தெரியாம ஒரு பெரிய குடும்பம் வந்து சிக்கிருப்பாங்க. இந்த படத்துல Terror சீன் என்னான்னா ஒரு போட்டோ இருக்கும், அது கலர் மாறும் பின்னாடி ஒரு பயங்கரமான மியூசிக் கேட்கும், அதுவே லைட்டா பகீர்னு இருக்கும். அந்த போட்டோக்குள்ள இருக்குற கதவுக்குள்ள ஒரு சீக்ரெட் பெரிய வீடு இருக்கும். பார்க்கவே கண்ணைக் கட்டும். எவ்வளவு படங்கள் வந்தாலும் பேய் படம்னு சொன்னதும் டக்குனு முதல்ல இதுதான் நியாபகத்துக்கு வரும்.
ஜமீன் கோட்டை
அய்யயோ அந்த ஊரா?.. அது ரொம்ப Terror-ஆன ஊர் ஆச்சேனு பயங்கர Build-up ஓட ஆரம்பிக்கும் படம். ஊருக்குள்ள ஒரு அண்ணன், தங்கச்சி – அவங்க பண்ற லூட்டி ஒரு பக்கம், சீரியஸான அப்பா – பொண்ணு காம்போ ஒரு பக்கம்னு போய்ட்டே இருக்கும்.. அதுலையும் ஒரு வில்லி பாட்டி வரும் பாருங்க.. மன்னா..மன்னானு அய்யோ செம்ம டெரருதான். எப்பவுமே இளமையா இருக்கனும்னு அசைப்படும் ராஜா – அதை எதிர்க்கும் தளபதி – தளபதிக்காக காத்திருக்கும் லவ்வர்னு, பூர்வ ஜென்மம் and இந்த ஜென்மத்து Continuationஆ போகும் கதை. அதுவும் ஒரு சீன்ல ஒரு டாக்டர் அம்மா கருப்பு கூலிங் கிளாஸ் போட்டுட்டு கார் ஓட்டிட்டு வருவாங்க. கண்ணாடிய கழத்தி பார்த்தா கண்ணே இருக்காது. அப்போல்லாம் அந்த சீன் பார்த்து 90’ஸ் கிட்ஸ் தெரிச்ச சம்பவங்கள் அதிகம். ஹீரோ போடுற மொக்கைகளை விட்டுட்டு படத்தை பார்த்தா நல்ல த்ரில்லா இருக்கும்!
யார்
பூமிக்கு அருகாமையில மீதம் இருக்குற 8 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டுல அமையும் ஒரு அமானுஷ்ய நேரத்தில் ஒரு அதிசயம் நடக்குது. இந்த பக்கம் ஹாஸ்பிட்டல்ல ஒரு குழந்தை பொறக்கும், பொறக்கும் போது அதன் அம்மா செத்துருவாங்க..அப்பறம் என்ன அந்த ஹாஸ்பிட்டல்ல இன்னோருத்தங்களுக்கு குழந்தை செத்துடும். நீங்க நினைக்கிறது சரிதான். இவங்க அந்த குழந்தைய எடுத்துட்டுப் போயிடுவாங்க. எல்லாம் நல்லாதான் போய்ட்டு இருக்கும். அப்பறம் தான் ட்விஸ்டே இருக்கும். பார்த்தா அது சாதாரண குழந்தை இல்லை பாஸ். சாத்தான் புள்ள சார் அது! அது ஒருத்தர் ஒருத்தரா போட்டுத் தள்ளிட்டே வரும். நடுவுல நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன் அண்ட் நளினி, நல்ல சக்தியா என்ட்ரி கொடுத்து உலகத்தைக் காப்பாத்துவாங்க. எல்லாம் ஓகே. ஆனா ஒரு பேய் பொம்மை வரும் பாருங்க… ஷப்பா ஒரு 2 நிமிசம் வந்தாலும் கொஞ்சம் பயங்கரமாதான் இருக்கும்.
Talking About பேய் பொம்மை, இன்னொரு டெரர் படம் இருக்கும்.. அந்தப் படம் பார்த்து அப்பறம் நான்லாம் பொம்மை வாங்குறதையே விட்டுட்டேனா பார்த்துக்க.
வா அருகில் வா
முதல்ல பார்க்கும் போது நார்மல் லவ் ஸ்டோரி நினைக்கும்போது, திடீர்னு ஒரு பொம்மை வரும். க்யூட் பொம்மையா இருக்கும்னு நினைச்சா பேய் பொம்மை அது. இந்தப் படத்தைப் பார்த்து படம் பார்த்து முடிச்சுட்டு வீட்டுல இருந்த பொம்மை எல்லாம் தூக்கி போட்ட குழந்தைகள் அதிகம்னே சொல்லலாம்.
உருவம்
ஜாலி ட்ரிப்… காலி ட்ரிப் ஆகுற கதை இது. குடும்ப சொத்து தகராரு, பில்லி சூனியம் ஏவி விட்டு காலி பண்றாங்க. எல்லாம் காலி, ஜோல்னா சாமியார் ஆர்.பி. விஷ்வம் அவரை பார்த்தலே டெரர்ரா இருக்கும். இப்போக்கூட youtubeல ரொம்ப மொக்க குவாலிட்டில அந்தப் படம் இருக்கும். சில தேவையில்லாத ஆணிகளையும் பேயின் ரொமான்ஸ்களை avoid பண்ணிருக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம்
தி ஓமென் படத்தின் தமிழ் ரீமேக் இது. யோச்சிச்சு பார்த்தா அதே ‘யார்’ படத்தின் கதைதான். அதுல பெரிய பையன் இதுல க்யூட் குட்டி சாத்தான். ஒரே ஒரு வித்தியாசம் அதுல சாத்தான் செத்துடும். இதுல சாத்தான் தப்பிச்சிடும். வேலைக்காரி டெரர் லுக், அதுவும் அந்த கருப்பு நாய், போட்டோல cross – Subtle ஆன டெரர் படம் இது. இது இல்லாது ராசாத்தி வரும் நாள், மை டியர் லிசா உள்ளிட்ட இன்னும் சில டெரர் படங்கள் இருக்கு. இவங்கலாம் பேய் பட வகையில டெரர்னா..
இன்னும் சிலப் படங்கள் இருக்கு. பேய் படம் கிடையாது, ஆனா வேற ரகம். நாளைய மனிதன், அதிசய மனிதன் மாதிரி மத்த படத்துல பேய்தான் பயம் காட்டும்… இந்த படங்கள்ல மனுஷனே பயம் காட்டுவான் சாமி!
90ஸ் கிட்ஸ அலறவிட்ட சில முக்கியமான படங்களை பார்த்தோம்… போனவாரம் கூட இந்த படத்தை எல்லாம் பார்த்தேன் – இதுல உங்களை ரொம்ப பயப்பட வெச்ச படம் எதுனு கமெண்டல சொல்லுங்க! அப்படியே நான் ஏதா படம் மிஸ் பண்ணியிருந்தா அதையும் சொல்லுங்க!
பயமா இருந்தா தூங்குறத்துக்கு முன்னாடி விபூதி அடிச்சிட்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து, தூங்குங்க.
Also Read : மலையாள பர்னிச்சர்களை உடைத்த ரீமேக்குகள்!