தமிழ்நாட்ல தமிழ் பாரம்பர்ய கலைகள் நாளுக்கு நாள் மறைஞ்சுக்கிட்டே வருது. அந்த கலைகளை அழிவுல இருந்து மீட்க தமிழ் கலை டாட் காம் (tamilkalai.com) செயலி ஆரம்பிச்சிருக்காங்க. இந்த செயலியில் உலகம் முழுக்க உள்ள கலைஞர்கள் ஒருங்கிணைஞ்சு இருக்காங்க. இந்த கலைஞர்களையும், கலைகளையும் நம் விழாக்களுக்கு முன்பதிவு செய்துக்கலாம். குறைந்த செலவில் உலகின் எந்த மூலையில் இருந்தும் புக் பண்ணிக்கலாம். இதுமூலமா கலைஞர்களோட வாழ்வாதரம் நிலைக்கும், அதே நேரத்துல கலைகளும் வளரும்.
இந்த தமிழ் கலை டாட் காம் (tamilkalai.com) செயலி அறிமுக விழா சென்னையில நேத்து நடந்துச்சு. இந்த நிகழ்ச்சியில முதற்கட்டமா பறை இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா கலந்துகிட்ட நடிகர் ஜீவா பறை இசை கேட்டு மேடைக்குபோய், அவங்க கூடவே பறை இசையை வாசிச்சு டான்ஸ் ஆடினார். அதுக்குப் பின்னால மேடையில பேசின ஜீவா, “கலைஞர்களுக்கு சாதி, மதம் இல்லைனு சொல்வாங்க. ஜிப்ஸி படத்துல நடிச்சப்போ இந்தியா முழுக்க பயணம் செய்யுற வாய்ப்பு கிடைச்சது. அந்த பயணத்துல எல்லா நாட்டுப்புற கலைஞர்களையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. இந்தியாவுல மொழிகள் இருக்கலாம். ஆனா கலைக்கு மட்டும்தான் மொழிகள் இல்லை. நாளுக்கு நாள் அரிதாகி வர்ற கலைகளை கொண்டாடி எடுத்துக்கிட்டு போக தமிழ் கலை டாட்காம் செயலி அடுத்த கட்டமா இருக்கும்னு நம்புறேன். இதுல முன்பதிவு செய்ற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.
டிஷ்யூம் படத்துல ‘நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ங்குற மாதிரி ஒரு வசனம் வரும். கலைஞர்களுக்குரிய கரகோஷத்தை கொடுக்கணும். இது மாதிரியான தமிழ்கலைகளை அடுத்த இடத்துக்கு இடத்துக்கு கொண்டு போகணும்”னு சொன்னவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜீவா ஒரு கட்டத்துல கோபமாகி பேச ஆரம்பிச்சிட்டார். அதுக்கப்புறம் சுதாரிச்சுக்கிட்ட ஜீவா தன்னோட கலகலப்பான பாணியில முடிச்சு வைச்சிட்டார்.
Also Read – கண்ணதாசன் காரைக்குடி, குடி வாழ்த்து.. மிஷ்கின் மியூசிக் டைரக்டர்ஸின் தரமான பாடல்கள்!