ஃபேமஸான சிட்னி டெஸ்ட் விஹாரி – அஸ்வின் பாட்னர்ஷிப் அப்போ, வேகமா பிட்சுக்குள்ள மெசேஜ் சொல்ல ஓடிவந்த ஷ்ரதுல் தாக்குர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா… அதுக்கு அஸ்வினோட கொடுத்த ரியாக்ஷன்… உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சிலரை சொல்லிவைச்சு தூக்குறதுல அஸ்வின் கில்லாடி… அந்த லிஸ்ட்ல டாப்ல இருக்க முக்கியமான 3 பேர்.. ஆஃப் ஸ்பின்னரா மட்டுமில்லை.. ஒரு பேட்ஸ்மேனாவும் ரெட்பால் கிரிக்கெட்ல 5 சதங்களும் அடிச்சிருக்காரு.. பேட்ஸ்மேன் அஸ்வின் சம்பவங்கள்னு.. தரமான 3 சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
அஸ்வின் சம்பவங்கள் – 2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபி சிட்னி டெஸ்ட்
2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபி மூணாவது மேட்ச்ல ஜெயிக்கணும்ங்குற வேகத்துல இருக்க ஆஸ்திரேலியா டீம். சும்மாவே ஃபுல்லி பண்ணி எதிர் டீமை கடுப்பேத்துறதுல கில்லியான ஆஸ்திரேலியா டீமுக்கு எதிரா, அவங்க ஸ்ட்ரேட்டஜியை வைச்சே திரும்ப அடிக்குறார். கடைசி நாள்ல பெரிய பாட்னர்ஷிப் ஃபில்டப் பண்ணிட்டு இருக்காங்க விஹாரியும் அஸ்வினும். அப்போ கேப்டன் டிம் பெய்ன் மெதுவா அஸ்வின்கிட்ட வம்பிழுக்க ஆரம்பிக்குறாரு… `நீங்க காப்பா கிரவுண்டுக்கு எப்ப வருவீங்கனு காத்திட்டு இருக்கேன் அஷ்’னு சொல்லவே, உடனே நம்ம ஆளு, `நீங்க எப்போ இந்தியா வருவீங்கனு நாங்க காத்திட்டு இருக்க மாதிரிதானே… அங்க வந்தா அதுதான் உன்னோட லாஸ்ட் சீரிஸா இருக்கும்’னு பதிலடி கொடுப்பாரு. அவரும் விடாம சீண்டிக்கிட்டே இருப்பாரு… இவரும் பதிலடி கொடுக்கனு கொஞ்ச நேரம் மேட்சே நின்னுடும்… `நீ எப்போ நிறுத்துறியோ அதுவரை வெயிட் பண்றேன்’னு அஸ்வின் நிப்பாட்டிடுவாரு.. உடனே லியோன் மேட்சை நிறுத்திருக்காங்களானு கேக்க அதுக்கு இவரோ, `நான் இல்ல பாஸ் உங்க ஆளுதான் பேசிட்டு இருக்காரு’னு சொல்லி பல்ப் கொடுத்துவிடுவாரு. மேட்சுக்கு இடைல கிரவுண்டுக்குள்ள வந்த ஷ்ரதுல் தாக்குர் அஸ்வின் கிட்ட, அங்க நிறைய சொல்றாங்க.. ஆனா, நான் எதுவுமே சொல்லல.. நீங்க நல்லா விளையாடுறீங்க.. அப்படியே விளையாடுங்கனு சொன்னாராம். அதேமாதிரி மேட்சுக்கு அப்புறம் கேட்டப்போ, இதெல்லாம் சொன்னாங்க.. ஆனால், நான் எதுவுமே சொல்லல பார்த்தீங்களானும் சொல்லிருக்கார். அடேய் இதுலலாம் என்னடா பெருமைனு இவர் நினைச்சிருக்காரு. அதுக்கப்புறம் காப்பால இந்தியா ஜெயிச்சு அங்க தோத்ததே இல்லைங்குற ஆஸியோட 25 வருஷத்துக்கு மேலான ரெக்கார்டை உடைச்சது தனிக்கதை.
சொல்லிவைச்சு அடிக்குற மாஸ்டர்
ரெட்பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு சில பேட்ஸ்மேன்களை சொல்லிவைச்சு தூக்குறது அஸ்வினோட ஸ்டைல். அதுவும் லெஃப்ட் ஹேண்டர்ஸ்க்கு இவரோட பௌலிங் சிம்ம சொப்பனமாவே இருக்கும். டெஸ்ட் கரியர்ல இவர் அவுட் பண்ண டாப் 12 பேட்ஸ்மேன் லிஸ்ட் எடுத்துப் பார்த்தோம்னா, அதுல 10 பேர் லெஃப்ட் ஹேண்டர்ஸ்தான். லிஸ்ட்ல டாப்ல இருக்கது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 24 இன்னிங்ஸ்கள்ல 11 முறை அஸ்வின் பால்லதான் அவுட்டாகியிருக்கார். அடுத்த இடத்துல இருக்க டேவிட் வார்னர், 30 இன்னிங்ஸ்கள்ல 11 முறையும், அலெஸ்டர் குக், 9 முறையும் அவுட்டாகியிருக்காங்க. நாலாவது இடத்துல இருக்கவர் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித். அஸ்வினோட பௌலிங்கை எதிர்க்கொள்ள அஸ்வின் மாதிரியே பௌலிங் ஆக்ஷன் இருக்க மத்தியப்பிரதேச பௌலர் மகேஷோட பௌலிங்கை எதிர்த்து விளையாடிலாம் பிராக்டீஸ் பண்ணார் ஸ்மித். ஆனால், சொல்லி வைச்சது மாதிரி இரண்டாவது டெஸ்ட்ல இரண்டு இன்னிங்ஸ்லயும் வெளியேத்தி மாஸ் காட்டுனார் அஸ்வின். டெஸ்ட் மேட்ச்கள்ல ஸ்மித் ஆட வந்துட்டாலே ஆஃப் ஸ்லிப், லெக் ஸ்லிப், கீப்பர்னு மூணே பிளேஸ்ல வலையை விரிச்சு வைச்சுட்டு அஸ்வினை பவுலிங் பண்ண கூப்டுறது இந்திய கேப்டன்கள் ஆட்டோமெட்டிகா செய்ற ஒரு வேலை. அது தோனி, விராட் கோலி தொடங்கி இப்போ ரோஹித் ஷர்மா வரைக்குமே தொடருது. அஸ்வின் பௌலிங்ல 8 முறைல 6 முறை ஸ்மித் கேட்ச் கொடுத்துதான் வெளியேறியிருக்கார். ஸ்மித்துக்கு கேட்ச்னா, வார்னருக்கு எல்.பி.டபிள்யூ. அவரோட ஃபுட் வொர்க்கு ஏத்தமாதிரி இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணுவார் அஸ்வின்.
பேட்ஸ்மேன் அஸ்வின்
வேர்ல்ட் கிளாஸ் ஸ்பின்னர் மட்டுமில்லீங்க… டெஸ்ட் கிரிக்கெட்ல அவரோட ஸ்டேட்ஸ்லாம் எடுத்துப் பார்த்தா எந்த அளவுக்கு ஒரு பேட்ஸ்மேனாவும் பெர்ஃபார்ம் பண்ணிருக்காருனு நமக்குத் தெரியும். இதுவரைக்கும் டெஸ்ட்ல 5 செஞ்சுரி பதிவு பண்ணி வைச்சிருக்கார். குறிப்பா சென்னை சேப்பாக்கம்ல அவர் அடிச்ச 106 ரன் இன்னிங்ஸை மெஜஸ்டிக்கான இன்னிங்ஸ்னே சொல்லலாம். இங்கிலாந்துக்கு எதிரான அந்த மேட்ச்ல முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறிட்டு இருந்தப்ப, சதமடிச்சு ஒரு ஹோப் கொடுத்தாரு. 2020-21 சிட்னி மேட்ச் டிரா, மிர்பூர் மேஜிக்னு பல உதாரணங்களை சொல்லலாம். இந்த ஆஸ்திரேலியா சீரிஸ்லயும் இந்தியா 137/7-னு தடுமாறிட்டு இருந்தப்போ, அக்ஸர் படேல் கூட இணைஞ்சு பண்ண சம்பவம்தான் மேட்சை நம்ம பக்கம் திருப்புச்சு. இன்னோரு இண்ட்ரஸ்டிங் ஃபேக்ட் சொல்லவா… டெஸ்ட் கிரிக்கெட்ல தோனி, வாசிம் ஜாஃபர் போன்றவர்களை ஒரு செஞ்சுரிதான் அவர் கம்மியா அடிச்சிருக்கார். டெஸ்ட்ல அவரோட பேட்டிங் ஆவரேஜூம் 27-க்கு மேல.. இப்படி ஆல்ரவுண்டராவும் கலக்கிட்டு இருக்கார் அஸ்வின்.
Also Read – ஆக்ஷன்லாம் சும்மா தெறிக்கும்.. தமிழர்களின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்கள்!
இதுதவிர சொந்தமா யூடியூப் சேனல் வைச்சிருக்க இவர், இந்தியாவின் ஸ்பின்னை எப்படி ஆடணும்னு ஒரு தலைப்புல வீடியோ போட்டு மாஸ் காட்டியிருக்கார். ஐபிஎல், வுமன்ஸ் ஐபிஎல், டி.என்.பி.எல் தொடங்கி இன்டர்நேஷனல் மேட்ச்கள் வரைக்கும் அனலைஸ் மட்டுமில்ல பிஹைண்ட் த சீன்ஸ்ல நடந்த விவகாரங்கள் வரைக்கும் இவர் போடுற Around the world of Cricket, let me tell a kutty story சீரிஸ் வீடியோக்கள்ல அவர் பேசுற விஷயங்கள் எல்லாம் வைரல் ரகம். அந்த வீடியோக்களுக்கு வைக்குற டைட்டில் தொடங்கி அவர் பேசுற கண்டெண்ட்டுகளுமே தக்லைஃப் மேக்ஸ்தான்.
அஸ்வின் பண்ண சம்பவங்கள் எத்தனையோ இருக்கு.. அதுல உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.