காதல் பிரேக் அப் ஆன பிறகும் ‘நாங்க நண்பர்களா இன்னும் இருக்கோம்’னு பலர் சொல்லுவாங்க. உண்மையிலேயே இது சாத்தியமா அப்டினு கேட்டா… சாத்தியம்தான். ஆனால், கடைசி வரை சில விஷயங்களை அந்த ரிலேஷன்ஷிப்பில் பின்பற்ற வேண்டும். பெரும்பாலான நபர்கள் பிரேக் அப் – க்கு பிறகு நண்பர்களாக இருக்கும் ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணுங்கனு சொல்லுவாங்க. அதையும் கடந்து அந்த ரிலேஷன்ஷிப்பில் ஸ்ட்ராங்காக இருக்க சில வழிகள் இங்கே…
நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்!
உங்களது காதலருடன் பிரேக் அப் நிகழ்ந்த பிறகு உடனடியாக உங்களால் நண்பராக மாற முடியாது. அதனால், சிறிது காலம் உங்களுக்கு இடையே நேரம் ஒதுக்கிக்கொள்ளலாம். ஏனெனில், உங்களது பிரேக் அப் உங்களுக்குள் நிச்சயம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். முதலில் அதிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும். உங்களது மகிழ்ச்சியான தருணங்களை அந்த பிரேக் அப் நாள்கள் உங்களது நினைவுக்கு கொண்டு வந்து உங்களை வருத்தமடைய வைக்கும். அந்த விஷயங்களைக் கடந்து நார்மலைஸ் ஆக வேண்டும். உங்களது அனைத்து விதமான உணர்வுகளும் நார்மலைஸ் ஆன பிறகு… பின்னர், உங்கள் காதலருடன் ஒரு நட்புறவை உருவாக்க முயற்சி செய்யலாம்.
ஃப்ளர்ட் பண்ணாதீங்க!
உங்களது காதலருடன் உங்களுக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். உங்கள் காதல் என்கிற ரிலேஷன்ஷிப்பைவிட்டு நகர்ந்து அடுத்த கட்டத்துக்கு நீங்கள் அந்த சூழலில் சென்றிருப்பீர்கள். எனினும், உங்களது காதல் உணர்வு வெளிப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் நண்பர்கள் என்றும், வாழ்க்கையில் தனித்தனியாக பயணிப்பது என்றும் முடிவெடுத்து அதில் உறுதியாக இருக்கும்போது அத்தகைய உணர்வு வந்து உங்களது காதலருடன் ஃப்ளர்ட் பண்ணுவது இருவருக்கும் நல்லதல்ல. எனவே, உங்கள் உறவிற்கான சரியான எல்லைகளை நீங்கள் வகுத்து அதற்குள் நிற்க வேண்டும்.
மதிப்பளிக்க வேண்டும்!
காதல் ரிலேஷன்ஷிப்பிலும் மதிப்பு என்பது முக்கியமானது. ஆனால், பிரேக் அப்பிற்கு பின்னான நட்பில் இதனை அதிக சென்ஸிட்டியுடன் கையாள வேண்டும். உங்களது மற்ற ஃபார்மலான நண்பர்களைப் போல அவர்களையும் நடத்த வேண்டும். உங்களுக்கு முன்னர் போல மெசேஜ் அனுப்புவர், உங்களை ஃபோனில் அழைத்து பேசுவர், வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை எதிர்பார்ப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இவற்றை மீறி அவர் உங்களிடம் பகிர்ந்துகொண்டால் அதனை கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.
எமோஷனலாக இருக்காதீங்க!
உங்களுக்கு எதாவது பிரச்னை ஏற்பட்டால், உடல்நிலை சரியில்லாமல் போனால், மனநிலை சோர்வடைந்து காணப்பட்டால் மற்றும் வீட்டில் பிரச்னைகள் இருந்தால் நீங்கள் காதல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது உங்களது காதலர் ஓடி வந்து உங்கள் முன்னாள் முதல் ஆளாக இருக்கும் நபராக இருக்கலாம். உங்களுக்கு எமோஷனலாக அதிக நம்பிக்கையை அளிக்கும் நபராக இருக்கலாம். ஆனால், நீங்கள் பிரிந்து நண்பராக இருக்கும்போது அந்த நிலை மாறலாம். எனவே, எமோஷனலாக அவர்களை சார்ந்து இருப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
பழையதைத் தோண்ட வேண்டாம்!
உங்களது பழைய காதலருடன் வெளியே செல்லும்போது, உரையாடும்போது மற்றும் மெசேஜ் செய்யும்போது காதலில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி பேச வேண்டாம். அது உங்களது பழைய காதலரை எரிச்சலடையச் செய்யும். உங்களது மோட்டிவ் சரியானதாக இருக்க வேண்டும். அதேபோல, ஏன், எதற்கு போன்ற கேள்விகளையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் நண்பராக இருக்கும்போது அது உங்களது வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர, எந்தவகையிலும் உங்களை தேங்கவிடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
கடைசியாக… எல்லா ரிலேஷன்ஷிப்பும் உங்களது நன்மைக்காவே இருக்க வேண்டும். அது சரியில்லை என்று உங்களுக்கு தோன்றினால், தைரியமாக அதைவிட்டு வெளியே வரலாம்.
Also Read: `ஊட்டி போறீங்களா..?’ – இந்த இடங்களையெல்லாம் மிஸ் பண்ணாம எக்ஸ்ப்ளோர் பண்ணுங்க!