ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி, சாதித்த இந்தியாவின் 5 Uncapped Players பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப்போறோம்.
ஹர்ஷல் படேல் – ஐபிஎல் 2021
கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கெதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல், 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் ஹோல்டராகவும் ஜொலித்தார்.
அர்ஷ்தீப்திங் – ஐபிஎல் 2021
ஐபிஎல் 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அர்ஷ்தீப் சிங், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த சீசனில் கேப்டன் மயங்க் அகர்வால் தவிர ரீடெய்ன் செய்த இருவரில் அர்ஷ்தீப்பும் ஒருவராவார்.
அங்கித் ராஜ்புத் – ஐபிஎல் 2018
பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் கடந்த 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 5/14 என்று சிறப்பாகப் பந்துவீசினார். இதுவே இந்திய Uncapped Player லிஸ்டில் சிறப்பான பந்துவீச்சாகும்.
வருண் சக்கரவர்த்தி – ஐபிஎல் 2020
ஐபிஎல் 2020 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வருண் சக்கரவர்த்தி, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
உம்ரான் மாலிக் – ஐபிஎல் 2022
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக், தனது வேகமான டெலிவரிகளுக்குப் புகழ்பெற்றவர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5/25 என்ற தனது ஃபெஸ்ட் பௌலிங்கைப் பதிவு செய்தார். ஐபிஎல்லில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்துவது அவருக்கு இதுவே முதல்முறை.
Also Read – IPL 2022: CSK-வால் பிளே ஆஃபுக்குத் தகுதி பெற முடியுமா… வாய்ப்புகள் என்னென்ன?