2018-ம் வருஷம், செப்டம்பர் மாசம், விஷால் 25 ஈவண்ட், சண்டைக்கோழி 2 -ம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழா. அப்போ விஷால், லிங்குசாமி, ஷங்கர்னு எல்லோரும் பேசிட்டிருந்தாங்க. அப்போ கன்னடத்துல இருந்து ஒரு நடிகரும் கலந்துக்கிட்டார். பார்க்க ஸ்டைலா ஹேர்ஸ்டைல் வைச்சுக்கிட்டு ஸ்டேஜ் ஏறினார். விஷால் என் நண்பன், அவனுக்காக வந்திருக்கேன்னு சொல்லிட்டு சில வார்த்தைகள் பேசிட்டு போனார். அவர் பேச்சுல ஆடியன்ஸூம் பெரிசா இன்ட்ரஸ்ட் காட்டலை. அப்போ பக்கத்துல உட்கார்ந்திருந்த நண்பன்கிட்ட சொன்னேன், இவர்தான் யஷ். கன்னடத்துல பெரிய ஸ்டார்னு சொல்லிட்டிருதேன். ஆனா ஆடியன்ஸ் ரியாக்ஷனே இல்லாம உட்கார்ந்திருந்தாங்க. அடுத்த ரெண்டு மாசம் கழிச்சு அவர் பெயர் மாஸ் உலகோட மந்திரச்சொல்லா மாறப்போகுதுனு யாருக்குமே தெரியலை. சொன்னது போலவே ரெண்டு மாசம் கழிச்சு கே.ஜி.எஃப் ரிலீஸ் ஆச்சு, அவரும் ஃபேமஸ் ஆனார்.
kgf -1 ரிலீஸ் ஆகி 5 வருஷம் முடிஞ்சிருக்கு. ஆனா இன்னைக்கும் அந்தப்படத்தைப் பார்த்தா அவ்ளோ எங்கேஜ்ஜா இருக்கும். தமிழ்நாட்ல வெளியானப்போ சரியான வரவேற்பு இல்லை. ஆனா ஓடிடியில வெளியானதுக்கு அப்புறமா படத்தைப் பத்தி அதிகமா பேச ஆரம்பிச்சாங்க. கொண்டாடவும் ஆரம்பிச்சாங்க. அதனாலதான் அதோட ரெண்டாம் பாகம் எளிதா 1000 கோடி கலெக்ட் பண்ணி கன்னட சினிமா வரலாறையே மாத்திச்சுனுகூட சொல்லலாம்.
அப்படி அந்தப் படத்துக்கு பின்னால கன்னட சினிமாக்கள் அதிகமான தாக்கம் ஏற்படுத்துனாலும், அதை ஜெராக்ஸ் எடுத்த சில படங்களும் வந்து கொஞ்சம் மனசை காயப்படுத்திட்டுப் போச்சு. அப்படி கே.ஜி.எஃப் சினிமா என்ன தாக்கத்தை ஏற்படுத்திச்சு, அவ்ளோ எங்கேஜ்ஜிங்கா இருக்க காரணம் என்ன அப்படிங்குறதைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
கே.ஜி.எஃப்க்கு முன்னாடி வரைக்கும் யஷ் அப்படிங்குற நடிகனை தெரியாது. ஆனா அதுக்குப் பின்னால முன்னணி தமிழ் நடிகர்களுக்கு இணையா ரசிகர்களை உருவாக்கின படம் கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் படமா பார்த்தா பக்கா கமர்சியல் மாஸ் மசாலா ரகம். ஆனா அதுக்குள்ள அம்மா சென்டிமெண்ட்டை வைத்து எல்லோரும் ரசிக்கும்படியாக கொடுத்திருந்தார் பிரசாந்த் நீல். மாஸ்க்கெல்லாம் மாஸா ஒரு ஹீரோவை நம்பத்தகுந்த மாதிரி பில்டப் ஏத்தினது எல்லாம் ரொம்பவும் புதுசா இருந்ததுன்னே சொல்லலாம்.
அந்தப்படம் எடுக்கப்பட்டது கன்னட மொழியின்னாலும், தமிழுக்கும் அந்த வசனங்களை பொருந்துற மாதிரி அமைச்சிருந்ததும் தமிழ்நாட்ல ஹிட் ஆகுறதுக்கு முக்கியமான காரணம். ‘விதியோட விளையாட்டுல அன்னைக்கு ராத்திரி ரெண்டு சம்பவங்கள் நடந்துச்சு. தங்கச் சுரங்கமும் பொறந்துச்சு… அவனும் பொறந்தான்’னு உணர்வுப்பூர்வமா ஆரம்பிக்கிற படத்துல ‘நீ எப்படி வேணும்னாலும் வாழு… ஆனா, சாகும்போது பெரிய சுல்தனாதான் சாகணும்’னு கேட்ட தாயோட டயலாக்ல இருந்து பத்து பேரை அடிச்சு டான் ஆணவன் இல்லடானு மாஸை ஏத்தி, எட்டு ஷூக்கு பாலீஸ் போட்டாதான் பன்னு கிடைக்கும்னு செண்டிமெண்ட்ல உருக வைச்சு, கேங்கை கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர் ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர், இப்போ காடுத்தீயே பத்திக்கிச்சுனு பல வசனங்கள் படத்துக்கு பெரிய பில்லர். படம் முழுவதுமே நாயகன் சார்ந்துதான் வசனம்னாலும் எங்கயுமே போரடிக்கலை.
அடுத்து மாஸ் எலமண்ட் பொதுவாக, தமிழ் சினிமாக்கள்ல, நாலைஞ்சு மாஸ் காட்சிகள் இருந்தாலே திகட்டிடும். ‘கொஞ்சமா செதர்ற ரத்தத்தைப் பார்த்தே நீ பயப்படுறேன்னா… இனி இங்க ரத்த ஆறே ஓடப் போகுது’னு ஆரம்பிக்கிற வசனத்துல இருந்து என்ட்ரி கொடுத்ததுல இருந்தே மாஸ்தான்.
170 நிமிஷத்துல சுமார் 150 நிமிஷங்களுக்கு மாஸ் காட்சிகள் மட்டும்தான். ராக்கி கேரக்டர் ஒவ்வொரு காட்சிக்கும் மாஸ் அதிகமாகிட்டேதான் இருந்தது. அதுலயும் ஃபைட்ல கூட ஒருத்தனை அடிச்சுட்டு அவன் கையை வைச்சே தன் தலையை கோதிக்கிற சீன்லாம் பக்கா மாஸ். முதல் பாதி முழுக்க சாதாரண கேங்ஸ்டர் கதையாத்தான் தொடங்கும். ஆனா செகண்ட் ஹாஃப்ல ஒரு சரித்திரப் படம் மாதிரி டோன்ல கொண்டு வந்திருப்பார் பிரசந்த் நீல். அந்த பிரம்மாண்டம்தான் படத்தோட பெரிய ப்ளஸ்னே சொல்லலாம். இந்த ஹீரோவோட கெட்டப்புகளை தமிழக இளைஞர்கள் வைக்க துவங்கினதை வைச்சே எவ்ளோ பெரிய ஹிட்னு சொல்லிடலாம். கன்னட சினிமாவோட தலையெழுத்தையே மாத்தி எழுத வைச்சது கே.ஜி.எஃப்.
Also Read – இப்படி படம் எடுத்தா லைஃப் டைம் செட்டில் மெண்ட்.. பேசில் ஜோசப் இவ்வளவு மாஸா?
படத்துக்குப் பின்னால எந்தை மேடை ஏறினாலும் யஷ்க்கு சலாம் ராக்கி பாய்தான் பேக்ரவுண்ட் ஸ்கோரா ஒலிச்சது. அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான மியூசிக் கொடுத்தார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கேஜிஎப் டிரெய்லருக்காக மட்டும் இவர் இசையமைச்சது 51 மியூசிக் ட்ராக்ஸ். 50 மியூசிக் ட்ராக்ஸை பிரிபேர் பண்ணி தனக்கு திருப்தியில்லாமல் கடைசியா போட்ட டியூன்தான் படத்துல நாம பார்த்த இசை. பிரசாந்த் நீல் எவ்வளவு மெனெக்கெட்டாரோ, அந்த அளவுக்கு ரவி பஸ்ரூரும் மெனெக்கெட்டார். கே.ஜி.எப் படத்துல வர்ற பல மியூசிக் டிராக்குகள்ல இரும்பு அடிக்கிற சப்தங்கள் நிரம்பி இருக்கும். இசைக்கு நிறைய லைவ்வா நிஜ கருவிகளை வைத்தே கம்போஸ் பண்ணும் வழக்கத்தை இன்னும் கடைபிடிக்கிறார்.
கே.ஜி.எஃப் படத்தோட பிரசாந்த் நீல் உள்பட மொத்த டீமும் இதுக்காக கடுமையா உழைச்சிருந்தாங்க. ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருந்தாங்க. யஷ், கருடன் ராமச்சந்திர ராஜூ உள்பட பலர் நல்லா நடிச்சிருந்தாங்க. கே.ஜி.எஃப் மூலமா புது உலகத்தையே உருவாக்கியிருந்தார், பிரசாந்த் நீல். இது எல்லாத்தையும்விட ஸ்டோரி நரேஷனும், ஆக்ஷன் கொரியோகிராஃபி தெறி ரகம். இதெல்லாம் சேர்ந்துதான் கே.ஜி.எஃப் வெற்றியடைய காரணமா இருந்தது. அமெரிக்காவில் ரீ ரிலீஸ் செய்து படம் ஹிட்டடித்தது. கன்னட சினிமாவில் 100, 200, 250 கோடி என பல கோடிகளை கடந்து சாதனை படைச்ச படமும் கே.ஜி.எஃப்தான்.
கே.ஜி.எஃப் பத்தின கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.