ஆசியாவின் சிறந்த 100 ரெஸ்டாரெண்டுகள் லிஸ்டில் 7 இந்திய ஹோட்டல்கள்.. சென்னையின் ஒரே ஹோட்டல் எது தெரியுமா?

ஆசியாவின் சிறந்த 100 ரெஸ்டாரெண்டுகளில் 51-100 இடங்களில் இருக்கும் ஹோட்டல்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த லிஸ்டில் சென்னையில் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே இடம்பிடித்திருக்கிறது… அது எந்த ஹோட்டல் தெரியுமா?

ஆசியாவின் சிறந்த 100 ஹோட்டல்கள்!

இந்தியாவின் ஸ்ட்ரீட் புட்ஸ் என்பது கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயம். நாட்டின் எந்தவொரு மாநிலத்துக்குப் போனாலும், அந்த மாநிலத்தின் பிரத்யேக உணவுகளை நீங்கள் தெருவோர உணவகங்களில் சுவையும் மணமும் மாறாமல் ருசிக்க முடியும். உணவு என்பது நமது பண்பாட்டின் ஒரு பகுதியாக தொடர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம். தெருவோர உணவகங்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு நகரிலும் இருக்கும் பெரிய ரெஸ்டாரெண்டுகளும் அந்தந்த லோக்கல் உணவு வகைகளை சுவையோடு பரிமாறுவதுண்டு. தங்களின் மெனு கார்டுகளிலும் இந்த உணவு வகைகளை ஹைலைட் செய்வதுண்டு.

இங்கிலாந்தின் ’William Reed Business Media’ ஆண்டுதோறும் உலகின் 50 சிறந்த உணவகங்கள் பட்டியலை ‘World’s 50 Best’ என்கிற பெயரில் வெளியிடுவது வழக்கம். இந்தப் பட்டியலுக்கு முன்பாக ஆசியாவின் சிறந்த 100 உணவகங்கள் பட்டியலில் 51-100 வரையில் இடம்பிடித்திருக்கும் ரெஸ்டாரெண்டுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து 7 உணவகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. அதில், ஒன்று சென்னையைச் சேர்ந்தது. அந்த உணவகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

The Table, மும்பை (85-வது இடம்)

ஓல்டு மும்பையின் Colaba பகுதியில் அமைந்திருக்கும் ‘The Table’ ரெஸ்டாரெண்ட் உள்ளூர் உணவு வகைகள் மட்டுமல்லாது, உலக அளவில் பிரபலமாக இருக்கும் டிஷ்களுக்கும் பெயர்பெற்றது. காய்கறிகள், பழங்கள் தொடங்கி இறைச்சி வகைகள், ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் மீன் வகை உணவுகளுக்காகவும் இந்த ரெஸ்டாரெண்டை நாடி வருவோர் எண்ணிக்கை அதிகம். அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து என எந்த நாட்டின் Cuisine-ஐயும் நீங்க இங்க டேஸ்ட் பண்ண முடியும்.

Americano, மும்பை (80-வது இடம்)

சமையற் கலைஞர்களான Alex Sanchez மற்றும் Mallyeka Watsa ஆகியோர் நடத்தும் இந்த ரெஸ்டாரெண்ட் கலிபோர்னிய உணவு வகைகளுக்குப் புகழ்பெற்றது.

Avartana, சென்னை (79-வது இடம்)

சென்னை கிண்டியில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருக்கும் Avartana ரெஸ்டாரெண்ட், தென்னிந்திய உணவுகளுக்குப் புகழ்பெற்றது. கிளாசிக்கான தென்னிந்திய உணவு வகைகளை மாடர்ன் டச்சோடு பரிமாறுவது இதன் பிரத்யேக ஸ்டைல். தமிழ்நாட்டில் இருந்து இந்த லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு ஹோட்டல் இதுதான்.

Dum Pukht, டெல்லி (73-வது இடம்)

டெல்லி ஐடிசி மௌரியா ஹோட்டலின் ரென்ஸ்டாரெண்ட்தான் Dum Pukht. இந்த ரெஸ்டாரெண்டில் பரிமாறப்படும் பிரியாணி அலாதியான சுவையும் மணமும் கொண்டது. அத்தோடு, டெல்லியில் shahi tukras மற்றும் vegetable seekh டிஷ்களை அதன் மணம் மாறாமல் சர்வ் செய்யும் முக்கியமான ரெஸ்டாரெண்ட் இது.

Comorin, குருகிராம் (69-வது இடம்)

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளை அதன் சுவை மாறாமல் பரிமாறுவது இந்த ரெஸ்டாரெண்டின் ஸ்பெஷல். கேரள மீன் குழம்பு தொடங்கி இட்லி, பலாப்பழத்தை வைத்து செய்யும் kathal nihari, வெஜ் பிரியர்களின் ஆதர்ஸமான sarson ka saag வரை இந்த ரெஸ்டாரெண்டின் மெனு லிஸ்ட் கொஞ்சம் நீளமானது.

Bukhara, டெல்லி (66-வது இடம்)

View this post on Instagram

A post shared by ITC Maurya, New Delhi (@itcmaurya)

டெல்லி ஐடிசி மௌரியா ஹோட்டலில் இருக்கும் மற்றொரு ரெஸ்டாரெண்ட் இது. இந்த ரெஸ்டாரெண்ட் வட இந்திய உணவு வகைகளுக்காகவே பெயர் பெற்றது. Dal Bukhara தொடங்கி Sikanderi Naan, jumbo prawns மற்றும் onion kulchas வரையில் இங்கு பறிமாறப்படும் வட இந்திய உணவுகளுக்கான வரவேற்பு மாஸாக இருக்கும்.

Karavalli, பெங்களூர் (59-வது இடம்)

View this post on Instagram

A post shared by Karavalli @ Taj (@karavalli.taj)

கர்நாடகாவின் மேற்குக் கரையோர உணவுகளுக்கான பெஸ்ட் டெஸ்டினேஷன் இந்த ரெஸ்டாரெண்ட். உள்ளூரியில் விளைந்த மிளகு, கிராம்பு, ஏலக்காய் தொடங்கி இறைச்சி, காய்கறிகள் என லோக்கல் புராடக்டுகளை இங்கு சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். நூற்றாண்டுகள் கடந்த டிஷ்களை அதன் பழமை மாறாமல் சர்வ் செய்கிறார்கள்.

Also Read – Mandi Biryani: ஹைதராபாத் பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் மந்தி ரைஸ்… Foodies-ஐ ஈர்க்க என்ன காரணம்?

3 thoughts on “ஆசியாவின் சிறந்த 100 ரெஸ்டாரெண்டுகள் லிஸ்டில் 7 இந்திய ஹோட்டல்கள்.. சென்னையின் ஒரே ஹோட்டல் எது தெரியுமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top