விக்ராந்த் – விமானத்தை தாங்கும் இந்தியாவின் இரண்டாவது போர்க்கப்பல்!

இந்தியா தற்சார்பை நோக்கி மெல்ல அடியடுத்து வைத்து வரும் நிலையில், முழுவதும் உள்நாட்டிலேயே ரூ.20,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சுமார் 40,000 டன் எடை, 14 அடுக்குகள், 2,300 அறைகள் கொண்ட ஐ.என்.எஸ் விமானம் தாங்கும் விக்ராந்த் போர்கப்பலை நாட்டிற்காக அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அத்துடன் ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற அடையாளம் கடற்படை கொடியில் தென்படுவதால் அதனை மாற்றி அமைத்து புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். பென்னண்ட் எண் R11 உடன், புதிதாக இயக்கப்பட்ட INS விக்ராந்த், என்ற போர்க்கப்பல் ”ஜயேம சம யுதி ஸ்ப்ருதா” எனும் ரிக்வேத வரிகளை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளுக்கு “எனக்கு எதிராக போரிடுபவர்களை நான் வெல்கிறேன்” என்று பொருள். சுமார் 13 ஆண்டுகளாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த கப்பலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அது உருவாகிய விதம் பற்றி தான் இக்கட்டுரையில் தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.

விக்ராந்த்
விக்ராந்த்

விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள்:

விமானங்களை நிறுத்தும் தளமானது 12,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த விமானத்தளத்தில் 30 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். 12 விமானங்களையும் 6 ஹெலிக்காப்டர்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

14 அடுக்குகள் மற்றும் 2300 அறைகள் கொண்ட இந்த போர்க்கப்பல் 1700 பேர் தங்கும் அளவிற்கு விசாலமான அமைப்பு கொண்டது. இந்த கப்பல் மூலம் 15,000 பேருக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.

விக்ராந்தில் தரையிலிருந்து வான்வழி நடுத்தர தூரம் தாக்கும் 32 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது. AK 630 ரோட்டரி பீரங்கிகள் மற்றும் கவாச் ஏவுகணை எதிர்ப்பு கடற்படை டிகோய் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட MIG-29K போர் விமானத்தையும் kamov-31 முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர்களையும் மற்றும் MH-60R மல்டிரோல் ஹெலிகாப்டர்களையும் சுமந்து செல்லும் தன்மைக் கொண்டது.

விக்ராந்தில் போர் மேலாண்மை அமைப்பு, மின்னணு போர் தொகுப்பு, தரவு நெட்வொர்க் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதள மேலாண்மை அமைப்பு என 76 சதவிகித உள்நாட்டு உள்ளடக்கம் உள்ளது.

இந்தியாவின் மிதக்கும் கடற்படை தளமாக விளங்கும் விக்ராந்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு 5,000 வீடுகளில் விளக்குகளை ஒளிர செய்ய முடியும்.

விக்ராந்த்
விக்ராந்த்

இந்தியா இக்கப்பலை உருவாக்கியதன் மூலம், உள்நாட்டிலேயே விமானம் தாங்கி கப்பலை உருவாக்கு திறன் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த கப்பலில் ஆண்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் பணியாற்ற உள்ளனர்.

Also Read: ‘திராவிடம், சமூகநீதி, மக்கள்’ – தமிழக பிரபலங்களின் ஒரு வார்த்தை ட்வீட் என்னென்ன தெரியுமா?

விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல் உருவான விதம்:

விக்ராந்த் விமானம் தாங்கும் போர் கப்பலானது கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலானது, 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. அத்துடன், 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் வாய்ந்த்து. இந்த கப்பலானது, கப்பலின் விரிவான பொறியியலை மேற்கொண்டு 3D மாடலில் இருந்து உற்பத்தி வரைப்படங்கள் எடுத்து கப்பலானது கட்டப்பட்டது. இவ்வாறு 3D மாடல் வைத்து கப்பல் தயாரிப்பது நாட்டிலேயே இதுவே முதன் முறையாகும்.

சுமார் 1700 பயணிகளைக் ஏற்றி செல்லும் திறன் உள்ள இந்தக் கப்பலானது, குறைந்தபட்சம் 18 நாட் தூரம் முதல் அதிகபட்சம் 28 நாட் தூரம் என்ற வேகத்தில் பயணிக்கும். விக்ராந்த் அதிகப்பட்சமாக 7,500 நாட்டிக்கல் மைல்கள் தூரம் செல்லக்கூடியது.

விக்ராந்த்
விக்ராந்த்

இந்த விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கும் போர்க்கப்பலுடன் சேர்த்து இந்த்தியாவில் இரண்டு கப்பல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியா, இந்திய பெருங்கடலில் கடற்படை ஆதிக்கத்தை நிறுவ குறந்தப்பட்சமாக இன்னும் ஒரு விமானம் தாங்கி போர்கப்பலானது தேவைப்படுகிறது. இந்தியாவின் பழைய விமானம் தாங்கும் போர்கப்பலான விக்ரமாதித்யா கப்பலில் 30-க்கும் அதிகமான விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.

இதே போல் பிரிட்டனின் குயின் எலிசபெத் போர்க்கப்பலில் 40-க்கும் மேற்ப்பட்ட விமானங்களையும் அமெரிக்க நிமட்ஸ் கிளாஸ் கப்பலில் 60-க்கும் மேற்ப்பட்ட விமானங்களையும் நிறுத்தி வைக்க முடியும். இந்த விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தியாவின் அமைதிக்கும் பாதுக்காப்பிற்க்கும் வழிவகுக்கும் என ஆய்வு மூலம் அறியப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top