‘Deadliest Villain’ பொன்னம்பலம் அவர்களுடைய 4 யுனீக் குவாலிட்டிகள்!

“பொன்னம்பலம்” அவரைப் பார்த்ததுமே 90ஸ் கிட்ஸ் மிரண்ட காலகட்டங்களெல்லாம் உண்டு. `தாய்க்கிழவி’ பாட்டெல்லாம் இப்போதான் ஃபேமஸ்… ஆனால், அந்த வார்த்தையின் ஒரிஜினல் உடமஸ்தன் நம்ம `நாட்டாமை’ பொன்னம்பலம் கேரக்டர்தான். ஸ்டண்ட் மேனா கூட்டத்துல ஃபைட் பண்ணி கரியரை ஆரம்பிச்ச பொன்னம்பலம், அடுத்தடுத்து பண்ணதெல்லாம் தரமான சம்பவங்கள்தான். 90ஸ்ல முன்னணி ஹீரோக்கள் தொடங்கி அறிமுக ஹீரோக்கள் வரை மோதுன அனுபவம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் பொன்னம்பலம் வில்லத்தனத்தின் 3 யுனீக்கான குவாலிட்டிகள் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.  

பொன்னம்பலம் டயலாக் டெலிவரி 

மோசமானவய்ங்கள்லயே முக்கியமானவய்ங்கனு சொல்லிட்டு திரையில் லந்து பண்ணிட்டு திரியுற வில்லன்களோட தனித்த அடையாளங்கள்ல முக்கியமானது அவங்களோட டயலாக் டெலிவரி. அந்தவகையில் நம்ம வில்லன் பொன்னம்பலத்தோட டயலாக் டெலிவரி ரொம்பவே ஸ்பெஷலானது. இதுக்குப் பல உதாரணங்களைச் சொல்லாம். அதுல ரொம்ப ஸ்பெஷல் நாட்டாமை படம்தான். அந்தப் படத்துல தான் தாய்க்கிழவினு தன்னோட ஃபேமஸான வசனத்தைப் பேசியிருப்பாரு… அந்த ஒரு வார்த்தையையே வேற வேற மாடுலேஷன்ல சொல்லி மிரட்டியிருப்பார். `ரொம்ப நீளமா பேசாத மூச்சு வாங்கும் தாய்க்கிழவி’னு அட்வைஸ் பண்ற மனோராமை ஆஃப் பண்ணுவார். கொங்கு தமிழ்ல அவர் அந்தப் படத்துல பேசுன ஒவ்வொரு வசனமுமே யுனீக்கா இருக்கும்; டெலிவரியும் மிரட்டலா இருக்கும். இப்படியான மிரட்டல் டயலாக் டெலிவரி எல்லா வில்லன்களும் கைகூடுமா என்பது சந்தேகம்தான். 

பொன்னம்பலம்

வேறலெவல் ஃபைட்

வில்லன்கள் எல்லாரும் ஃபைட்டர்களா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனால், களத்துல இறங்கி ஹீரோவோட நேரடியா சண்டை செய்யுற வில்லன்களுக்கு தனி மவுசுதானே… அந்த லிஸ்ட்ல பார்த்தா எப்பவும் ஃபிட்டா இருக்க நம்ம பொன்னம்பலம் முன்னணில இருப்பார்… ஸ்டண்ட் மேன் பின்னணில இருந்து வந்ததால, ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ்னு இவர்கூட சண்டைபோடாத நடிகர்களே இல்லை. நின்ற இடத்தில் இருந்தே தலைக்கு மேல் காலைத் தூக்கி இவர் அடிக்கும் ஸ்டைலே தனியானது. குறிப்பா விஜயகாந்துடனான இவரது காம்போ ஃபைட்டுகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லணும்னா சத்ரியன் படத்துல வர்ற மார்க்கெட் ஃபைட்டைச் சொல்லலாம். போலீஸ் ஆஃபிஸர் விஜயகாந்தோட இன்ட்ரோ சீனே அந்த மார்க்கெட் ஃபைட்தான். அதுல விஜயகாந்துக்கு சற்றும் சளைக்காமல் ஃபைட்டில் ஈடுகொடுத்திருப்பார். 10 நிமிஷத்துக்கு மேல் நீடிக்கும் அந்த ஃபைட் படத்தோட ஹைலைட் மொமண்ட். அதேமாதிரி, ஆக்‌ஷன் கிங்னு அழைக்கப்படுற அர்ஜூன் கூட இவர் பண்ண ஃபைட்டுகளும் கவனிக்கப்பட்டவை.

Also Read : ரகுவரன் முதல் நாசர் வரை – 90-களில் கலக்கிய வில்லன்கள்!

சமீபத்தில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலன் தேறிய பொன்னம்பலம் அதற்குக் காரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். அது நம்ம எல்லோருமே பின்பற்ற வேண்டிய விஷயம். அது என்னனு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க. 

பொன்னம்பலம்

மிரட்டல் உடல்மொழி 

பொன்னம்பலத்தோட ஸ்கிரீன் பிரசன்ஸே ஒரு அச்சத்தை ஏற்படுத்துற மாதிரியாகத்தான் இருக்கும். தமிழ் மட்டுமில்ல தெலுங்குலயும் இவர் சிரஞ்சீவி தொடங்கி பாலையா வரைக்குமே சண்டை போட்டிருக்கிறார். பாலிவுட்லயும் ஒரு சில படங்கள்ல வில்லனா மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பாடி லாங்குவேஜ்ல டிரை பண்ணிருப்பார். நாட்டாமை வில்லத்தனத்தை நீங்க முத்து படத்துல பார்க்க முடியாது. வால்டர் வெற்றிவேல் கபாலியும் மன்னவா கபாலியும் வேற வேற பாடிலாங்குவேஜ் காட்டுவாங்க… குளோசப் காட்சிகளும் இவருக்கு அதிகம் வைப்பாங்க.. காரணம் நம்ம ஆளு கண்ணுலயே மிரட்டுவார். தவசி கோட்டைப்பெருமாள் மாதிரியா மைனர் கேரக்டர்லயும் வெரைட்டு காட்டுவார். கபாலி என்கிற கேரக்டர் பேருலயே நிறைய படங்கள்ல நடிச்சதால இவரை கபாலினு கூப்புடுறவங்களும் இருக்காங்க.  

பொன்னம்பலம் ஸ்டைலிஷ் வில்லன்

எப்பவும் ஃபிட்டா இருக்க பொன்னம்பலம் படங்கள்ல போட்டுட்டு வர்ற டிரெஸ்ஸுமே அந்த காலகட்டங்களில் ஃபேமஸ்னு சொல்லலாம். இடுப்பு வரையில் ஜீன்ஸ் ஃபேண்டை அணிந்து சர்ட்டை இன் பண்ணிட்டு செம ஸ்டைலிஷா ஷூவோட வர்றது பொன்னம்பலத்தோட ஃபேவரைட் காஸ்ட்யூம். ஜீன்ஸ் பேண்ட், ஷூ சகிதமாகத்தான் அவரை நாம் பெரும்பாலான படங்களில் பார்க்க முடியும். முத்து மாதிரியான ஒரு சில படங்களில் வேட்டி, சட்டையில் வந்திருந்தாலும் வெளியில் தெரியும்படி ஆர்ம்ஸில் தாயத்து கட்டியிருப்பது, காதில் கடுக்கண் போட்டிருப்பதுனு அதுலயுமே ஒரு ஸ்டைலிஷ் அடையாளத்தைச் சேர்த்திருப்பார். 

ஃபைட்டராக இருந்த நாட்களில் சண்டைக் காட்சிகளில் அடிபடும் போது அதற்காக நிறையவே வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வாராம் பொன்னம்பலம். அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால்தான் தூக்கமே வரும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், பின்னாட்களில் அப்படியான வலி நிவாரணி மாத்திரைகளே அவரது சிறுநீரகப் பிரச்னைக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டதாம். இதனால், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்காதீங்கனு சொல்லியிருக்கிறார். 

மிரட்டல் வில்லனா தமிழ் சினிமாவில் அசத்துன பொன்னம்பலம் நடிச்ச கேரக்டர்கள்லயே உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எது… அதுக்கான காரணம் என்னங்குறதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top