உலகப் பொருளாதார சூழலாலும் திருமண சீசனும் நெருங்கும் நிலையிலும் தங்கத்தின் விலை ஏறி வருகிறது… தங்கம் வாங்க இது சரியான தருணமா?
தங்கம்
சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பதைப் பொறுத்தும், அதற்கான கையிருப்பு குறையும் நிலையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். Supply – Demand எனப்படும் இந்த முறையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் மற்றும் அதையொட்டி, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் என தங்கத்தின் விலை அதிகரிக்க பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் தங்கத்தின் விலை
ஏப்ரல் 10-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் தங்கத்தின் (24 காரட்) விலை கிலோவுக்கு ரூ.3,900 அதிகரித்து, ரூ.53,000 என்கிற நிலையை எட்டியது. தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில், கையிருப்பு குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண சீசன் தொடங்க இருக்கும் நிலையில், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பும் சர்வதேச சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஷாங்காய் மாநகர் முழுவதும் மீண்டும் ஊரடங்கில் இருக்கும் நிலையில், அங்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலும் தங்கத்தின் விலை மேலும் கூடலாம் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில், இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 10 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏப்ரல் 12 நிலவரப்படி ரூ.49,190 ஆகவும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.53,660 ஆகவும் இருக்கிறது. நெருக்கடியான பொருளாதார சூழல்களில் இருந்து விடுபட தங்கம் கைகொடுக்கும் என்பதால், அதன் மீது முதலீடு செய்யப்படும் அளவும் அதிகரித்தே வருகிறது. இதனால், தயங்காமல் தங்கத்தின் மீது இன்றே இப்போதே முதலீடு செய்யலாம்.
Also Read – முதலீடாக வீடு வாங்கப் போகிறீர்களா… கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!