கோலிவுட் க்யூட் ஜோடிகள் 2021

கோலிவுட் 2021: `ஜே.டி – சாரு, கபிலன்- மாரியம்மாள்’ – 7 க்யூட் ஆன் – ஸ்கிரீன் ஜோடிகள்!

2021-ம் ஆண்டை வழியனுப்பும் நேரத்தில் இருக்கிறோம். கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்போடு 2022-ஐ வரவேற்கக் காத்திருக்கும் நேரத்தில், 2021-ம் ஆண்டு வெளியான படங்களில் கோலிவுட்டின் க்யூட்டான 7 ஆன் ஸ்கிரீன் ஜோடிகள் எவையெனப் பார்த்துவிடுவோமா?

மாஸ்டர்: விஜய் – மாளவிகா மோகனன்

மாஸ்டர்
மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி முதல்முறையாகக் கூட்டணி சேர்ந்த படம். 2021-ன் தொடக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். படத்தின் ஹீரோ – ஹீரோயினுக்கு இடையேயான ரொமான்ஸ் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஜே.டி – சாரு ஜோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சார்பட்டா பரம்பரை: ஆர்யா – துஷாரா விஜயன்

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

வடசென்னை பாக்ஸிங் பரம்பரைகளைப் பற்றி பேசிய பா.இரஞ்சித்தின் பீரியர் ஃபிலிமானா சார்பட்டா பரம்பரையில், பாக்ஸிங் அளவுக்குக் கவனம் ஈர்த்தவர் துஷாரா விஜயன். தவறான பாதையில் செல்லும் கணவனைக் கைக்குழந்தையோடு கண்டிப்பதாகட்டும், துடுக்குத்தனமாகட்டும் இந்த மாரியம்மாள் கேரக்டர் 2021-ன் தவிர்க்க முடியாத கேரக்டர். கபிலன் – மாரியம்மாள் ஜோடி 2021-ன் க்யூட் ஜோடிகளில் முக்கியமானது.

டாக்டர்: சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள் மோகன்

டாக்டர்
டாக்டர்

நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஹிட் அடித்த டாக்டர் படத்தில் ஹீரோயின் கேரக்டரில் நடித்தவர் புதுவரவு பிரியங்கா அருள் மோகன். எந்த ரியாக்‌ஷனையும் காட்டாத டாக்டர் வருணை ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் செய்யும் க்யூட் சேட்டைக்காரியாக மினி கேரக்டரில் அசத்தியிருப்பார் பிரியங்கா மோகன். வருண் – மினி ஜோடியும் 2021-ன் முக்கியமான ஜோடி லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது.

Also Read:

`லோக்கல் சேனல் காம்பியரிங் டூ சவுத் இந்தியன் ஸ்டார்..’ – ஐஸ்வர்யா ராஜேஷின் பயணம்!

மாநாடு: சிம்பு – கல்யாணி பிரியதர்ஷன்

மாநாடு
மாநாடு

2021 இறுதியில் டைம் லூப் கான்செப்ட் மூலம் வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணி சிக்ஸர் அடித்த படம் மாநாடு. தமிழ் சினிமாவுக்கு புதிய ட்ரீட்மெண்டாக இருந்த ஸ்கிரீன்பிளேயில் தனுஷ்கோடி கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டியிருப்பார். அதேநேரம், ஹீரோ அப்துல் காலிக்குடன் சேர்ந்து ஹீரோயின் சீதாலட்சுமியின் கெமிஸ்ட்ரியும் தவிர்க்க முடியாதது. மெஹ்ருசைலா பாடலின் ஒரு போர்ஷன், ஒரு டைம் லூப்பில் ஹீரோவால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சரியாகக் கணித்துக் கூற முடியும் என சீதாலட்சுமி கூறும் அந்த போர்ஷனிலும் இவர்களிடையேயான கெமிஸ்ட்ரி ஆடியன்ஸின் அப்ளாஸ் அள்ளும்.

சுல்தான்: கார்த்தி – ராஷ்மிகா மந்தனா

சுல்தான்
சுல்தான்

ஆக்‌ஷன் டிராமாவான சுல்தான் படத்தின் ஹைலைட்டுகளில் விக்ரம் (கார்த்தி) – ருக்மணி (ராஷ்மிகா) ஜோடி முக்கியமான ஒன்று. `யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல..’ பாடலின் ஹிட் இதற்கு சாட்சி.

ஓ மணப்பெண்ணே: ஹரீஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர்

ஓ மணப்பெண்ணே
ஓ மணப்பெண்ணே

பெல்லி சூப்புலு படத்தில் விஜய் தேவரகொண்டா – ரீது வர்மா அசத்தியிருந்த ரோல்களை ஏற்று நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், அந்த கேரக்டர்களுக்கு தமிழில் நியாயம் சேர்த்திருந்தது ஹரீஷ் கல்யாண் – பிரியா பவானி ஷங்கர் ஜோடி. காமெடியோடி, எமோஷனும் இந்த ஜோடிக்கு க்யூட்டாக வொர்க் அவுட் ஆகியிருந்தது.

லிப்ட்: கவின் – அம்ரிதா ஐயர்

லிப்ட்
லிப்ட்

ஒரே பில்டிங்கில் நடக்கும் இந்த ஹாரர் ஜானர் படத்தில் குரு – ஹரிணி இடையே நடக்கும் மோதல், பின் காதலாக மாறும் தருணம் நம்மை ரசிக்க வைத்தது. தொடக்கத்தில் மோதிக்கொள்ளும் இந்த ஜோடி காதல் மோதலில்தான் தொடங்கும் என்பது போல், அமானுஷ்ய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது போல் ஸ்கிரீன்ப்ளே அமைக்கப்பட்டிருக்கும்.

Also Read – உடல் எடைகூடிய தமன்னா.. விஷயம் தெரியாமல் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top