கோலிவுட் 2021 : டாப் 10 தமிழ் சினிமா வில்லன்கள்!

கோலிவுட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வெரைட்டியான நிறைய வில்லன்களைப் பார்க்க முடிந்தது. இதில், பாதிக்கு பாதி வில்லன் கதாபாத்திரங்கள் ஹீரோ நடிகர்களின் பங்களிப்பில் உருவானது என்பது ஒரு ஆச்சர்யமான வளர்ச்சிதான். அப்படிப்பட்ட டாப் 10 வில்லன் கேரக்டர்களைப் பற்றியும் அதில் நடித்தவர்களைப் பற்றியும் பார்க்கலாம்.

விஜய் சேதுபதி (மாஸ்டர்)

விஜய் சேதுபதியை மனதில் வைத்து அவருக்காகவே அளவு எடுத்துத் தைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் இந்த ‘பவானி’ கதாப்பாத்திரம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒஸ்ட்ரிட்ச் கதை சொல்லக்கூடிய ஒரு வித்தியாசமான கொடூர வில்லன் என்பது தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசுதான். அதை விஜய் சேதுபதி தன் அசால்டான நடிப்பில் தட்டித் தூக்கியிருப்பார்.

எஸ்.ஜே.சூர்யா (மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை)

கடந்த ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவுக்கு செம்ம தீனியாக அமைந்தது. ‘யார்றா நீ’ என ‘மாநாடு’ படத்தில் மாஸான வில்லனாகவும் ‘ஆங்.. மரியம்’ என கிளாஸ் வில்லனாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் அதகளம் செய்திருப்பார். ‘மாநாடு’ படத்தில் வெறுமனே தூங்கி எழுந்திருப்பதில் அவர் காட்டிய அத்தனை வெரைட்டி ஸ்டைல்கள் ஒன்றே போதும் அவர் யாரென்று காலம் கடந்தும் பேசும்.

ஜி.எம்.சுந்தர் (சார்பட்டா பரம்பரை)

துரைக்கண்ணு வாத்தியார்
துரைக்கண்ணு வாத்தியார்

‘என்ன ஷோ காட்டுறியா’ என எரிச்சலாக கேட்கும் ‘சார்பட்டா பரம்பரை’ துரைக்கண்ணு வாத்தியாரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.  அதிரடிக்கும் தமிழ் வில்லன்களுக்கு மத்தியில் இப்படியும் வில்லத்தனம் செய்யலாம் என ரஞ்சித் எழுதிய இந்த கதாப்பாத்திரத்திற்கு அத்தனை பொருத்தமாக பொருந்தியிருப்பார் ஜி.எம்.சுந்தர்.

நட்டி (கர்ணன்)

கர்ணன்
கர்ணன்

சாதி வெறிகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி எஸ்.பி.கண்ணபிரான் வேடத்தில் நட்டிக்கு வேறொரு பரிணாமம். படத்தின் முக்கியமான சிச்சுவேஷனில் எண்ட்ரி ஆகும் நட்டி அதன்பிறகு தொடர்ந்து பொடியன்குளம் கிராம மக்களுக்கு மட்டுமல்லாது படம் பார்ப்பவர்களுக்கும் கலக்கத்தைத் தந்திருப்பார்.

வினய் (டாக்டர்)

டாக்டர் வினய்
டாக்டர் வினய்

ஜிம்மில் தென்படும் எலைட் அங்கிள்களின் தோற்றத்தில் இருந்துகொண்டு கொடூரமான வில்லத்தனங்கள் செய்யும் கேரக்டரில் பக்காவாக பொருந்தியிருப்பார் வினய். படத்தின் திரைக்கதையில் இன்னும்கூட இருந்திருக்கவேண்டிய மிரட்டல் அம்சங்களை தன் தோற்றத்தின் மூலமும் சின்ன சின்ன அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்தியவகையில் வினய்யின் நடிப்பை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

தமிழ் (ஜெய்பீம்)

ஜெய் பீம் தமிழ்
ஜெய் பீம் தமிழ்

சில நடிகர்கள் எல்லாம் எதுவுமே செய்ய வேண்டாம். வெறுமனே ஸ்கிரீனில் தோன்றினாலே போதும் ஆடியன்ஸுக்கு பயம் கிளம்பிவிடும். அப்படியொரு இண்டன்ஸான தோற்றம்கொண்ட ஒரு நடிகர்தான் தமிழ். அப்படியிருக்க ‘ஜெய்பீம்’ படத்தில் அவர் சாதாரணமாக செய்த சின்ன சின்ன வில்லத்தனங்களும் திரைக்கதையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ஆர்யா (எனிமி)

`எனிமி’ ஆர்யா
`எனிமி’ ஆர்யா

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு செம்ம சார்மிங்கான ஆர்யாவை இந்தப் படத்தில் காண முடிந்தது. ஆனால் ஹீரோவாக அல்ல வில்லனாக. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரைக்கும் ஹீரோவுக்கு சரிசமமாக மல்லுக்கட்டும் செம்ம ஸ்டைலீஷான வில்லன் வேடத்தை அனாயசமாக செய்திருந்தார் ஆர்யா.

கவின் ஜே பாபு  (ரைட்டர் )

‘ரைட்டர்’ படம் பார்த்த யாராலேயும் ‘தங்கொராஜ்.. தங்கொராஜ்’ எனக் கூப்பிடும் அந்த வட இந்திய போலீஸ் அதிகாரி வேடத்தை மறக்கமுடியாது. பார்க்க படு டீஸண்டாக இருந்துகொண்டு உள்ளுக்குள் சாதி அழுக்கை சுமக்கும் ஒரு வெறுப்புக்குரிய கேரக்டரில் மிக அழகாகப் பொருந்தியிருப்பார் கவின் ஜே பாபு.

ஒய்.ஜி.மகேந்திரன் (மாநாடு)

`மாநாடு’ ஒய்.ஜி.மகேந்திரன்
`மாநாடு’ ஒய்.ஜி.மகேந்திரன்

‘ஏன் வில்லன்னா யூஸூவல் டெம்ப்ளேட்லதான் இருக்கணுமா.’ எனக் கேட்பதுபோலவே இருக்கும் ‘மாநாடு’ படத்தில் ஓய்.ஜி.மகேந்திரன் வெளிப்படுத்தியிருக்கும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. அவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் ‘முண்டம்  இன்னும் போன் கனெக்ட் ஆகல’ என எரிச்சலை உமிழ்வது ஒன்று போதும் ஒய்.ஜி.மகேந்திரனின் அனுபவத்தை சொல்ல.

ஜான் கொக்கேன் ( சார்பட்டா பரம்பரை)

ஜான் கொக்கேன்
ஜான் கொக்கேன்

சார்பட்டா பரம்பரை’ படம் மூலம் வெளிச்சம் பெற்ற ஒரு முக்கியமான நடிகர் ஜான் கொக்கேன். தான் ஏற்றுக்கொண்ட ‘வேம்புலி’ பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் உடலை இறுக்கி, ஒரு பாக்ஸருக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கு அத்தனை பாக்ஸிங் நுணுக்கங்களையும் கற்று கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஜான் கொக்கேன்.

Also Read – கோலிவுட் 2021 : டாப் 10 மெலோடி சாங்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top