இந்தியன் 2

`படம் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க..’ தமிழ் சினிமாவின் பெண்டிங் படங்கள்!

தமிழில் நீண்ட வருடங்களாக ரிலீஸாகமல் இருக்கும் படங்களின் எண்ணிக்கை ஏராளம். ஆனால் அவற்றுள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சற்றும் குறையச் செய்யாமல் நாளுக்கு நாள் அதிகமாக்கிவரும் படங்கள் ஒரு சிலவைதான். அவ்வாறு, நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் சில படங்கள் பற்றி இதோ.

அயலான்

அயலான்
அயலான்

டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘இன்று நேற்று நாளை’ எனும் வெற்றிப்படம் தந்த இயக்குநர் ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்றதுமே எதிர்ப்பார்ப்பைத் தூண்டிய படம் ‘அயலான்’. படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியனாக நடிக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, பிரம்மாண்டமான சிஜி மேக்கிங் என ஏகப்பட்ட தகவல்கள் வெளிவர ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் நீண்டுக்கொண்டிருக்க, அதன்பிறகு தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த சில படங்கள்கூட வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம்

இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதா, அல்லது இன்னும் எடுக்கப்பட வேண்டுமா என்பதெல்லாம் நிச்சயமாக படத்தின் இயக்குநரான கௌதம் மேனனுக்கு மட்டும்தான் தெரியும். விக்ரம் – கௌதம் மேனன் இணையும் படம் என பெரும் எதிர்பார்ப்பில் 2016-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது என்ன நிலையில் இருக்கிறதெனத் தெரியவில்லை. இடைபட்ட காலத்தில் இந்தப் படம் தொடர்பாக வெளியான ஹாலிவுட் தர டீஸரும் ‘ஒரு மனம்’ மெலோடி பாடலும் ரசிகர்களின் ஏக்கத்தை இன்னமும் கூட்டியது.

கோப்ரா

கோப்ரா
கோப்ரா

‘டிமாண்டி காலணி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு டீசண்ட் ஹிட்களைக் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் நடிப்பு அரக்கன் விக்ரமும் இணையும் படம் என்பதால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களுக்குமே ஆர்வத்தைத் தூண்டிய படம் இது. அதற்கேற்ப படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘தும்பி துள்ளல்’ பாடலும் இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. 2019-ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் இன்னமுமே முழுமையடையாமல் இருக்கிறது என்பதும் இன்னமும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது என்பதும்தான் சோகங்கள். 

இந்தியன் 2

இந்தியன் 2
இந்தியன் 2

இதன் சோகக் கதை பெரும் துன்பியல் சம்பவம். 2019-ஆம் ஆண்டு படம் தொடங்கப்பட்டு நன்றாக ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கோர விபத்து, கொரானா, தேர்தல், பிக்பாஸ் என அடுத்தடுத்து இடைஞ்சல்கள் வந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட, அதன் காரணமாகவும் படத்தின் வேலைகள் தாமதமாகத் தொடங்கியது. இவையெல்லாம் போதாதென படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு போன்ற கலைஞர்களின் மரணமும் ஹீரோயின் காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டதும் இவர்கள் நடித்தக் காட்சிகளை திரும்ப ஷூட் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

Also Read – சினிமாவின் வழியாக எப்போதும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசும் பா.இரஞ்சித்துக்கு TamilnaduNow-வின் மேஷ்அப்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top