சாண்டி மாஸ்டர்

சேட்டை புடிச்ச பையன்.. சாண்டி மாஸ்டர் சம்பவங்கள்!

கலா மாஸ்டர் குரூப்புல சந்தோஷ் குமார்னு டான்ஸர் ஒருத்தர் இருந்தாரு. ஒருநாள் அவர் உட்பட பலரையும் சேர்த்து லண்டனுக்கு கலா மாஸ்டர் கூட்டிட்டு போய்ருக்காரு. சந்தோஷ் குமாருக்கு ஃபஸ்ட் டைம் ஃப்ளைட் எக்ஸ்பீரியன்ஸ். அப்போ, கூட வந்த டான்ஸர்லாம் அவரை டேய், சந்தோத்.. இங்க வாடா.. டேய், சந்தோஷ் இங்க பாருடானு சந்தோஷ்.. சந்தோஷ்னு கூப்பிட்டுட்டு இருந்துருக்காங்க. சந்தோஷ் கடுப்பாகி, டேய்.. ஃப்ளைட்லலாம் போய்ட்டு இருக்கேன். என் பெயர் சந்தோஷ் இல்லை. கால் மீ சாண்டினு சொல்லிருக்காரு. இன்ஸ்டாகிராம் போனால், இவரோட ஸ்டெப்ஸ்தான் டிரெண்டு.. இவர் பண்ண சேட்டைகள் தான் டிரெண்டு.. யார் இந்த சேட்ட புடிச்ச பையன் சாண்டி? லியோல நடிகராக எப்படி வாய்ப்பு கிடைச்சுது?

சாண்டி மாஸ்டர்

சாண்டிக்கு டான்ஸ்னா ரொம்ப புடிக்கும். அவங்கப்பா போலீஸ். படிக்கணும், ஸ்கூலுக்கு போனும், பெரிய பொஸிஷன்ல வரணும், டான்ஸ்லாம் எதுக்குனுனு சொல்லிட்டே இருப்பாங்களாம். அதுனாலயே, விட்டை பெருசா டிப்பண்ட் பண்ணாமல்தான் வாழ்ந்துருக்காரு. சின்ன வயசுல ரோடுல, டெத்லலாம்தான் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிருக்காரு. அப்புறம் கோயில் திருவிழால போய் ஆடுறதுனு, டான்ஸ்லயேதான் ஃபோகஸா மனுஷன் இருந்துருக்காரு. அப்புறம், கலா மாஸ்டர்கிட்ட போய் குரூப் டான்ஸரா சேர்ந்துருக்காரு. 50,60 பேர் ஆடுற கேங்க்ல இவரும் ஒரு ஆள். அந்த ரோல கடைசில நின்னு டான்ஸ் ஆடுவாராம். கலா மாஸ்டருக்கு ஒரு தடவை ஒரே நேரத்துல 4 ஷோ வருது. சீனியர் டான்ஸர்ஸ் எல்லாரையும் அதுக்கு அனுப்பி வைக்கிறாங்க. அந்த நேரம் கரெக்ட்டா இன்னொரு ஷோ வருது. அதுல கலா மாஸ்டர்கூட சாண்டிக்கு டான்ஸ் ஆட சான்ஸ் கிடைக்குது. இதை பயன்படுத்திக்கணும்னு மாஸா பெர்ஃபாமென்ஸ் போட்ருக்காரு. யாரு இந்தப் பையன் செமயா டான்ஸ் ஆடுறான்னு, கடைசி ரோல நின்ன பையன்.. கொஞ்சமா முன்னாடி வர ஆரம்பிச்சிருக்கான். சாண்டிக்கு லைஃப்ல மிகப்பெரிய டர்னிங் பாயின்டா அமைஞ்சுது, கலா மாஸ்டர்கிட்ட சேர்ந்ததுதான். அப்புறம் மானாட மயிலாடல சேர்ந்த பிறகு அவரோட கரியர் கிராஃப் இன்னும் அடுத்த லெவலுக்கு போச்சு.

சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாடல சீசன் 7 வரைக்கும் கோரியோகிராஃப் பண்ணாரு. 8,9 வரைக்கும் எண்டர்டெயின் பெர்ஃபார்ம் பண்ற ஆளா இருந்துருக்காரு. அப்புறம் விஜய் டி.விக்கு போய்ட்டாரு. அந்த நேரத்துலதான் கலா மாஸ்டருக்கும் இவருக்கும் சென்டிமெண்ட் கிளாஷ்லாம் வந்துருக்கு. அதுக்கப்புறம் அவரோட கரியர் இன்னும் வேறமாறி ரேஞ்சுக்கு போய்ருக்கு. சின்ன வயசுல இருந்தே, சாண்டிக்கு வாய் ஜாஸ்தி. அதுனால, இவர் இருக்குற இடத்துல எப்பவும் ஃபன் இருந்துட்டே இருக்கும். ஆர்டிஸ்ட்டும் செட்டுக்கு வந்தா, சாண்டி எங்கடானு தேடுவாங்களாம். ஆரம்பத்துல அவங்க அப்பாக்கு புடிக்கலைனு சொன்னேல்ல.. ஆனால், மானாட மயிலாட நிகழ்ச்சிலலாம் பங்கெடுத்த பிறகு, அவங்க வீட்டுல செம ஹேப்பி. எந்த அளவுக்குனா.. மானாட மயிலாட கிராண்ட் ஃபினாலே நேரு ஸ்டேடியம்ல நடந்துருக்கு. அப்போ, இவர் ஸ்பெஷல் பெர்ஃபாமெண்ட்ஸ் சோலோவா பண்ணியிருக்காரு. அந்த ஷோவுக்கு பாதுகாப்புக்காக அவங்கப்பாக்கு டியூட்டி போட்ருக்காங்க. கூட்டத்துல இருந்த பொண்ணுங்க, சாண்டி.. சாண்டினு கத்தியிருக்காங்க. இவர் பார்த்துட்டு, அவன் என்னோட பையன்தாம்மானு சொல்லிருக்காரு. ஃபோன் நம்பர் கேட்ருக்காங்க, அதையும் கொடுத்துட்டு வந்துருக்காரு. அடுத்தநாள், இவருக்கு ஃபோன் வருது. அப்போதான், அப்பா அங்க வந்த விஷயமே இவருக்கு தெரியுது. அப்படியே.. லாலாலா.. மொமண்ட்தான்.

கலைஞர் டி.வி, விஜய் டி.விலலாம் வொர்க் பண்ணும்போதே சிம்புகூட செம ரேப்போல சாண்டி மாஸ்டர் இருந்துருக்காரு. சிம்புவும் தன்னோட படங்கள்ல எதாவது ஒரு பாட்டுல இவரை கோரியோகிராஃபரா கொண்டு வரணும்னு ட்ரை பண்ணியிருக்காரு. ஆனால், யூனியன்ல இல்லாததால கஷ்டமா இருந்துருக்கு. சிம்பு ஃபோர்ஸ் பண்ணி யூனியன் கார்டுலாம் வாங்கினப்பிறகு ஆ அப்டின்ற பேய்ப்படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா பண்னியிருக்காரு. அதுக்கப்புறம் அந்த டைரக்டர் பண்ண இன்னொரு படத்துல பண்ணியிருக்காரு. அடுத்து வாலு படத்துல நிறைய கெட்டப் போட்டுட்டு வர்ற தாறு மாறு சாங் இருக்கும். அதுக்கு கண்டிப்பா சாண்டிதான் பண்ணனும்னு கூட்டிட்டு வந்து பண்ண வைச்சிருக்காரு. சாண்டிக்கும் இமிடேட் பண்றது, கலாய்க்கிறதுலாம் புடிக்கும்ன்றதால அதை சிறப்பாவே பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் நிறைய படங்கள்ல வாய்ப்பு குவியுது. ஆனால், எல்லாமே சின்ன சின்ன படங்கள். இப்படியே போகும்போது ஒருநாள் சாண்டிக்கு ஃபோன் ஒண்ணு வந்துருக்கு. நான் பா.ரஞ்சித் பேசுறேன்னு சொல்லிட்டு, காலா படத்தோட இண்ட்ரோ சாங்கை அப்படியே பிளே பண்ணியிருக்காரு. பாட்டு சூப்பரா இருக்குனா, யாரு பண்ணப்போறாங்கனானு கேட்டதும்.. நீதான்னு ரஞ்சித் சொல்லியிருக்காரு. லைஃப்ல இவ்வளவு பெரிய வாய்ப்பானு நினைச்சு அப்படியே அழுதுட்டாராம். அதுக்கப்புறம் பண்ண படம்லாம் பட்டாஸ்தான். காலால ரஜினி இவரை மாஸ்டர்னு கூப்பிட்டு, டான்ஸ் நமக்கு அவ்ளோ வராது பார்த்து பண்ணுங்கனு சொல்லும் போதுலாம் மனுஷன் அட்டாக்லதான் சுத்தியிருக்காப்ல. சாண்டி கரியரை தூக்கி விட்ட படம், காலாதான்.

ரஜினிக்கு கோரியோகிராஃப் பண்றது கொஞ்சம் ஈஸியான விஷயம். ஆனால், கமலுக்கு பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். பத்தல பத்தல மாதிரி ஒருபாட்டு கரியர்ல அமையுறதே டஃப். அதுல சிக்னேச்சரான ஸ்டெப் போட்டு தூள் கிளப்புனதுலாம் மாஸ். லோகேஷ், சாண்டியை ஆஃபீஸ்க்கு கூப்பிட்டு பாட்டு போட்டு காமிச்சிருக்காரு. சாண்டி கேட்டதும், பாட்டு வேறலெவல்ல இருக்குனு சொல்லிட்டு, சட்டை பட்டனைலாம் கழட்டி, தலைல தூக்கி போட்டு ஸ்டெப் போட்ருக்காரு. அவரு பார்த்துட்டு செமயா இருக்குனு சொல்லிட்டு ஷுட் போய்ருக்காங்க. ரிகர்சல் பண்ணிட்டு, கமல் சார்கிட்ட போய் ஆடி காமிச்சிருக்காரு. ஸ்பாட்ல வந்து பிச்சிட்டாராம். சின்ன பையன் மாதிரி ஆட விட்ருக்கீங்கனு நிறைய பேர் சாண்டிகிட்ட கேட்ருக்காங்க. உண்மையாவே கமலை அந்தப் பாட்டுல பார்க்கும்போது செம ஜாலியா இருக்கும். இதெல்லாம் சாண்டியால மட்டுமே பண்ண முடியுற ஸ்டெப்ஸ். அதுல கமல் நக்கலும் சேரும்போது.. இன்னும் மாஸா இருக்கும்.

சாண்டி மாஸ்டர்

சாண்டியோட படங்கள்ல வர்ற கோரியோகிராஃபைவிட, சாங்ஸ்லாம் கொலாஜ் பண்ணி ஸ்டேஜ்லலாம் ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் ஒண்ணு பண்ணுவாருல. அதுக்கு நிறைய பேர் ஃபேன்ஸா இருப்பாங்க. சாண்டிக்கு அதிகமான ஃபேன்ஸ் வர்றதுக்கு முக்கியமான காரணமே அந்த ஸ்டைல் ஆஃப் டான்ஸ் தான். விஜய் டி.வில ஏய் கலா கலானு கலக்கலான ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் பண்ணியிருப்பாரு. டான்ஸ் ஆடுறது மூலமா இவ்வளவு சிரிக்க வைக்க முடியுமா, வைப் பண்ண வைக்க முடியுமானு சாண்டிதான் நம்மள தோன வைச்சிருப்பாரு. கலா பேசுன டயலாக்லாம் எடுத்துப் போட்டு சும்மா கலாய்ச்சு தள்ளிருப்பாரு. பாட்டுக்கு நடுவுல கரெக்ட்டா டயலாக்ஸ் பிளேஸ் பண்றது, அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப் பண்றதுலாம் சான்ஸே இல்லை. அதேமாதிரி பிக்பாஸ்ல இவர் பண்ண சேட்டைக்குலாம் அளவே இல்லை. கவின், சாண்டி, லாஸ்லி கேங்க் மாதிரி இன்னைக்கு வரைக்கும் இன்னொரு கேங்க் பிக்பாஸ்ல அமையவே இல்லைன்றதுதான் உண்மை. அதுக்கும் ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் ஒண்ணு வெளிய வந்து பண்ணியிருப்பாரு. எல்லாரையும் போட்டு கலாய் கலாய்னு கலாய்ச்சு தள்ளிருப்பாரு. ஆர்.ஆர்.ஆர் ஆடியோ லாஞ்ச்ல சாண்டியைப் பார்த்து ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்ணு எல்லாரும் அரண்டுட்டாங்கனே சொல்லலாம். அவ்வளவு அட்டகாசமா பண்ணியிருப்பாரு. பாகுபலியவே வைச்சு செஞ்சிருப்பாரு.

வாரிசு ஆடியோ லாஞ்சல அவர் பண்ண விஷயம் இன்னும் டிரெண்டிங்க்லதான் இருக்கு. சொல்லாமலே சாங்கை மாஸ்டர் மியூசிக்ல மிக்ஸ் பண்ணி ஸ்டெப் ஒண்ணு போட்ருக்காரு பாருங்க. ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராமும் அதுக்குதான் இப்போ அடிக்ட் ஆகி கிடக்கு. சிவகார்த்திகேயன், தனுஷ்க்குலாம் ஒரு ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் போட்ருப்பாரு. அதுவும் செமயா இருக்கும். இப்படி சொல்லிட்டே போகலாம். அவர் காதல் கதை.. அது இன்னொரு கதை.. பிக்பாஸ் ஃபன்.. இன்னொரு எண்டர்டெயின்மெண்ட். அதெல்லாம் பத்தி பேசுனா வீடியோ பத்தாது.

Also Read – என்னடா கண்ணு கலங்குது.. இந்த சீன்ஸ்லாம் பார்த்தா அழுகை வராமல் இருக்குமா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top