இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் – இவரோட பல பாடல்கள் நம்மளோட ப்ளேலிஸ்ட்ல எப்பவும் இருக்கும். ஆனா இவர் பேரே நிறைய பேருக்கு ரீச் ஆகிருக்குமாங்குறது டவுட்டுதான். ரோட்டுல நடந்துட்டு இருக்கும்போது கிடைச்ச ஒரு பாட்டுக்கு தேசிய விருது கிடைச்சது. அதுவும் இவரோட முதல் படத்துலயே. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதல் முதல்ல ஒரு படம் தயாரிக்குறார். அந்த பாடத்துக்கு தான் மியூசிக் போடாம இவரை போட வச்சிருக்காரு. அது ஏன்? இப்படி பல ஆச்சர்யங்கள் கொண்ட ரகுநந்தன் பத்திதா இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
என்.ஆர் ரகுநந்தன் – ஓட ஒரிஜினல் பேர் சூர்யா. இவருக்கு நாலு வயசுல இருந்து மியூசிக் ஆர்வம் வந்து எப்பவும் பாட்டு கேட்கிறதையே வேலையா வச்சிருந்தவர். ஸ்கூல் படிக்கும்போதே முறையா மியூசிக் கத்துக்கலாம்னு ஆசை வந்திருக்கு. அப்போ பக்கத்துல இருந்த ஒரு டவுன்ல ஒரு மியூசிக் டீச்சர் இருக்காங்கனு தெரிஞ்சுகிட்டு அவர்கிட்ட சேர்ந்து ஹார்மோனியம் கத்துக்கிட்டு இருக்காரு. ப்ளஸ் டூ முடிச்சதும் மியூசிக் காலேஜ்ல சேரலாம்னு நினைக்குறாரு. ஆனா அப்படி சேருறதுக்கு வர்ணம், கீர்த்தனைலாம் தெரிஞ்சுருக்கணும்னு சொல்லிடுறாங்க. அதனால ப்ரைவேட்டா சில பேர்கிட்ட மியூசிக் நல்லா கத்துக்குறாரு. சின்ன சின்ன பக்தி பாடல்கள் போடுறாரு, சீரியல், விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைச்சுக் கொடுக்கிறாரு. அப்போ இதே டிராக்ல இருந்த ஒருத்தர் இவருக்கு ஃப்ரெண்டாகுறாரு. அவர்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி பிரகாஷூம் இவரும் ஒண்ணா சேர்ந்து சின்ன சின்ன ப்ராஜக்ட்ஸ் பண்றாங்க. அப்போவே இவரு வொர்க்லாம் பார்த்துட்டு சப்போஸ் ‘எனக்கு படத்துல வொர்க் பண்ண சான்ஸ் வந்துச்சுனா நீ என்கூடவே வந்துடு’னு ஜி.வி.பி சொல்றாரு. அதே மாதிரியே ஜி.வி.பிக்கு வெயில் படத்துல இசையமைக்க வாய்ப்பு கிடைச்சதும் ரகுநந்தனை தன்னோட அசிஸ்டெண்டா வச்சிக்குறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்கள் வொர்க் பண்றாங்க. வெயில் படத்துல ஆரம்பிச்சு மதராசப்பட்டினம் படம் வரை வேலை பார்க்குறாரு.
இந்த சமயத்துல இயக்குநர் சீனு ராமசாமி தன்னோட அடுத்த படத்துக்கு ஒரு மியூசிக் டைரக்டர் தேடிட்டு இருக்காரு. அப்போ ஒருத்தர் மூலமா என்.ஆர்.ரகுநந்தன் அறிமுகம் கிடைக்குது. அவர்கிட்ட ஒரு சிச்சுவேசன் சொல்லி டியூன் பாடிக்காட்டுங்கனு சொல்ல ஏடி கள்ளச்சி பாட்டை தத்தகாரத்துல பாடிக்காட்டுறாரு. அதைக் கேட்டதுமே சீனு ராமசாமிக்கு ரொம்ப பிடிச்சது. திரும்ப திரும்ப அந்த பாட்டை பாடச் சொல்லி கேட்டுட்டு ஆஹா நமக்கு ஒரு மியூசிக் டைரக்டர் சிக்கிட்டான்னு சொல்லி உடனே கமிட் பண்றாரு. அப்படித்தான் சினிமாவுக்குள்ள இசையமைப்பாளரா அறிமுகம் ஆகுறாரு ரகுநந்தன்.
அதே படத்துல அம்மாவைப் பத்தி ஒரு பாட்டு வேணும் இளையராஜா போடுற மாதிரி இருக்கணும். ஆனா இளையராஜாவோட சாயல் இருக்கக்கூடாதுனு சொல்லிடுறாரு சீனு ராமசாமி. அப்போ திருவல்லிக்கேணில தங்கியிருந்தார் ரகுநந்தன். அவருகிட்ட வண்டி இல்லாம, பஸ் ஏறுறதுக்காக எல்.ஐ.சி வரை டியூன் யோசிச்சுக்கிட்டே நடந்தே வர்றாரு. எல்.சி.ஐ கிட்ட வந்தப்போ ஒரு டியூன் சிக்குது. அதை அப்படியே நோட்ஸ் எழுதிட்டு அன்னைக்கு நைட் போய் டியூன் போடுறாரு. எல்.ஐ.சி முன்னாடி வச்சி கிடைச்ச டியூன் கண்டிப்பா இந்த டியூன் பெரிய உயரத்துக்கு போகும்னு நினைச்சாரம். அந்த டியூனுக்கு வைரமுத்து லிரிக்ஸ் எழுதினதைப் பார்த்ததும் ‘இது கண்டிப்பா அவார்டு சார்’ அப்படினு எல்லார்கிட்டயும் சொல்லிருக்காரு. அந்தப் பாட்டுதான் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..’ பாடல். சொன்ன மாதிரியே இந்தப் பாட்டுக்காக தேசிய விருது கிடைக்குது.
சீனு ராமசாமி – வைரமுத்து – என்.ஆர்.ரகுநந்தன் கூட்டணி சேர்ந்து பண்ணின இன்னொரு மேஜிக்கான சாங்தான் நீர்ப்பறவை படத்துல வர்ற ‘பரபரபர’ சாங். அந்த பாட்டை கேக்குறப்போவே டியூன் ஒரு மாதிரி இதமா மனதை வருடுற மாதிரியும் லிரிக்ஸ் ஏக்கமும் தவிப்புமா மிக்ஸ்டு ஃபீலிங்கைக் கொண்டு வரும். பலபேரோட ஃபேவரிட் லிஸ்ட்ல இந்த பாட்டு இருக்கும். ஜி.வி.பி வெர்சன் ஒண்ணு, சின்மயி வெர்சன் ஒண்ணு, ஷ்ரேயோ கோசல் வெர்சன்னு மூணு ஃப்ளேவர்ல கொடுத்திருப்பாங்க. இந்த படத்தை கொரியால நடந்த ஒரு ஃபிலிம் பெஸ்டிவல்ல திரையிட்டப்போ இந்தப் பாட்டைக் கேட்டு கொரியா மக்கள் கண்ணீர் விட்டு அழுதாங்கனு சீணு ராமசாமி சொல்லிருந்தார். ஜி.வி. பிரகாஷ்க்கு இந்த பாட்டு ரொம்பவே பிடிக்குமாம். அந்த பாட்டுக்கு நான் அடிக்ட் ஆகிட்டேன்னு சொல்வாராம்.
அதனாலதான் ஜி.வி.பிரகாஷ் முதல் முதல்ல ஒரு படம் தயாரிச்சப்போ வேற ஆப்சனே போகாம அந்த படத்துக்கு இசையமைக்கிற வாய்ப்பை ரகுநந்தனுக்கு கொடுத்தார். அந்தப் படம் மதயானைக் கூட்டம். இன்னைக்கு வரைக்கும் ரகுநந்தனோட தி பெஸ்ட் ஒர்க்னா மதயானைக்கூட்டம் சொல்லலாம். அந்த படம் பதிவு பண்ண நினைச்ச வாழ்வியலுக்கு இவரோட இசை செம்மயா சப்போர்ட் பண்ணிருக்கும். ‘உன்னை வணங்காத’ பாட்டே அந்த படத்துக்கு சூப்பரா மூட் செட் பண்ணிக் கொடுத்திருக்கும். ஜி.வி.பியோட குரல்ல ‘கோனக் கொண்டக்காரி’ பாட்டு எப்ப கேட்டாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.
ரகுநந்தனோட ஜி.வி. பி சேருற எல்லா பாட்டுமே ஸ்பெஷலா வந்துடும். சுந்தர பாண்டியன்ல ‘ரெக்கை முளைத்தேன்’, நீர்ப்பறவைல ‘பரபரபர’ இப்படி நிறைய உதாரணங்கள். சமீபத்துல இன்ஸ்டாகிராம்ல டிரெண்ட் அடிச்ச ‘உன் மனைவியா நான் வருவனா’ பாட்டுகூட இவங்க காம்போல வந்ததுதான். மிர்ச்சி சிவாவும் பவர் ஸ்டாரும் நடிச்ச அட்றா மச்சான் விசிலுங்குற படத்துல வர்ற யாரு இவன் பாட்டுல வர்ற வரிதான் இது. அதேமாதிரி சைந்தவியோட இவர் சேரும்போதும் நிறைய மெலடி பாடல்கள் ஹார்ட்டின் விடுற மாதிரி கிடைச்சிருக்கு. சுந்தர பாண்டியன்ல வர்ற நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பாட்டு ஒரு க்ளாசிக் எக்ஸாம்பிள். அதே மாதிரி புலிவால் படத்துல வர்ற நீலாங்கரையில் பாட்டும் செம மெலடி. அதே போல மஞ்சப்பை படத்துல ஹரிஹர சுதனும், வந்தனாவும் சேர்ந்து பாடின ‘பார்த்து பார்த்து’ பாட்டும் ரகுநந்தனோட பெஸ்ட்டு வொர்க்.
Also Read – தமிழ் சினிமாவின் முக்கிய `ரேர் பீஸ்’ ராதாரவி – ஏன்?
தென்மேற்கு பருவக்காற்று மூலமா என்.ஆர்.ரகுநந்தன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 13 வருசம் ஆகுது. நிறைய பாடல்கள் நருக்குனு கொடுத்திருந்தாலும் ரொம்ப கம்மியான படங்கள்தான் பண்ணிருக்காரு. சமீபத்துல அயோத்தி படத்துலகூட பாடல்கள் நல்லா இருந்தது. ரகுநந்தனோட ப்ளஸ்ஸே அவருக்கு க்ளாசிக், வெஸ்டர்ன் மியூசிக் எல்லாமே நல்லாத் தெரியும். சிவரஞ்சனி ராகத்துல ‘ஏடி கள்ளச்சி’ பாட்டை போடவும் தெரியும், வெஸ்டர்ன் க்ளாசிக் இன்ஸ்பிரேசன்ல ‘பரபரபர’ பாட்டு போடவும் தெரியும். தொடர்ந்து சின்ன சின்ன படங்கள்ல கவனம் ஈர்க்குற மாதிரியான பாடல்கள் கொடுக்கிற ரகுநந்தனுக்கு சீக்கிரமே ஒரே ஜாக்பாட் படம் கிடைக்கணும்னு வாழ்த்துவோம்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.