எஸ்.ஏ.ராஜ்குமார்

எல்லாருக்கும் பர்சனல் ஃபேவரைட் எஸ்.ஏ.ராஜ்குமார்… ஏன்?!

80ஸ், 90ஸ்ல ஒரு இசையமைப்பாளரோட பாப்புலாரிட்டிக்கு ஆடியோ கேசட் விற்பனைதான் ஆதாரம். அந்தக் காலக்கட்டத்துல ஆடியோ கேசட் விற்பனைல இளையராஜாவுக்கு டஃப் கொடுத்தவர், ‘இசை வசந்தம்’ என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.ராஜ்குமார் என்பது மிகையில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லாருக்கும அவர் பர்சனல் ஃபேவரிட். பலர் வெளிப்படையா சொல்லாமலயே அவர் பாடல்களுக்கு அடிக்டா இருப்பாங்க. எஸ்.ஏ.ராஜ்குமாரோட தனித்துவத்தையும், அவரோட இசைக்கும் தாலாட்டுக்கும் உள்ள தொடர்பை அலசிகிட்டே அவரோட அப்ஸ் அண்ட் டவுனையும் இந்த வீடியோ ஸ்டோரில பார்ப்போம்.

எஸ்.ஏ.ராஜ்குமார்
எஸ்.ஏ.ராஜ்குமார்

எஸ்.ஏ.ராஜ்குமார் டிப்பிக்கல் சென்னைவாசி. பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே சென்னைதான். அப்பா ஒரு மேடைப் பாடகர். அவர் மூலமாதான் பள்ளிப் படிப்பிலேயே இசை ஆர்வம் வருது. ஒரு ஓட்டலில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. எஸ்.ஏ.ராஜ்குமார் தனது சொந்தப் பாடல் ஒன்றை எடுத்துவிடுகிறார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த இரட்டை இயக்குநர்களான ராபர்ட் – ராஜசேகர் இருவரும் இம்ப்ரஸ் ஆகி, அப்படியே கொத்திட்டுப் போறாங்க.

Also Read – சூப்பர் குட் பிலிம்ஸுக்கும் குட் நைட் கம்பெனிக்கும் உள்ள கனெக்‌ஷன் தெரியுமா?

1987-ல் வெளிவந்த ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார்தான் மியூஸிக். மொத்தம் ஒன்பது பாடல்கள். ஒன்பதும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த ஒன்பது பாடல்களை எழுதியதும் எஸ்.ஏ.ராஜ்குமார்தான். யெஸ்… இவர் ஒரு கவிஞரும் கூட. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் யார்ரா இது?-ன்னு கேட்க வைத்தன அத்தனைப் பாடல்களும். இன்னொரு பக்கம், இளையராவுக்கு டஃப் கொடுக்குற அளவுக்கு டெக்னிக்கலி ஸ்ட்ராங்கான ஒரு யங் மியூசிக் டைரக்டர் கிடைச்சுட்டார்னு தமிழ் சினிமா இண்டர்ஸ்ட்ரியும் பேச ஆரம்பிச்சுடுச்சு.

ஆனா, அந்த ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ படத்தின் மியூசிக் டீம்ல இருந்த சிலர்தான் அடுத்தடுத்த ஜெனரேஷனை மியூஸிக்கை கட்டிப் போடப் போறாங்கன்றது அப்ப யாருக்கும் தெரிஞ்சிருக்காது… யெஸ், அந்தப் படத்துலதான் சப்போர்ட்டிங் சைட்ல வித்யாசாகரும், கீ-போர்டு ப்ளேயர்களாக ஏ.ஆர்.ரஹ்மானும், மணி ஷர்மாவும் இருந்தாங்க. இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திய படம் அது.

ஜெயச்சந்திரன் பாடிய ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ன்ற பாட்டெல்லாம் அப்போது புதிய பாய்ச்சல்னு சொல்லலாம். ‘பூங்காற்றில் ஆடும்’ பாட்டை மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். மத்தவங்க பாடல்களை மேடையில் பாடி வந்தவரான எஸ்.ஏ.ராஜ்குமாரோட அப்பா, தன் மகன் இசைல மலேசியா வாசுதேவன் பாடுறதை கேள்விப்பட்டு, அப்போ அவருக்கு ஏற்பட்ட பெருமிதத்துக்கு அளவே இல்லை. எஸ்.ஏ.ராஜ்குமாரின் முதல் அச்சீவ்மென்ட்டே அதுதான். ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ படத்துல இசையமைப்பாளர், பாடலாசிரியரா மட்டுமின்றி ஒரு பாடகராகவும் முத்திரைப் பதிச்சார். ஆம், ‘ஏபுள்ள கருப்பாயி’ பாடல் அவர் பாடி, பட்டிதொட்டியெல்லாம் சவுண்ட் ஸ்பீர்க்கர்ல கேட்க ஆரம்பிச்சுது.

அதுக்கு அடுத்த வருஷமும் ராபர்ட் – ராஜசேகர் இருவர் டைரக்‌ஷன்ல வெளிவந்த ‘மனசுக்குள் மத்தாப்பூ’ படம், தமிழ் சினிமாவில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இடத்தை கெட்டியாக உறுதி செய்தது. இந்தப் படத்துல ‘ஓ… பொன் மாங்குயில்’, ‘பூந்தென்றலே..’ பாட்டுக்கெல்லாம் செம்ம ரெஸ்பான்ஸ். 1990 இவருக்கு முக்கியமான ஆண்டு. அந்த வருஷத்துலதான் விக்ரம் – எஸ்.ஏ.ராஜ்குமார் காம்போ உதயமாகிறது. யெஸ். ‘புது வசந்தம்’ படம்தான். அந்தப் படமும் சரி, பாடல்களும் சரி தமிழ்நாட்டுல ஒரு கலக்கி கலக்கி மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டிங்கை ஏற்படுத்துச்சு.

‘இது முதல் முதலா வந்த பாட்டு…’, ‘ஆயிரம் திருநாள்’, ‘பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா..’, ‘போடு தாளம் போடு’..-ன்னு ஒரு மியூஸிகல் ஹிட் அந்தப் படம்.

அப்புறம் நிறைய படங்கள், நிறைய பாடல்கள்னு கிராஃப் ஏறிட்டே இருந்துச்சு. 93-ல இருந்து மூணு வருஷம் எஸ்.ஏ.ராஜ்குமார் லைஃப்ல லாக்டெளன்னே சொல்லலாம். டோட்டலா டவுன். இடையில விக்ரம்னு சிற்பி, ரஹ்மான்னு போயிட்டாரு.

96 வருது. மீண்டும் விக்ரமனோட இணைகிறார். அப்போ வளர்ந்து வர்ற ஒரு கமர்ஷியல் சினிமா இளம் நடிகரோட படம். அதே தான் ‘பூவே உனக்காக’. அந்தக் காலக்கட்டத்துல காதலும் காதலும் நிமித்தமாக வலம் வந்த யூத்துகளுக்கு காதல் தேசிய கீதமே இந்தப் பட பாடல்கள்தான். ‘சொல்லாமலே யார் பார்த்தது…’ பாட்டெல்லாம் ‘பம்பாய்’ படத்தின் ‘கண்ணாளனே…’ பாட்டை விட கன்னாபின்னா ஹிட். லவ் ஃபெயிலியர் ஆனவங்க எல்லாம் தங்கள் லவ்வோர கல்யாணத்துக்குப் போய் ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாட்டை பாடித் திரிஞ்சிட்டு இருந்தாங்க.

அப்புறம் விக்ரமன் படத்தைத் தாண்டி ஆர்.பி.செளத்ரி தயாரிக்கிற எல்லா மொழி படங்களிலும் எஸ்.ஏ.ராஜ்குமார் இருந்தார். கிட்டத்த 30 ப்ளஸ் படங்கள்ல ஒரே தயாரிப்பாளர் படங்கள் பண்ணது தனி ரெக்கார்டுன்னே சொல்லலாம்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்துல ஆஸ்கர் வரை போன ‘நாட்டு நாட்டு’ மியூஸிக்கோட ‘பூவே உனக்காக’ படத்துல வந்த ‘மச்சினிச்சி வர்ற நேரம்’ பாட்டு ஒப்பிடப்பட்டு மீம்ஸ் எல்லாம் கிரியேட் ஆச்சு. உண்மை என்னன்னா, கீரவாணி இன்ஸ்பையர் ஆன டைரக்டர்களில் எஸ்.ஏ.ராஜ்குமாரும் ஒருவர்ன்றதுதான் மறுக்க முடியாத நிஜம். அந்த அளவுக்கு திரையிசையில் எஸ்.ஏ.ராஜ்குமார் கெத்து.

‘பூவே உனக்காக’ படத்துக்கு அப்புறம் திரும்பவும் கிராஃப் செம்மயா ஏறுது. அடுத்த வருஷமே ‘சூர்ய வம்சம்’ வருது. தமிழக அரசின் விருதோட சேர்ந்து அந்த கிராஃப் அடுத்த லெவலுக்குப் போவுது. ‘சூர்ய வம்சம்’ பாடல்கள் எந்த அளவுக்கு ஹிட் ஆச்சுன்னு எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. இன்றளவும் நாம் கடந்து செல்லும் பாடல்களைக் கொண்ட படமா அது இருக்கு.

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலா… காதலா… நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…-ன்னு ஒவ்வொரு பாட்டும் தமிழ் மக்கள் டீஃபால்டா முணுமுணுக்குற பாட்டா மாறிச்சு. தாம்பரம் தாண்டி பஸ்ல ஏறினாலே அப்போல்லாம் இந்தப் பாட்டுங்கதான் ஓடும்.

அப்புறம் 98-ல அஜித்துக்கு ப்ரேக் கொடுத்த ‘அவள் வருவாளா’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘நீ வருவாய் என’ பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட். ‘சேலையில வீடு கட்டவா’ பாட்டுக்கு இன்னிக்கு வரைக்கும் ரீல்ஸ் விட்டுட்டு இருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. ஹரிஹரன் வாய்ஸ்ல ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…’-ம்லாம் காலத்தால் அழியாத கானங்களில் ஒண்ணு.

அதே வருஷத்துல ‘மறு மலர்ச்சி’ படத்துல வர்ற ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு…’ போன்ற பாடல்கள் எல்லாம் இன்றும் பல கிராமங்களில் தேசிய கீதமா ஓடிட்டு இருக்கு.

99-லும் வரிசையால பல படங்களுக்கு இசையமைச்சார். அந்த வருஷத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்தப் படத்தோட பாடல்கள் எந்த அளவுக்கு ஹிட்னா, 90ஸ்ல அதிகம் விற்பனையான ஆடியோ கேசட்டோட படங்களை லிஸ்ட் எடுத்தா, அதுல நிச்சயமா டாப் 5-ல இந்தப் படம் இருக்கும். ‘தொட தொட எனவே…’, ‘இன்னிசை பாடிவரும்…’, ‘மேகமாய் வந்து போகிறாய்’…-ன்னு எல்லாமே செம்ம ஹிட். இவர் பீக்ல இருந்த காலத்துல அஜித், விஜய் வளர ஆரம்பிச்சாங்க.

99-ல் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இவரோட பாடல்களில் ஒண்ணு… ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துல வர்ற ‘கண்ணுக்குள்ளே உன்னை வெச்சேன் கண்ணம்மா’ பாட்டுதான். நம்மளை கலங்கடிக்கிற மெலடி அது.

அப்புறம் ஒற்றை நாணயம் பாட்டு வந்த ஆனந்தம், புன்னகை தேசம், பிரியமானவளே, வசீகரா, பிரியமான தோழி-ன்னு பல ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தார்.

சொல்ல முடியாது. மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து, ஹிண்டஸ்டிரி ஹிஸ்டரி மாத்தி எழுதினாலும் ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்கு சரக்கு உள்ள இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

சரி, இப்போ இவரோட ஸ்பெஷாலிட்டியை விறுவிறுன்னு பார்ப்போம். ஏன் இவர் எல்லாருக்குமே ஃபேவரிட்ன்றதுக்கான காரணங்களை இதுல நீங்க தெரிச்சிக்கலாம்.

எஸ்.ஏ.ராஜ்குமாரோட பெரும்பாலான பாடல்கள் ஹம்மிங்கோட தான் ஆரம்பிக்கும். இளையராஜா அப்பப்ப யூஸ் பண்ற தானனா மாதிரிதான் இவருக்கு லா லா லா… விக்ரமனுக்கு இது ரொம்ப பிடிக்கும்ன்றதால லா லா லாவை அவர் அதிகம் யூஸ் பண்ணுவார். அதனாலயே டிஃபால்டா இது ஒரு பிராண்டாவே மாறிடுச்சு.

அப்புறம், கவிஞரா லிரிக்ஸ் எழுதக் கூடிய மிகச் சில இசையமைப்பாளர்கள் இவர் ஒருவர். ஒரு பாட்டுக்கு மெட்டு அமைக்கும்போது, பல்லவிக்கு இவரே லிரிக்ஸ் எழுதிடுவார். அதுவே செம்மயா இருக்குறதாலே அவர் படத்துல பாட்டு எழுதுற இளம் பாடலாசிரியர்கள் அந்த பல்லவியையே யூஸ் பண்றதும் பல முறை நடந்துருக்கு. இவரே ஒரு கவிஞர் என்பதாலோ என்னமோ, இவர் பாடல்களில் வரிகள் அனைத்துமே தெளிவான தமிழில் இருக்கும். இவர் இசையமைத்து லிரிக்ஸ் எதுவும் புரியலைன்னு யாராவது சுட்டிக்காட்டினா, அவருக்கு பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் ஈடுபாட்டை தன்னோட இசையில காட்டியிருக்கார்.

எளிமை… இதான் இவரோட மிக முக்கிய தனித்துவம்னே சொல்லலாம். இவரோட இசையும் சரி, பாடல் வரிகளும் சரி ரொம்ப ரொம்ப எளிமையானதாக இருக்கும். அதனால்தான் எல்லா மக்களையும், குறிப்பா எளிய மக்களுக்கு இவரோட இசை அதிகமாவே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. இசையைப் பொறுத்தவரைக்கும் எளிமை என்பதுதான் டஃப்பான விஷயம். இசையை எளிமையா போடணுன்னா அதுக்கு ஜீனியஸா இருக்கணும்ன்றதையும் இங்கே குறிப்பிடணும்.

எஸ்.ஏ.ராஜ்குமார்
எஸ்.ஏ.ராஜ்குமார்

யெஸ், எளிமையா இசையைக் கொடுத்து ரசிக்க வைக்கிற எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஒரு ஜீனியஸும் கூட. இசை நுணுக்கங்கள் அறிந்த ஜீனியஸும் கூட. இதுக்கு ஒரே ஒரு உதாரணம், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல வர்ற ‘இருபது கோடி நிலவுகள்’ பாட்டை சொல்லலாம். அந்தப் பாட்டுல நூறு கோடி பெண்கள் உண்டு-னு டபுள் வாய்ஸ் ஒட்டிட்டு வரும். அதெல்லாம் அப்போ சான்ஸே இல்லை.

எல்லாத்துக்கும் மேல இவரோட பல மெலடி பாடல்கள் காலத்தால் அழியாத தன்மை என்று சொல்லக் கூடிய எவர்லாஸ்டிங் தன்மை கொண்டதா இருக்குறதுக்கு முக்கியமான காரணம், தாலாட்டு. யெஸ்… இவரோட அனைத்து ரொமான்ட்டிக் மெலடி சாங்லயும் தாலாட்டுப் பாடல்களுக்கு உரிய அத்தனை தன்மைகளும் இருக்கும், லா லா லா உள்பட. அதனாலதான் நம் மனசை ரொம்ப ஈஸியா வசீகரத்து, நம் Mood-ஐயும் இந்தப் பாடல்கள் இதமாக்கி விடுகிறது.

80ஸ், 90ஸ் மட்டுமல்ல… 2கே கிட்ஸுக்கு கூட இவரோட பாடல்கள் அடிக்‌ஷன் கொடுக்கலாம். ஜஸ்ட் இவரோட ஹிட் ப்ளே லிஸ்டை நைட்ல ஹெட்போன் போட்டு கேட்டுப் பாருங்க. ரிசல்ட் தெரியும். எஸ்.ஏ.ராஜ்குமார் கிட்ட நீங்க பார்க்குற ஸ்பெஷாலிட்டி என்னென்ன? அவர் மியூஸிக்ல உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள் என்னென்னன்னு கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top