ஒரு காலத்துல அவரைப் பார்த்து அலறாத ஆளே கிடையாது. அசால்ட்டா நினைச்சினு இருக்கீங்கோனு RX 100 பத்தி கேட்டா 70’ஸ், 80’ஸ் ஏன் 90’ஸ் கிட்ஸ்லாம் கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ராயல் என்ஃபீல்ட் ஃபேன்ஸ்லாம் தள்ளி நின்னு, “சுள்ளான் மாதிரி இருக்கான். நமக்கே டஃப் கொடுப்பான் போலயே”னு மிரண்ட தருணங்கள் எல்லாம் உண்டு. இப்படி பார்க்கவே முடியலணா, நீ திரும்ப வரணும்னா, ஸ்டைலா, கெத்தா, நீ யார்னு இவனுங்களுக்கு காட்டணும்னானு ஃபேன்ஸ்லாம் பல வருஷமா கூப்பிட்டுட்டு இருந்தாங்க. கடைசில ஜெயிச்சிட்டோம் மாறானு ஆர்.எக்ஸ் 100 வரப்போகுதுனு தெரிஞ்சதும், தலைகீழ நின்னு குதியாட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க. வந்துட்டான், வந்துட்டான்னு பி.ஜி.எம்லாம் போட்டு மாஸ் பண்றாங்க. அப்படி அந்த RX 100 பைக்ல என்னதான் இருக்கு? ஏன் தடை பண்ணாங்க? அந்த பைக் வைச்சு என்னலாம் பண்ணாங்க?
யமஹா ஆர்.டி 350 பைக் லாஞ்ச் ஆனப்பிறகு, அதிகளவில் வரவேற்பு பெறலை. ஃபெயிலியர் மாடலா போகுது. அந்த சமயத்துலதான் அடுத்து என்னப் பண்ணலாம்னு யோசிக்கும்போது, டி.வி.எஸ் ஏ.எக்ஸ் 100 பைக் சக்ஸஸ் பத்தி பார்க்குறாங்க. அதேமாதிரி என்னப் பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான் ஆர்.எக்ஸ் 100 ஐடியாவை யமஹா நிறுவனம் பிடிக்கிறாங்க. 1985-ல் நவம்பர் மாசம் இந்த பைக்கை லாஞ்ச் பண்றாங்க. மற்ற பைக்களை விட அன்னைக்கு குறைந்த விலைல, மிடில் கிளாஸ் பசங்களை எய்ம் பண்ணி பைக்கை இறக்குறாங்க. ஆனால், அவங்க நினைச்சதைவிட இந்த பைக் மிகப்பெரிய அளவுல இளைஞர்கள் மத்தில வரவேற்பு பெறுது.
கிட்டத்தட்ட 10 வருஷம் யாராலயும் இந்த பைக் சாதனையை அடிச்சுக்க முடியலை. 100சிசி-யில் 100 கி.மீ வேகம் செல்லக்கூடிய ஒரே பைக் இந்த பைக் மட்டும்தான். இந்த பைக் பத்தி தேடிட்டு இருக்கும்போது ஒருத்தர் செமயா இந்த பைக் மெமரி மொமண்ட எழுதியிருந்தாரு. என்னனா, இந்த பைக் தயாரிக்கிறதை 1996-லலாம் நிறுத்திட்டாங்க. ஆனால், அந்த பைக் வந்த புதுசுலதான் அவரு காலேஜ் படிச்சிருக்காரு. பைக் இவரும் வாங்கி காலேஜ்லாம் ஓட்டிட்டுப் போய்ருக்காரு. செம பீக்ல இருக்கும்போது இந்த பைக்கை தடை பண்ணதும், நிறைய பேருக்கு பைக் கிடைக்காமல் போய்ருக்கு. இவர்கிட்ட போய் கேட்ருக்காங்க. லட்சம் ரூபாய் தறேன் இந்த பைக்கை எனக்கு கொடுத்துருங்கனு சொல்லியிருக்காங்க. முடியவே, முடியாதுனு சொன்னதும், காரணம் என்னனு கேட்ருக்காங்க. “நான் காலேஜ் படிக்கும்போது அந்த பைக் வாங்குனேன். எப்போலாம், அந்த பைக் எடுத்து ஓட்டுறேனோ, அப்போலாம் காலேஜ்க்கு போற மாதிரி ஃபீல் ஆகும். காலேஜ் மெமரீஸ் வந்து போகும்”னு சொல்லுவாரு. கேட்கவே செம இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு.
RX 100-க்கு நிறைய பெயர் இருக்கு. அதுல ஒண்ணு பாக்கெட் ராக்கெட். ஏன்னா, இதோட மொத்த வெயிட்டே 98 கிலோதானாம். அதுமட்டுமில்லை உருவத்துக்கும் அவன் குரலுக்கும் சம்பந்தமே இல்லைனு சொல்ற மாதிரி, அந்த பைக்கோட லுக்குக்கும் சவுண்டுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆக்சிலரேட்டரை முறுக்குனா அப்படி சீறிப்பாயும். அதனாலதான், அதுக்கு பாக்கெட் ராக்கெட்னு பெயர் வைச்சிருக்காங்க. அந்த சவுண்ட் கேட்டுட்டு பைக் ஓட்டுறதுனா அப்பவும், இப்பவும், எப்பவும் கெத்துதான். இன்னைக்கும் அந்த சவுண்ட் மட்டும் தனியா தெரியும். ரொம்ப ஓவர் ஸ்பீட் போனால், காத்து அடிக்கிற வேகத்துக்கு கவுந்து விழுந்துரும்னு சொல்லுவாங்க. அதுனால, அந்த பைக் ஓட்டுறதுல நிறைய ஆபத்தும் இருக்கு. இதுனால, எமன்னும் அந்த பைக்கை சொல்லுவாங்க. ஆனால், என்ன நிறைய பேரோட ஃபேவரைட் எமனா இந்த பைக் இன்னைக்கும் சுத்திட்டு இருக்கு. இந்த பைக்கோட விலை அன்னைக்கு கிட்டத்தட்ட 20,000 ரூபாய்தான். ஆனால், இன்னைக்கு இந்த பைக்கை பல லட்சம் கொடுத்து வாங்ககூட ஆள் இருக்காங்க. அதுவும் பிளாக், ரெட் கலர்னா நிறைய பேரோட ஃபேவரைட். மக்களோட வாழ்க்கைல மட்டுமில்ல படங்கள்லயும் RX 100kக்கு தனி இடம் இருக்கு. காலா படத்துலகூட RX 100 வரும். சவுத் இந்தியன் மூவீஸ்ல பல்சர் பைக் கிரேஸ் வரதுக்கு முன்னாடி, RX 100 கிரேஸ்தான் இருந்துச்சு. பெரும்பாலும் வில்லன் கேரக்டர்ல வர்றவங்க இந்த பைக்கை வைச்சிருப்பாங்க. ஆம்னி வேன் வந்தா கடத்திட்டு போய்டுவாங்கன்ற மாதிரி, படத்துலயெல்லாம் இந்த பைக் வந்தா ஏதோ கொல்லையடிக்க போறாங்க, இல்லைனா, பைக் ரேஸ் ஓட்டப் போறாங்கனு அர்த்தம். கொடுமை என்னனா, நிஜத்துலயும் அப்படிதான் இருந்துச்சு. படங்கள்ல ஸ்டண்ட் சீன்லயும் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு பைக்கும் RX 100 பைக்கும் ஓட்டுனா செம பெருமையா இருக்கும்னு ஆண்கள் நினைச்சு ஓட்டுவாங்களாம். ஆனால், இன்னைக்கு நிறைய பொண்ணுங்களுக்கு இந்த ரெண்டு பைக்கும் புடிக்கும். சுற்றுசூழல் நலன் கருதிதான் இந்த பைக்கை தடை பண்ணாங்க. அதுக்கப்புறம் இதோட டிமேண்ட் இன்னும் அதிகமாயிடுச்சுனே சொல்லலாம். அந்த பைக்குக்கு இருக்குற ரசிகர்களைப் பார்த்து RXG 132-னு அடுத்து பைக் ஒண்ணை லாஞ்ச் பண்ணாங்க. அதுல நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. இதனால, அந்த பைக் பெரிய அளவில் வரவேற்புலாம் பெறலை. RX 100 பைக் பத்தி நிறைய ரூமர்கள் எல்லாம் இருந்துச்சு. அதுல ஃபஸ்ட், செயின் பறிக்கிறவங்கலாம் அதிகமா இந்த பைக்கை யூஸ் பண்றதாலதான் தடை பண்ணிட்டாங்கன்றது. காரணம் அது இல்லை. ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி சுற்றுசூழல் பிரச்னை காரணமாகதான் தடை பண்ணாங்க. இந்த பைக் 140 கி.மீ ஸ்பீட் போகும் தெரியுமானுலாம் சொல்லுவாங்க. ஆனால், அதோட அதிக பட்ட கெபாசிட்டியே 120 கி.மீதானாம். இப்படி சில ரூமர்கள் இந்த பைக்கை சுத்தி இருக்கு. சும்மா RX 100 மெமரீஸ்னு கூகுள்ல சர்ச் பண்ண அவ்வளவு கதைகள் வருது. ஒரு பையன் ஸ்கூல் படிக்கும்போது அப்பாகிட்ட இந்த் பைக் வாங்கி கேட்ருக்கான். அப்பாவும் இந்த பைக் எங்கயாவது கிடைக்குமானு நிறைய இடங்கள்ல தேடிட்டு இருந்துருக்காரு. எங்கயும் கிடைக்கல. இந்தப் பையன் வெளிய எங்கயாவது கிளம்பி போனா, RX 100 ஸ்டார்ட் பண்ணு ஓட்டிட்டுப் போற மாதிரி கனவு கண்டுட்டே போவானாம். அந்த பைக்ல போறதை நினைச்சுப் பார்த்தாலே அப்படி சொர்க்கத்துல போற மாதிரி அவனுக்கு ஃபீல் ஆகுமாம். கடைசி வரை அவனுக்கு அந்த RX 100 கிடைக்கல. அதுக்கப்புறம் RX-ல வேற மாடல் ஒண்ணு கிடைச்சுருக்கு. அதை வாங்கி பெயிண்ட் பண்ணி, சவுண்ட்லாம் கூட்டி ஓட்டிருக்கான். அவன் போகும்போது எல்லாரும் திரும்பி அவனை பார்க்குறதைப் பார்த்து அவ்ளோ ஹேப்பி ஆயிடுவானாம்.
Also Read : ஏமாற்றமளிக்காத த்ரில்லர் `ஈரம்’ – ஏன் தெரியுமா?
அப்பா கேட்டாக்கூட அந்த பைக் ஓட்ட அவன் கொடுக்க மாட்டானாம். வீட்டுல உள்ளவங்க அதை வித்துட்டு கார் வாங்கிடலாம்னு சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருக்கான். அவ்வளவு பெர்சனலா அந்த பைக்கூட கனெக்ட் ஆயிருக்கான். அதேமாதிரி இன்னொருத்தரும் தன்னோட கதையை ஷேர் பண்ணியிருந்தாரு. அந்த பைக் வாங்கி ஓட்டணும்னு அவர் ரொம்ப நாளா ஆசைப்பட்டுட்டு இருந்துருக்காரு. அப்பாக்கிட்ட கேட்டதும், அவரோட முதல் மாச சம்பளத்துல அந்த பைக்கு 1985-ல வாங்கி கொடுத்துருக்காரு. அதுனால, அந்த பைக் இன்னும் அவர் வாழ்க்கைல ஸ்பெஷலான இடத்துக்கு போய்ருக்கு. இன்னைக்கும் அவர் போனா ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி எல்லாருமே அந்த பைக் பார்த்து பொறாமை படுவாங்களாம். இன்னொருத்தர் அந்த பைக் வாங்குனா என்னலாம் நடக்கும்னு வேடிக்கையா போஸ்ட் ஒண்ணு பாயிண்டா போட்ருந்தாரு. “அவ ரொம்ப குடிப்பா, நிறைய புகை விடுவா. போலீஸ் எந்த காரணமும் இல்லாமல் உங்களை புடிப்பாங்க. அவளை மேக் அப் பண்ண வேண்டிய விஷயங்கள்லாம் சீக்கிரம் கிடைக்காது. அவங்க உங்க கைக்கு வந்துட்டாங்கனா, வேற கைக்கு போகவே மாட்டாங்க. அவ்வளவு புடிச்சுப்போகும். அவங்க கூட இருக்குறவங்களை பார்த்தா பொறாமைலாம் இல்லை. ஆனால், லைட்டா”னு போஸ்ட் போட்ருந்தாரு. பெண்ணியவாதிகள்லாம் சண்டைக்கு வருவாங்க இப்போ. அவர் அவ்வளவு பைக்க நேசிக்கிறாருனு இதன் மூலமா சொல்ல வர்றாருப்பா. வேற ஒண்ணும் இல்லை. இப்படி RX 100 கதைகளை சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம். அவ்வளவு ஷேர் பண்ணி வைச்சிருக்காங்க.
RX 100 உங்களுக்குலாம் வெறும் பைக், ஆனால், எனக்குலாம் எமோஷன் தெரியுமா?னும் பெரிய அளவில் பொங்கி வைச்சிருந்தாங்க. அந்த பைக் திரும்ப வரப்போகுதுனு தெரிஞ்சதும் இவங்கலாம் சந்தோஷப்பட்ட அளவுக்கு அளவே இல்லை. RX 100 உங்களுக்கும் புடிக்குமா? நீங்க அதை வைச்சிருக்கீங்களா? உங்க கதையை கமெண்ட்ல சொல்லுங்க.