குறிச்சு வைச்சுக்கோங்க… நம்பிக்கை தரும் ஸ்டார் கிட்ஸ்!

சினிமா ஸ்டார் கிட்ஸ்… இவர்கள் சினிமாவிற்குள் நுழைவது ஈஸியாக இருந்தாலும் அதில் வெற்றியடைந்து அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வது ரொம்பவே சிரமமானது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஸ்டார் கிட்ஸ் சினிமாவிற்குள் வருவது வழக்கம். அப்படி அடுத்து வரவிருக்கும் ஸ்டார் கிட்ஸில் யாரெல்லாம் ப்ராமிசிங்காக இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம்.

நந்தன் ராம்

Nandan Sirpy
Nandan Sirpy

90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளரான சிற்பியின் மகன்தான், நந்தன் ராம். இவரை ஒரு நடிகராக மாற்றியவர் புதியகீதை படத்தின் இயக்குநர் ஜெகன். அவர்தான் பார்க்கிறதுக்கு நல்லா இருக்கான்; நடிக்க வந்தா நல்லாயிருக்கும் என்று நடிகை கலைராணியிடன் சேர்த்துவிட்டு நடிப்பை கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டில் பள்ளி பருவத்திலே என்கிற படம் மூலம் அறிமுகமானார் நந்தன். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டாலும், படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு பொறுமையாக நல்ல இயக்குநரின் படத்தில் நடிக்கலாம்னு இருந்தவருக்கு வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயில் படத்தில் இவர் நடித்த ராக்கி என்கிற கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டிருந்தார். இந்த கேரக்டரில் நடித்தது இவர்தானா என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தொடர்ந்து நல்ல, நல்ல கதைகளிலும், நல்ல இயக்குநரின் படங்களிலும் நடித்தால், நிச்சயமாக நந்தன் ஒரு நல்ல நடிகராக வலம் வருவார்.

ஹர்ஷவர்தன்

பல எவர்கிரீன் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த ஃபேவரைட் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்தான் ஹர்ஷ வர்தன். சிறு வயதில் இருந்தே கலையின் மீது ஆர்வமாக இருந்த ஹர்ஷ வர்தன், கல்லூரியில் படிக்கிற காலத்தில் கல்ச்சுரல்ஸ் நாயகனாக இருந்திருக்கிறார். இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது, ஆடுவது என ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் பாக்கேஜ்தான் இவர்.

Harshavardhan
Harshavardhan

இவரது இன்ஸ்டா பக்கத்திற்குள் சென்றால் மைக்கேல் ஜாக்சனைப் போல் இவர் ஆடிய பல வீடியோக்களையும், இவரது தந்தை இசையமைத்த பல மெலடி பாடல்களின் கவர் வெர்ஷன்களையும் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக பாடகி ஸ்வேதா மோகனோடு இவர் சேர்ந்து பாடிய அழகூரில் பூத்தவளே கவர் வெர்ஷனும் சிவாங்கியோடு சேர்ந்து பாடிய நான் வரைந்து வைத்த சூரியன் கவர் வெர்ஷனும் பலரது ஃவேவரைட். இவர் பாடும் கவர் வெர்ஷன்களில் இவரது ஸ்கிரீன் ப்ரசன்ஸும் ரொம்பவே அழகாக இருப்பதால் ஹர்ஷ வர்தன் நடிகராகவும் படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இப்போதுவரைக்கும் இசை சம்பந்தப்பட்ட வேலைகளையே செய்து வருகிறார்.

ஜேசன் சஞ்சய்

Jason Sanjay
Jason Sanjay

இயக்குநர் எஸ்.ஏ.சியின் மகனாக இருந்து நடிகரானார் விஜய்; நடிகர் விஜய்யின் மகனாக இருந்து இயக்குநராக ஆசைப்படுகிறார் ஜேசன் சஞ்சய். திருமலை படத்தில் விஜய் சொன்ன ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ங்கிறது இதுதான் போல. சரி நாம கதைக்கு வருவோம். ரஷ்யாவில் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சிட்டு இருக்குற விஜய்யின் பையன் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அவருக்கு இயக்குநர் ஆவதுதான் குறிக்கோள் என்றும் அவரது தாத்தா எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் சொன்னார். அதுமட்டுமில்லாமல், ஜேசன் சஞ்சய் இயக்குகிற முதல் படத்தில் அவர் விஜய் சேதுபதியைத்தான் இயக்க ஆசைப்படுவதாகவும் எஸ்.ஏ.சி சொல்லியிருந்தார். இயக்குநர் மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் சஞ்சய் மாறலாம். விஜய் மாதிரியே முகம்; நல்ல உயரம்; உயரத்திற்கேற்ற உருவம் என ஹீரோ மெடிரியலாக இருக்கிறார். இவர் ஆடிய ஒரு டான்ஸ் வீடியோவும் ஒரு சமயத்தில் வைரலானது. அப்பா விஜய்யைப் போலவே இவரும் டான்ஸில் கில்லியாக இருப்பது விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆக, இயக்குநரோ நடிகரோ எதுவாக இருந்தாலும் அதில் ஜொலிப்பார் என்றே தெரிகிறது.

சூர்யா

Surya
Surya

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா, ஏற்கெனவே நானும் ரெளடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நானும் ரெளடிதான் படத்தில் ஒரே ஒரு சீனில் வந்திருந்தாலும், சிந்துபாத் படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் காமெடி, ஆக்‌ஷன் என எல்லாமே முயற்சி செய்திருப்பார். அதை நன்றாகவும் செய்திருப்பார். இந்தப் படத்திற்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமல் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்திவரும் சூர்யா, ஒரு ஹீரோவாக மாற தன்னை உருமாற்றிக்கொண்டும் இருக்கிறார். உடல் எடையை குறைத்து விட்டார்; முறையாக சண்டை மற்றும் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டிருக்கிறார். மானாட மயிலாட கோகுல் இவருக்கும் ஜிம்னாஸ்டிக் சொல்லிக்கொடுக்கும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும். அதை வைத்தே சூர்யா எப்படி ஒரு நாயகனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

Also Read – யார் இந்த ஜென்ஸி; இத்தனை ஹிட் பாடல்களை பாடியிருக்காங்க!

ஹசல் ஷைனி

hazel shiny
hazel shiny

அமலா பால், லட்சுமி மேனன், கயல் ஆனந்தி என தமிழ் சினிமாவுக்கு பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் பிரபு சாலமன் வீட்டில் இருக்கும் ஹீரோயின் மெட்டீரியல்தான்,ஹசல் ஷைனி. இவர் ஒரு டிக் டாக் பிரபலம். டிக் டாக் தடைக்குப் பிறகு தற்போது இன்ஸ்டாவில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து வருகிறார். இன்ஸ்டா ரீல்ஸ் கிரிஞ்ச்களுக்கு மத்தியில் ஹசல் ஷைனி உண்மையாகவே நல்ல பர்ஃபார்மர். காமெடி காட்சிகள், காதல் காட்சிகள், டான்ஸ் என எல்லாவிதமான ரீல்ஸையும் சிறப்பாகவே செய்திருப்பார்; எக்ஸ்பிரஷன்ஸ்களை அள்ளித்தெளிப்பார். பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே டிக் டாக்கில் வீடியோ போட்டு பிரபலமானவர் இப்போ கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். பிரபு சாலமனின் மகன் சமீபத்தில்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஹசல் ஷைனியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.

இவர்களைத் தவிர சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, ஜெயம் ரவியின் மகன் ஆரவ், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமின், விஜே அர்ச்சனாவின் மகள் சாரா, நாசரின் மகன் அபி ஹசன் என இன்னும் சிலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் உங்களுக்குப் பிடித்த நபர் யார்னு கமெண்ட் பண்ணுங்க. இவங்களைத் தவிர வேற எந்த ஸ்டார் கிட் மேல் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கு என்பதையும் கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top