Battlegrounds mobile India

புதிய விதிமுறைகள்… கட்டுப்பாடுகள் – பப்ஜி வெர்ஷன் 2.0 ரெடி!

பப்ஜி என்பது விளையாட்டு அல்ல… அது ஒரு எமோஷன். பலருக்கும் இது டிப்ரஷனில் இருந்து வெளிவர ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து உதவியது. ஒரே ஒரு சிம்பிள் காரணம்தான். நம் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இந்த கேமை விளையாடலாம். அதுவும் லாக்டௌன் சமயத்தில் இரவு, பகல் பார்க்காமல் பல மணி நேரம் விளையாட ஆரம்பித்தவர்கள், இதன் அடிக்ட்டுகளாக மாறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக மாறிவிட்டது இந்த பப்ஜி. பலரும் இந்த கேமிற்க்கு அடிமையாகி வெளி உலகத்தை மறக்கும் நிலை ஏற்படத் தொடங்கியது. இதனால் பெற்றோர்கள் கதறினார்கள். இன்னும் சில டீனேஜர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை இதில் இழந்தார்கள்.

Battlegrounds Mobile India

கடந்த செப்டம்பர் 2020-ல் இந்த கேம் தடை செய்யப்பட்டது. சீன செயலிகளுக்கு சிவப்புக் கொடி காட்டிய இந்திய அரசு, பப்ஜியோடு சேர்த்து மற்ற டிக் டாக், ஷேர்இட் போன்ற பிரபலமான பல செயலிகளை BAN செய்தது. பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து இப்போவந்துடும் அப்ப வந்துடும்' என்று பல்வேறு வதந்திகள் கிளம்பியது. தற்போது ஒரு வழியாக இந்த கேமிற்கு க்ரீன் சிக்னல் விழுந்திருக்கிறது.PUBG MOBILE INDIA’ என்ற பெயர் `BATTLEGROUNDS MOBILE INDIA’ என்று மாறியுள்ளது. ரசிகர்கள் சோஷியல் மீடியா பக்கம் ஆரவாரத்தோடு இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யூ-டியூப், சோஷியல் மீடியாவில் தொடங்கி வெப்சைட் வரைக்கும் அனைத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அதேபோல் TENCENT' நிறுவனத்தை நீக்கிவிட்டுKRAFTON’ நிறுவனம் இதை முழுமையாக டேக்ஓவர் செய்து விட்டது. பப்ஜி வெர்ஷன் 2.0-வாக வரவிருக்கும் இந்த கேமின் டீசர், யூ-டியூபில் வெளியாகி 7 மில்லியன் பார்வைகளைக் கடந்து தற்போது டாப் டிரெண்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த கேமின் LOGO டிசைன் எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் 3 மணி நேரங்களில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. ஆனால், எல்லாவற்றிலும் `Coming soon’ என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர குறிப்பிட்ட இந்த தேதியில்தான் வெளியாகும் என்று அறிவிக்கவில்லை.

தவிர, பழைய பப்ஜி கேமில் மேஜராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதில் நீக்கப்படும் என்று தெரிகிறது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

  • 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில மணி நேரம்தான் இந்த கேமை விளையாட முடியும் என்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • Royal pass மெம்பர்ஷிப் போக சில உடைகள், Gun ஸ்கின்கள் போன்றவற்றை பணம் கொடுத்து வாங்க முடியும். அதை மாற்றி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே செலவு செய்ய முடியும் என்ற விதிமுறையை கொண்டு வர உள்ளது.
  • விளையாடும் நபரின் விவரங்களோடு பெற்றோர்களின் விவரங்களையும் இந்த கேமில் சேர்க்க முடியும். பெற்றோர்களுக்கு ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் உடனே `KRAFTON’ நிறுவனத்திடம் புகார் அளிக்கும் வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஹேக்கிங் போன்ற சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடனடியாக இந்த கேமில் இருந்து அந்த நபர் நீக்கப்படுவார். மீண்டும் விளையாட முடியாதபடி BAN செய்யப்படுவர்.
  • முன்பு வெளியிட்டிருந்த பப்ஜியில் வன்முறை அதிகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைக் கருத்தில் கொண்டு தற்போது வெளிவரவிருக்கும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவில் அதைக் குறைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • இந்த கேமை Install செய்த உடனே அந்த மொபைல் மாடலில் ஆரம்பித்து IP Address, Operating system போன்ற அனைத்து விவரங்களும் அந்த நிறுவனத்திடம் சென்றுவிடும்.

ஆக, பப்ஜியின் புதிய வெர்ஷனான பேட்டில்கிரவுண்ட் வெளிவந்தால் இந்த மாதிரியான பல்வேறு விதிமுறைகளையும் கொண்டு வருவார்கள் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஸோ லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்!

Also Read – `அத்தை அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க!’ – 2கே கிட்ஸ் வைரல் வீடியோ அலப்பறைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top