ரோஹித் ஷர்மா

என் வழி தனி வழி… `ஹிட்மேன்’ ரோஹித்-தின் ஐபிஎல் சம்பவங்கள்!

ஐபிஎல் ஃபைனல்ஸ்ல தோல்வியே சந்திக்காத கேப்டன்… 5 ஐபிஎல் டிராஃபிகளை வென்ற முதல் கேப்டன்… கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் சீசனின் பாதியில சார்ஜ் ஏற்றிருந்தாலும் அந்த சீசனையே ஜெயிச்சுக் காட்டுன நம்பிக்கை நாயகன்.
ஸ்பின்னரா உள்ள வந்து பேட்டிங்லயும் கேப்டன்சிலயும் லெஜண்டா நிக்குற ரோஹித் ஷர்மா பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம். அவரோட ஐபிஎல் லெகசியைப் பத்தியும் அந்த டோர்னமெண்ட்ல பண்ண தரமான சம்பவங்கள் பத்தியும்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கேப்டனான தருணம்

மும்பை இந்தியன்ஸ் டீமோட கேப்டனா ரோஹித் ஷர்மா 2013ல அறிவிக்கப்பட்டதும் சர்ப்ரைஸா நடந்த சம்பவம்தான். 2013 சீசன்ல மும்பையோட கேப்டனா இருந்தவர் ரிக்கி பாண்டிங். முதல் 6 மேட்ச்கள் முடிவுல 3 வெற்றி, 3 தோல்வினு இருந்தது டீம் ரெக்கார்ட். சிங்கிள் டிஜிட் ஸ்கோர்ஸ், ஃபார்ம் இல்லைனு விமர்சனம்னு அழுத்தத்துல இருந்த பாண்டிங், மும்பையோட 7-வது மேட்சுக்கு முன்னாடி கேப்டன்ஷிப்பைத் துறந்தார். அந்த சீசனுக்கு முன்னாடி வரைக்கும் மும்பை ஒரு கப் கூட அடிச்சது கிடையாது. ஏழாவது மேட்சின் டாஸுக்கு முன்னாடி மும்பையோட கேப்டன் இனி ரோஹித் ஷர்மாதான்னு அறிவிக்குறாங்க. இது ஐபிஎல் வட்டாரத்துல பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. ரன் படத்துல மாதவன் சொல்ற மாதிரி ஷட்டர் இறக்குற சீன்லாம் இங்க இல்லப்பானு அந்த சீசன்ல எதுவுமே பேசாம மிரட்டல் அடி கொடுத்தாரு ரோஹித். அந்த சீசன்ல பாயிண்ட்ஸ் டேபிள்ல 2-வது இடத்துக்கு வந்த மும்பை குவாலிஃபையர் 1-ல சிஎஸ்கே கூட தோத்திருந்தாலும் குவாலிஃபையர் 2-ல ராஜஸ்தானை அடிச்சு ஃபைனலுக்கு வந்தாங்க. ஃபைனல்ல குவாலிஃபையர் தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையா ஐபிஎல் சாம்பியனானாங்க. அதுக்கப்பறம் ஐபிஎல்ல 5 டிராஃபி, சாம்பியன்ஸ் லீக்ல ஒரு டிராஃபினு ரோஹித்தோட டிராக் ரெக்கார்டு அவரை ஐபிஎல்லோட சக்ஸஸ்ஃபுல் கேப்டனா அறிவிச்சுச்சு.

2015 சம்பவம்


மும்பை இந்தியன்ஸ் டைட்டில் வின் பண்ண 5 சீசன்லயும் 2015 சீசனை ஒன் ஆஃப் தி பெஸ்ட்னே சொல்லலாம். அதுக்குக் காரணம் இருக்கு. அந்த சீசன்ல விளையாடுன முதல் 6 மேட்ச்கள்ல 5-ல தோல்வினு துவண்டு போயிருந்த எம்.ஐ, அதுக்கடுத்து எடுத்தது மாஸ் மொமண்ட். அடுத்த 9 மேட்ச்கள்ல 8 மேட்ச் ஜெயிச்சு பிளே ஆஃப் போனதோட, முதல் பிளே ஆஃப் மேட்ச்ல சிஎஸ்கேவை ஜெயிச்சு ஃபைனலுக்கும் போனாங்க. ஈடன் கார்டன்ல நடந்த ஃபைனல்ல ரோஹித் பண்ணது மொரட்டு சம்பவம். இந்த வேர்ல்டு கப்ல எப்படி ஓபனிங் ஃபயர் விட்டாரோ, அதை அன்னிக்கே ஒன் – டவுன்ல வந்து பண்ணிருந்தார். அந்த மேட்ச்ல 25 ஃபால்ல ஃபிஃப்டி அடிச்சிருப்பார். அதுதான் ஐபிஎல் ஃபைனல்ல அவர் அடிச்ச முதல் ஃபிஃப்டி. அந்த மேட்ச்ல 41 ரன்ல ஜெயிச்சு இரண்டாவது முறையா எம்.ஐ ஐபிஎல் கப் அடிச்சது.

Also Read – Definitely not; I still haven’t left ‘behind… எம்.எஸ்.தோனியின் பிரஸ்மீட் தக்லைஃப்ஸ்

Legacy


2022ல விராடுக்குப் பிறகு இந்தியன் டீமோட அடுத்த கேப்டன் யாருங்குற டிஸ்கஷன்ஸ் வந்தப்போ, ரிக்கி பாண்டிங் ரோஹித்தான் பெஸ்ட் சாய்ஸ்னு சொன்னார். 2013 சீசன்ல முதல் சில கேம்ஸுக்குப் பிறகு நான் சரியா பெர்ஃபார்ம் பண்ணாத நிலைமைல, இன்னொரு இன்டர்நேஷனல் பிளேயருக்கு வழிவிட வேண்டிய நிலைமை. அடுத்த கேப்டன் யாருன்னு வந்தப்போ, ஓனர்ஸ் சில பிளேயர்ஸ் பேரைச் சொன்னாங்க. ஆனா, நான் கிளீயரா இருந்தேன். ஒரு இளம் வீரராலதான் அதைப் பண்ண முடியும்னு நான் தீர்க்கமா நம்புனேன். அதுதான் ரோஹித் ஷர்மா’னு பாண்டிங் மனம்திறந்து பாராட்டியிருப்பார். கேப்டன் ரோஹித்துக்கு பிரியாவிடை கொடுத்து மும்பை டீம் பதிவு பண்ணிருந்த நோட்ல பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தாங்க. 2013 ஐபிஎல் ஃபைனல், பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 மேட்ச், 2015, 2019 ஐபிஎல் ஃபைனல்ஸ், 2020 ஐபிஎல் டாமினன்ஸ்னு பல விஷயங்களை மென்ஷன் பண்ணிருந்தாங்க. `Rohit Sharma, our Hitman, our leader, our legend’-னுதான் அந்த நோட்டையே முடிச்சிருப்பாங்க.

பிளேயர்ஸ் கேப்டன்

ரோஹித் கேப்டன்சிக்குக் கீழ எத்தனையோ யங் கன்ஸ் மிரட்டிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா சீனியர்ஸான லசித் மலிங்கா, கிரன் பொல்லார்டுனு ரெண்டு அசட்ஸை எம்.ஐ கண்டெடுத்தது ரோஹித் கேப்டன்சிலதான். இளம் விரர்கள்னு எடுத்துக்கிட்டா ஹர்திக் பாண்டியா, பும்ரா, ராகுல் சஹார்னு இந்த லிஸ்ட் ரொம்பவே நீளம். டேட்டாஸை விரல் நுனில வைச்சிக்கிட்டு அதுக்கேத்த பிளானிங்கோட்ட ஒவ்வொரு கேமையும் சரியான பிரிபரேஷனோட அணுகுறதுதான் ரோஹித்தோட ஸ்டைல். அவரோட குளோஸ் பிரண்டும் தற்போதைய கேகேஆர் அசிஸ்டண்ட் கோச்சுமான அபிஷேக் நாயர் பல இடங்கள்ல சொல்லிருப்பார். ஸ்பின்னர் அஷ்வினுமே இதை ஒரு இடத்துல சொல்லிருப்பாரு. `ஒவ்வொரு பிளேயரையுமே பெர்சனலா தெரிஞ்சு வைச்சிருப்பார் ரோஹித். ஒவ்வொருத்தருக்கும் என்ன புடிக்கும் என்ன புடிக்காதுனு தெளிவா புரிஞ்சு வைச்சிருப்பாரு. ஒவ்வொரு பிளேயரையுமே பெர்சனலா தெரிஞ்சு வைச்சுக்க அவ்ளோ எஃபர்ட் போடுவார்’னு அஷ்வின் பகிர்ந்திருப்பாரு.

மும்பை இந்தியன்ஸுக்கு வர்றதுக்கு முன்னாடி ரோஹித், டெக்கன் சார்ஜர்ஸ் டீமோட முக்கியமான பிளேயர். அந்த டீம் கப் அடிச்ச 2009 சீசன்ல மும்பை இந்தியன்ஸுக்கு எதிரா தரமான சம்பவத்தைப் பதிவு பண்ணாரு. 146/5-ங்குற லோ ஸ்கோரிங் மேட்ச்ல ரோஹித் 36 பால்ல 38 ரன் அடிச்சு ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடுனாரு. பௌலிங்க அதவிட மிரட்டுன ரோஹித், 6 விக்கெட் கைவசம் இருக்கப்போ மும்பைக்கு 26 பால்ல 43 ரன் தேவைங்குறப்போ எடுத்த ஹாட்ரிக் ஐபிஎல்லோட எவர்கிரீன் மொமண்ட். 16-வது ஓவரோட கடைசி ரெண்டு பால்ல அபிஷேக் நாயர், ஹர்பஜனை வீழ்த்துன அவரு, 18-வது ஓவரோட முதல் பால்ல டுமினியையும் அவுட்டாக்கி அந்த மேட்சை டெக்கான் சார்ஜர்ஸ் டீம் ஜெயிக்க முக்கியமான காரணமா இருந்தாரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top