லாக்டௌன் நேரத்துல ஜிம்மை ரொம்பவே மிஸ் பண்ற நபரா நீங்க? அப்போ இந்த ஜிம் மெட்டீரியல்ஸை வாங்கி வீட்டுல வச்சீங்கனா.. உங்களுக்கான குட்டி ஜிம் வீட்டுலயே ரெடி ஆயிடும். ஜிம் மெட்டீரியல்களின் பட்டியல் இதோ…
வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகமான தசைகளை குறைக்க இந்த டம்மி ட்விஸ்டர் பயன்படுகிறது. வீட்டில் வைத்து எளிதாக இதனை பயன்படுத்த இயலும். லைட் வெயிட்டான இந்த டம்மி ட்விஸ்டரை கைகளில் வைத்தும், இதன்மீது நின்றும், உட்கார்ந்தும் உடற்பயிற்சி செய்ய இயலும்.
ஆப் ரோலர் வீல் உங்களது வயிற்று தசைப் பகுதியை வலுப்படுத்த உதவி செய்கிறது. ஆப் ரோல்லரில் உள்ள கைப்பிடியைப் பிடித்து புஷ் அப் நிலையில் இறங்கி அதிலுள்ள சக்கரத்தை உள்புறமாகவும் வெளிப்புறமாகவும் உருட்ட வேண்டும். வயிறு, தோள்கள், மேல் முதுகு, பைசெப்ஸ் மற்றும் மார்பு போன்ற பகுதிகளும் இதனால் வலுவடைகிறது.
கைகள், தோள்கள், முதுகு, வயிற்று தசைப் பகுதி மற்றும் கால்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வலுப்படுத்த இந்த எக்ஸர்சைஸ் ரோப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை கைகளில் பிடித்து மேலும் கீழும் அசைத்தால் போதுமானது.
டம்பெல்ஸ் உங்களது கைகளில் இருக்கும் தொளதொள தசைகளை வலுவடையச் செய்கிறது. ஆம்ஸ் வொர்க்கவுட்டுக்கு அடிப்படையே இந்த டம்பெல்ஸ் வொர்க்கவுட்தான். மழைக்கு ஜிம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட இந்த டம்பெல்ஸ் பற்றி அறிந்திருப்பார்கள்.
கீழ் முதுகு, கால்கள் மற்றும் தோள் பகுதிகளை வலிமையாக்க இந்த vinyl coated kettlebell பயன்படுத்தப்படுகிறது. இதன் கைப்பிடியைப் பிடித்து மேலும் கீழும் அசைத்து பயிற்சி செய்ய வேண்டும்.
அன்றாட செயல்களில் இந்த எக்ஸர்சைஸ் பந்தை நம்மால் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, வீட்டில் சேருக்கு பதிலாக இந்த பந்தில் உட்கார்ந்து தொலைக்காட்சியை நீங்கள் பார்க்கலாம் அல்லது உட்கார்ந்து வேலை செய்யும்போது இதனை பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்களது வயிற்றுப்பகுதியில் உள்ள தசை அதிகளவில் குறையும். அதுமட்டுமில்ல இதனை பயன்பாடுத்தாதபோது மேசைக்கு அடியில் நீங்கள் இதனை வைத்தால் போதுமானது. அதிகளவு இடத்தையும் எடுத்துக்கொள்ளாது.
ஸ்கிப்பிங் ரோப் என்றும் இதனைக் கூறலாம். இதன் மூலம் உடல் பருமனை அதிகளவில் குறைக்க முடியும். அதேநேரம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் முடியும். மிகவும் எளிமையான ஃபிட்னஸ்க்கு ஏற்ற பொருள் என்றால் அது `ஜம்ப் ரோப்’ தான்.
Also Read : ஆர்குட் தோல்வி தொடங்கியது எங்கே… 5 காரணங்கள்! #Orkut