பூனை

சிகப்பு ரோஜாக்கள் முதல் மாஸ்டர் வரை… தமிழ் சினிமாவில் பூனைகள்!

மனிதர்களோட ஃபேவரைட் பெட் லிஸ்ட்ல பூனைக்கு எப்பவுமே தனி இடம் உண்டு. பூனையோட குணமே மற்ற விலங்குகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது. நாய், மாடு, ஆடு போன்ற விலங்குகள் எல்லாம் மனிதர்கள் மீது ரொம்ப அன்பாகவும் பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் இருக்கும். ஆனால், பூனை அப்படி இல்லை. காலையே சுத்திகிட்டு இருக்கும் பக்கத்துல வந்து குடைஞ்சிட்டு இருக்கும். ஆனால், சாப்பாடு போட்டாதான் நம்மள மதிக்கும். அதோட தேவை தீர்ந்ததும் நம்மள கண்டுக்காம பொய்டும். உலக அளவில் இலக்கியவாதிகள் பலரும் பூனையோட குணத்தை மையமாக வைத்தே பல கதைகள், கவிதைகள் எல்லாம் எழுதியிருக்காங்க. ஆனால், அந்தப் பூனையவே கதி கலங்க வைக்கிறது நம்ம தமிழ் சினிமாதான். `இந்தப் படத்தில் பறவைகள், விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ - அப்டினு ஒவ்வொரு படத்துலயும் டிஸ்கிளைமர் போடுவாங்க. ஆனால், சில படங்கள்ல பூனைகளை சித்தரிக்கப்பட்ட காட்சிகளை பூனைகள் பாத்திருந்ததுனா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும்.யார் வம்பு தும்புக்காச்சும் நான் போனனா? சிவனேனுதானடா பொய்கிட்டு இருக்கேன்’ அப்டினு சத்தமாவே சொல்லியிருக்கும். சரி, அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு… தமிழ் சினிமால பூனைகள் இடம்பெற்றது தொடர்பான சில மேஷ்அப்பைதான் இந்த கட்டுரைல தெரிஞ்சுக்கப்போறோம்!

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்

ஓப்பனிங் சீன்லயே கறுப்பு பூனையை கமலோட சேர்த்து பாரதிராஜா இண்ட்ரோ பண்ணியிருப்பாரு. “என்னோட இன்னொரு உண்மையான ஊழியன், நண்பன்” அப்டினு கறுப்பு பூனையை கமல், ஸ்ரீதேவிகிட்ட அறிமுகப்படுத்துவாரு. ``அது கடிக்குமா?” அப்டினு ஸ்ரீதேவி கேட்க. “ம்ம்ம்.. சில சிமயம்.. என்னையே!” அப்டினு சொல்லுவாரு. அந்தக் கறுப்புப் பூனைய ரத்தம் குடிக்கிற கொடூரமான பூனையாவும் காட்டியிருப்பாரு. கிளைமாக்ஸ் காட்சிகளையும் அந்தப் பூனைய வச்சு த்ரில்லிங்கா கொண்டு பொய்ருப்பாங்க. பூனைய ரொம்ப சீரியஸா காட்டுன படங்களில் இதுவும் ஒண்ணு.

சந்தித்த வேளை

சந்தித்த வேளை

விவேக்கின் நடிப்பில் இந்தப் படத்துல வர்ற காமெடி சீனை எல்லாருமே பார்த்திருப்போம். ஒரு சீன்ல, டீக்கடைல விவேக், “உனக்குள்ள முழிச்சிகிட்டு இருக்குற அதே மிருகம்தான் எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கு. அதை அநாவசியமா தட்டி எழுப்பிறாத. ஜாக்கிறதை” அப்டினு டயலாக் பேசுவாரு. உடனே ரௌடி,அப்படி என்ன மிருகம்டா உள்ள தூங்குது? எடுத்துக்காட்றா”னு சொல்ல, “காட்றேன், இதை எங்கிட்ட முதல்லயே கேட்ருக்கலாமே. ஏன் இவ்ளோ டிலே பண்ணீங்க. இப்போ காட்றேன் பாரு”னு சொல்லி போட்ருக்குற கோட்குள்ள இருந்து பூனைய வெளிய எடுத்து காட்டுவாரு. மியாவ்!

சுட்டிப்பூனை

சுட்டிப்பூனை

பூனையை மையமா வச்சு முழுநீளப் படமா இந்தப் படத்தை இயக்கியிருப்பாங்க. குழந்தைகளுக்கு ரொம்பவே புடிக்கிற படம். பேபி ஷாலினி நடிச்சு வாய்ஸ் ஓவர்லயே நரேட் பண்ற கதைதான் சுட்டிப்பூனை. “ரெண்டு குழந்தைகளுக்கு மேல பெத்துக்கக்கூடாதுனு கவர்மெண்ட் சொல்லுது. ஆனால், அதையாரும் அம்மா பூனைக்கிட்ட சொல்லல போல இருக்கு. அதனாலதான் அம்மா பூனைக்கு நிறைய புள்ளைங்க” அப்டினு கதை தொடங்கும். அதுல ஒரு பூனைதான் ஹீரோ. அந்த ஹீரோ பூனையோட வாழ்க்கைல நடக்குற சம்பவங்களை சொல்ற கதைதான் இது. உலகம் எல்லா உயிர்களுக்குமானது, உறவு, பிரிவு, அன்பு அப்டினு பல விஷயங்களை இந்தப் படத்தின் வழியாக சொல்லியிருப்பாங்க. உண்மையான பூனைய வச்சு இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு இயக்குநருக்கு கிளாப்ஸ் கொடுக்கலாம்.

சின்ன வாத்தியார்

சின்ன வாத்தியார்

பிரபு நடிப்பில் வெளியான இந்தப்படத்துல வர்ற காமெடி சீன்கள் எல்லாம் இன்றைக்கும் ஃபேமஸ். பிரபு டபுள் ரோலில் இந்தப் படத்தில் நடிச்சிருப்பாரு. சயின்டிஸ்டா வர்ற பிரபு தான் கண்டுபிடிச்ச மருந்த சாப்பிட்டதும் கூடுவிட்டு கூடு பாய்ந்து பூனையா மாறிடுவாரு. கொஞ்சம் நேரத்துல திரும்பவும் தன்னுடைய உடம்புக்கே வந்துருவாரு. என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க!

கந்தசாமி

கந்தசாமி

இந்தப் படத்துல எங்கடா பூனை வரும்னு யோசிக்கிறீங்களா? அதாங்க “மியாவ் மியாவ் பூனை, மீசை இல்லா பூனை, திருடி தின்ன பாக்குறியே, திம்முசு கட்டை மீனை”. இந்தப் பாட்டுல பெரும்பான்மையான வார்த்தைகள் மியாவ், பூனை’ – இந்த ரெண்டும்தான்.

கோமாளி

கோமாளி

வெளியே போகும்போது பூனை கிராஸ் பண்ணிபோன போற காரியம் விளங்காதுனு பொதுவா சொல்லுவாங்க. இதே விஷயத்தை வச்சு கோமாளி படத்துல ஒரு சீன் வரும். இதெல்லாம் பூனைக்கு தெரிஞ்சா ரொம்பவே ஃபீல் பண்ணும்ல?!

மாஸ்டர்

மாஸ்டர்

விஜய்கூட மாஸ்டர் படத்துல பூனை சில காட்சிகள்லதான் வரும். ஆனால், அதுக்கப்புறம் ரொம்பவே அந்தப் பூனை ஃபேமஸ் ஆயிடுச்சு. படம் முழுக்க எந்த சேட்டையும் பண்ணாம அமைதியாவே இருக்கும் இந்த பெர்சியன் வகை பூனை.

முண்டாசுப்பட்டி

பூனை சூப் அதிகமாக ஃபேமஸானது இந்தப் படத்துக்கு அப்புறம்தான். இந்தப் படத்துல வர்ற ஜமீனுக்கு எதிரா பூனைகள் ரிவெஞ்ச் எடுக்குற சீன்லாம் அட்டகாசமா இருக்கும். படத்துலயும் சரி நிஜத்துலயும் சரி பூனைகள் பத்தின கட்டுக்கதைகளை பூனைகள் கேள்விபட்டுச்சுனா இந்தப் படத்துல வர்ற மாதிரி உண்மையிலேயே மனிதர்களுக்கு எதிரா ரிவெஞ்ச் எடுக்க வாய்ப்புகள் இருக்கு.

இந்தப் படங்கள் போக பேய் படங்களில் பூனை தவறாம வந்துரும். கர்ணன் உள்ளிட்ட சில படங்கள்லயும் பூனைகள் சில காட்சிகள்ல வரும். மாரி செல்வராஜ் தன்னுடைய புத்தகத்துலயும் பூனைகளைக் குறிப்பிட்டு தனி அத்யாயமே எழுதியிருப்பாரு. எல்லாத்தையும்விட 80ஸ்,90ஸ்,2 கே கிட்ஸ் எல்லாத்துக்கும் புடிச்ச உலக அளவில் ஃபேமஸான டாம் அண்ட் ஜெர்ரில வர்ற டாம்க்கும் பெரிய ஃபேன் பேஸ் இருக்கு. உங்க வாழ்க்கைல பூனை தொடர்பாக நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read : குக்கு வித் கோமாளி ஜட்ஜஸ் Vs மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்… என்ன வித்தியாசம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top