தமிழ் சினிமா காதல்

முத்துப்பாண்டி – தனலட்சுமி காதலுக்கு வில்லனாக வந்த விஜய்.. மரணக் காதல் ப்ரோ!

காதல் – தமிழ் சினிமால ஹீரோ – ஹீரோயின் காதலைவிட அவங்ககூட வர்ற கேரக்டரோட காதலுக்கு வேல்யூ அதிகம். உன் பாதம்பட்ட இடத்தில் சாதம் போட்டு சாப்பிடுவேன்ற அளவுக்கு சீரியஸா இருப்பாங்க. கில்லி பிரகாஷ் ராஜ், அன்பே சிவம் உமா ரியாஸ், மயக்கம் என்ன சுந்தர்ல தொடங்கி யாரடி நீ மோகினி சரண்யா, கலகலப்பு அப்புக்குட்டி, கோலமாவு கோகிலா அன்பு வரைக்கும் லிஸ்ட் பெருசு. அவங்க காதலுக்கு எவ்வளவு வேல்யூ இருக்கு தெரியுமா?

கில்லி பிரகாஷ் ராஜ் காதல்

கில்லி பிரகாஷ் ராஜ்
கில்லி பிரகாஷ் ராஜ்

உண்மைக் காதல்னா சொல்லு, உயிரைக் கொடுக்குறேன்னு விஜய் சொன்னாரு. கடைசில முத்து பாண்டி – தனலட்சுமி காதலுக்கு அவரே வில்லனா வந்து நின்னாரு. முத்து பாண்டி ரக்கர்ட் பாய்தான். இல்லைனுலாம் சொல்லல. ஆனால், அந்த மனுஷன் தனலட்சுமிக்காக எதையும் இழக்க தயாரா இருந்தாரு. மனசுல இருந்து மட்டும்தான் செல்லம்.. செல்லம்னு தனலட்சுமியை கூப்பிடுவாரு. ஒரு வீடியோல முத்து பாண்டி எவ்வளவு நல்லவன்னு எடிட் பண்ணி போட்ருப்பாங்க. விஜய் கடைசில தனலட்சுமியை ஓங்கி அறைவாரு. ஆனால், முத்து பாண்டி விரல்கூட தனலட்சுமி மேல பட்டதில்லை. முத்து பாண்டியோட இதயம், அவன் அரண்மனையோட மகாராணி, தனலட்சுமி ஓடுனா முத்து பாண்டி கால் வலிக்கும். அவ்வளவு லவ் தனலட்சுமி மேல. கடைசில பேரு, புகழ்னு எல்லாத்தையும் தனலட்சுமிக்காக மட்டுமே இழந்து நிக்கும்போதும், முத்து பாண்டி காதல் கொஞ்சம்கூட குறையல.. ஏன்னு சொல்லுங்க. ஏன்னா, தனலட்சுமிய முத்து பாண்டி அவ்வளவு காதலிக்கிறான்.

Also Read – விக்ரம் – விஜய் சேதுபதி ஹிட் கொடுத்து இத்தனை வருஷம் ஆச்சா?

அன்பே சிவம் – உமா ரியாஸ் காதல்

அன்பே சிவம் உமா ரியாஸ்
அன்பே சிவம் உமா ரியாஸ்

சில காதலை பார்க்கும்போது, தே டிஸர்வ்ட்னு தோணும்ல? அப்படிதான் அன்பே சிவம் படத்துல வர்ற உமா ரியாஸ் காதல். ஆரம்பத்துல இருந்து பெருசா தோணாது, இவங்க சேர்ந்தா நல்லாருக்கும்னு. ஆனால், உமா ரியாஸ்.. சாரி, மெஹரூன்னிசா.. அந்தக் காதலை சொல்லும்போது நம்மளே கொஞ்சம் ஃபீல் ஆயிடுவோம். வாரணம் ஆயிரம், அலை பாயுதே, விண்ணைத் தாண்டி வருவாயா புரொபோஸல் சீன்ஸ்லாம்தான் டக் டக்னு நியாகம் எல்லாருக்கும் வரும். ஆனால், அந்த சீன்களுக்குலாம் டஃப் கொடுக்குற புரொபோஸல் சீன், அன்பே சிவம்ல மெஹரூன்னிஸா புரொபோஸ் பண்றதுதான். காதலை டிஸ்கரைப் பண்ணதும், கமல், “நீ சொல்றதைப் பார்த்தா என்ன..”னு இழுப்பாரு, அதுக்கு உமா, “எப்பா கொலம்பஸு கண்டுபுடிச்சிட்டியேபா” அப்டினு சொல்லுவாங்க. அந்த மொமண்ட்ல சிரிக்கிறதா? இல்லை, மெஹரூன்னிசாவை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறதானு தோணும். அந்தக் காதலை எப்படி டிஸ்கரைப் பண்றதுனே தெரியல. அந்தக் கோவத்துல அவ்வளவு உரிமை இருக்கும். அதை ஃபாலோ பண்ணி வர்ற பௌன் குஞ்சு காதலும் அவ்வளவு உண்மையா இருக்கும்.

சுந்தர பாண்டியன் – அப்புக்குட்டி காதல்

சுந்தரபாண்டியன் அப்புக்குட்டி
சுந்தரபாண்டியன் அப்புக்குட்டி

எல்லாமே பாயிண்ட் ஆஃப் வியூதான? அப்படிப்பார்த்தா சுந்தர பாண்டியன்ல வர்ற அப்புக்குட்டி காதல் மட்டும் என்ன தக்காளி தொக்கா? கட்டையன நம்புனாலும், குட்டையன நம்பக்கூடாதுனு சொல்லுவாங்கனு இனிகோ ஆரம்பிப்பாரு. யோவ், என்னத்தையாவது சொல்லணும்னு.. அப்புக்குட்டி அவ்வளவு ஹேண்ட்சமா இருப்பாரு. காதலுக்காக உயிரை விடுவேன்னு சும்மா வேணும்னா சொல்லலாம். ஆனால், உண்மையாவே உயிரை விட்டது அப்புக்குட்டிதான். ரொம்ப பாவமா இருப்பாரு ஆரம்பத்துல இருந்து. அப்புறம் சசிகுமார் பேசி டைம் பிரிச்சு கொடுத்ததும், மாஸா பஸ்ல வந்து நிப்பாரு. அந்த பி.ஜி.எம், பஸ்ல ஓடி வந்து ஏறுறது, திரும்பவும் சான்ஸ் கேக்குறது, ஹீல்ஸ் வைச்ச ஷு போடுறதுனு எல்லாம் அட்டகாசம். ஹீரோயினை கரெக்ட் பண்ணிடுவாரோன்ற அளவுக்கு டஃப் கொடுப்பாரு. ஆனால், கடைசி வரை நடக்காமலேயே போகும். ஒரு விஷயம், சும்மா பார்த்தாலாம் காதல் வராது பாஸ். அதுவா நடக்கணும், புடிக்கணும்.

யாரடி நீ மோகினி – சரண்யா

யாரடி நீ மோகினி - சரண்யா - தமிழ் சினிமா வித்தியாசக் காதல்
யாரடி நீ மோகினி – சரண்யா

எல்லார் கேங்க்லயும் மெச்சூர் இல்லாத, ஆனால், கியூட்டான, உண்மையான காதல் ஒண்ணு இருக்கும். அந்த காதலுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் யாரடி நீ மோகினில வர்ற தனுஷ் – சரண்யா காதல். பூஜான்ற பெயர் அவ்வளவு கியூட்டா சரண்யாக்கு செட் ஆகியிருக்கும். ஆரம்பத்துல இருந்து அந்த க்ரஷ் ஃபீலிங்க வரும்ல அதை அப்படியே எக்ஸ்பிரஸ் பண்னியிருப்பாங்க. இடிச்சுட்டு போறது, பார்த்து சிரிக்கிறது, ஃபைட் முடிஞ்சதும் ரத்தம் வர்றதை கவனிக்கிறது, நயன்தாராகிட்ட வாசுவை லவ் பண்றேன்னு சொல்றது, வெண்மேகம் பெண்ணாக பாட்டுல கட்டிப் புடிச்சு நிக்கிறதுனு குட்டி குட்டியா கிளாப்ஸ அள்ளிருப்பாங்க. அந்த வயசுல எல்லாருக்கும் வர்றதுதான், அதுக்காக அது பொய்யா இருக்கணும்னு அவசியம் இல்லேல. தனுஷ் ஓங்கி அறை ஒண்ணு விட்டுட்டு அட்வைஸ் பண்ணதும், உன்னை மாதிரியே ஒருத்தன் வருவானா? என்னை சிரிக்க வைப்பானா? – இப்படிலாம் கேள்வி கேட்டுட்டு, அப்ப சரி வா போலாம்னு சொல்லுவாங்க. செம கியூட்ல!

கோலமாவு கோகிலா – அன்பு

தமிழ் சினிமாவின் வித்தியாசக் காதல்
கோலமாவு கோகிலா – அன்பு

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பார்த்த வித்தியாசமான கேரக்டர்னா, அது எல்.கேதான். அதாங்க கோலமாவு கோகிலா படத்துல வந்த அன்புதாசன் கேரக்டர். வீட்டுக்கு பொண்ணு கேட்டு போவாங்க, நான் நல்லா பார்த்துப்பேன் மாமா, வேறலெவல்ல பார்த்துப்பேன் மாமா, ஷோபி நடக்கும்போது கால் தரைல படாமல் இருக்க ரோஜா பூவை கொட்டு, அதுல இருக்க முள்ளு கால்ல குத்தாமல் இருக்க தாங்கி தாங்கி தாங்கினு பேசும்போது அவ்வளவு சிரிப்பு வரும். ஆனால், பயித்தியம் மாதிரி ஷோபியை எப்படி காதலிக்கிறான்றதுக்கு அந்த ஒரு சீன் போதும். உங்க யாருக்குமே என் காதல் புரியலேலனு எல்.கே கேட்கும்போது ஒன்சைட் லவ் பண்ற எல்லாருக்கும் அந்த டயலாக் அவ்வளவு கனெக்ட் ஆகும். ஸ்மக்லிங் பண்ணிட்டு போய்ட்டு இருப்பாங்க, அங்கக்கூட என் காதல் எவ்வளவு பெருசுனு நிரூபிக்கதான் ட்ரை பண்ணிட்டு இருப்பான், எல்கே. ஸ்மக்லிங் ஃபார் சோபினு சொல்லுவான் பாருங்க, என்னடா லைலா – மஜ்னு, ரோமியோ – ஜூலியட். முகம் முழுக்க அடி வாங்கி ரத்தம் ஒழுகும், அப்பக்கூட, அழாத சோபி.. நீ அழுறத பார்க்க முடியல.. ஐயயோ, சோபி தண்ணி கேட்குது பாருடா, தண்ணி கொடுங்க ப்ரோனு கதறுவான். சின்ஸியர் காதல் ப்ரோ, காதலுக்கு மரியாதை ப்ரோனு அல்டிமேட் பண்ணுவான். டேய், எல்.கே மரண காதல்டா..!

கலகலப்பு – சந்தானம்

சந்தாணம், விமல்கிட்ட எங்க ஜோடி எப்படி இருக்குனு கேட்டுதான் களத்துல வேலையை ஆரம்பிப்பாரு. அதுக்கு விமல், சர்க்கரைப் பொங்கலும் வடகறியும் மாதிரி இருக்குனு சொல்லுவாரு. உடனே, அடியாள்கள், என்னது சர்க்கரை பொங்கலுக்கு வடகறியானு கேப்பாங்க. ஏன், சர்க்கரை பொங்கலும் வடகறியும் கொடுத்தா சாப்பிட மாட்டியானு கேட்டு, வித்தியாசமான காம்பினேஷன்னு சொல்லி பாஸிட்டிவா எடுத்துப்பாரு. ஊர்ல உள்ள எல்லார்கிட்டயும் சண்டை போட்டு, வம்பை விலைக்கு வாங்கி காதல் பண்ணிட்டு சுத்துவாரு. கடைசில இன்னொருத்தன் அஞ்சலியை காதலிக்கிறான்னு தெரிஞ்சதும், முறை பொண்ணும், மொட்டை மாடில காய வைச்ச வத்தலும் ஒண்ணு. எப்போ எவன் தூக்கிட்டுப் போவான்னு யாருக்கு தெரியாதுனு பஞ்ச போட்டு வலியோட அனுப்பி வைப்பாரு. சந்தாணம் டிஸர்வ்ஸ் அஞ்சலிடா.

சச்சின்ல வர்ற வடிவேலு, பார்த்தேன் ரசித்தேன் லைலா, மின்சார கனவுல வர்ற அரவிந்த் சாமி இவங்க காதல்லாம்கூட ரொம்பவே வேல்யூவானதுதான். போற போக்குல கவனிக்காமல் விட்டு அவங்க காதலை ஏற்க மறுத்து பல நேரங்கள்ல காமெடியாக்கிடுறோம். சினிமால ஹீரோவுக்கு வந்தாதான ரத்தம், மத்த யாருக்கும் வந்தாலும் தக்காளி சட்னி தான? ஆனால், நாம இந்த வீடியோ மூலமா அவங்க காதலுக்கு இன்னும் கொஞ்சம் அர்த்தத்தைக் கொடுப்போம். உங்களோட ஃபேவரைட் காதல் பேர் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க.

45 thoughts on “முத்துப்பாண்டி – தனலட்சுமி காதலுக்கு வில்லனாக வந்த விஜய்.. மரணக் காதல் ப்ரோ!”

  1. reputable indian pharmacies [url=https://indiapharmast.com/#]reputable indian online pharmacy[/url] reputable indian online pharmacy

  2. indianpharmacy com [url=http://indiapharmast.com/#]buy medicines online in india[/url] world pharmacy india

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top