ஸ்ரீரஞ்சனி

2K கிட்ஸ் கொண்டாடும் அம்மா… ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி | தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் கௌரவிக்கும் ஒரு மேடை Tamilnadu Now நடத்திய Golden Carpet Awards. துணை நடிகர்கள், நகைச்சுவை நட்சத்திரங்கள், நடணக் கலைஞர்கள் என வெளிச்சம் படாத பல கலைஞர்களுக்கு சிவப்புக்கம்பளம் அல்ல, தங்கக் கம்பளம் விரித்து கொண்டாடிய நிகழ்வில் விருது பெற்ற ஶ்ரீரஞ்சனி பற்றிய சுவாரஸ்யங்கள் இங்கே.

ஸ்ரீரஞ்சனி
ஸ்ரீரஞ்சனி

கே.பாலச்சந்தரிடம் நடிப்பு பயின்று, மணிரத்னம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஶ்ரீரஞ்சனிதான், தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் அம்மா. தமிழ் சினிமாவில் இவருடைய மகளாக நடிக்காத எந்த ஒரு ஹீரோயினும் இல்லை என்றே சொல்லலாம். 2கே கிட்ஸ் எதிர்பார்க்கும் கொண்டாடும் ஓர் அன்புள்ள அம்மா ஶ்ரீரஞ்சனி. ஒரு நகைச்சுவையான அம்மாவாகவும் சரி, கலங்க வைக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நெகிழ வைக்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அத்தனையையும் அசால்ட்டாக கலக்கும் அசாத்திய திறமைசாலி ஶ்ரீரஞ்சனி.

Also Read – `இனிமே எந்த அவார்டும் வேண்டாம்; இதுதான் ஒன் அண்ட் ஒன்லி’ – டெல்லி கணேஷ்

அவருக்கு விருது வழங்கிய நடிகர் விஜயகுமார், “ஒரு லட்சனமான அம்மா அவங்க” என பெருமைப்படுத்தினார். “இதுதான் என்னுடைய முதல் விருது. இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நிறைய கதாபாத்திரங்கள் நடிச்சிருக்கேன், பெரும்பாலும் கவணிக்கப்படாத கொண்டாடப்படாத ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டா போயிடும். யாரும் நோட்டிஸ் பண்ண மாட்டாங்க. ஆனா, இப்படி ஒரு விருதும் அந்த முயற்சியுமே ரொம்ப பெரிசு. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என பெருமையாகப் பேசினார் ஶ்ரீரஞ்சனி.

கே.பாலசந்தரிடம் இருந்து அவர் கற்றுக்கொண்ட விஷயங்களையும், அவருடனான அனுபவங்களையும் “நான் ஒரு களிமண் மாதிரி அவர்கிட்ட போய் நின்னேன். இன்னைக்கு நான் எப்படி இருக்கேனோ, என்ன செய்றேனோ எல்லாமே அவர் உருவாக்கினது தான்” என நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்ரீரஞ்சனி
ஸ்ரீரஞ்சனி

த்ரிஷா, சமந்தா, அஞ்சலி, காஜல் அகர்வால், சதா, அமலா பால், ரீமா சென் என தமிழ் சினிமாவின் அந்தந்த கால முக்கியமான எல்லா ஹீரோயின்களும் இவருடைய மகள்களாக பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய படங்களைக் காட்டி, அவர்களில் யார் ரொம்ப அழகான மகள், ரொம்ப தைரியமான மகள், ரொம்ப சுட்டியான மகள், ஆல்டைம் பியூட்டி, சமத்துப் பிள்ளை, கோவக்காரப் பிள்ளை யார் என கேட்ட போது அவர் சொன்ன பதில்களை முழுமையா வீடியோவில் பாருங்க.

தமிழ் சினிமாவின் குனச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடிய இந்நிகழ்வின் முழு வீடியோவை Tamilnadu Now Youtube Channel-ல் பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top