கட்சி கரை போட்ட வெள்ளை வேஷ்டி கட்டிக்கிட்டு, வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு, நெத்தில விபூதி வைச்சிக்கிட்டு, சின்னம்மா “ஏய் பழனிசாமி” அப்டினு சொன்ன உடனே, ‘குனிஞ்சு சொல்லுங்க சின்னம்மா’ அப்டி வந்து நிப்பானே, அந்த பழனிசாமினு நினைச்சியாடா? பழனிசாமிடா – இந்த அளவுக்கு பேசலைனாலும், ‘பழைய பழனிசாமினு நினைச்சீங்களா?’னு சவால் விடுறது, கம்பராமாயணம் தந்த சேக்கிழார்னு இலக்கிய உலகையே நடுங்க வைக்கிறது, அபிராமியா? ஆபிரகாம் லிங்கனா?-னு திணறுறது, அம்பேத்கருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதுனு ஃப்ளோல வாசிக்கிறது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டி.வி-ல பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு கடுப்ப கிளப்புறதுனு ஏகப்பட்ட தரமான சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி பண்ணியிருக்காரு. என்ன நண்பர்களே, அவரை ரோஸ்ட் பண்ணலாமா?

எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தப்போ சென்னைல நடந்த புத்தகக் கண்காட்சில சிறப்பு விருந்தினரா கலந்துகிட்டு பேசுனாரு. அடிமைகளின் சூரியன் என போற்றப்பட்டவர். யாரு? அபிராமி, அபிராமி, அபிராமி. எதே, அபிராமியா? நான் சொல்லல. எடப்பாடி பழனிசாமி சொன்னாரு. அப்புறம், அண்ணே, அது ஆபிரகாம் லிங்கன்னு எடுத்துக்கொடுக்க. ம்ம்ம், ஆபிரகாம் லிங்கன், புத்தகங்களை படித்தே வாழ்க்கையில் உயர்ந்தார்னு தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாரு. சரி, மனுஷன் இந்தியாலயே பிறந்து வள்ர்ந்தவரு. வெளிநாட்டு பெயர் நமக்கும் கஷ்டமாதான இருக்கும். அடுத்து கரெக்டா வாசிப்பாரு உட்கார்ந்து கேட்டோம். நியாபகம் இருக்கா? ஆனால், தலைவரு. பாபு, பாபு, பாபு-னு வாசிக்க தொடங்கினாரு. ரைட்ரா, ஏன்டா, முன்னாடியே பேப்பர்லாம் கொடுடக்குறதில்லையா? என்னத்த கூட இருக்கீங்களோ? அடுத்தும் அவர் பேசுனதைக் கேட்டு வஞ்சிக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுனு சொல்லலாம். அதான், அந்த பாபு வேற யாரும் இல்லை. பாபா சாகேப் அம்பேத்கருக்குதான் தலைவர் அவ்ளோ கஷ்டப்பட்டாரு. பகத் சிங்குக்கு எழுதுன வரியை அம்பேத்கர் பெயர்கூட சேர்த்துப் படிச்சு, அம்பேத்கருக்கு தூக்கு தண்டனை கொடுத்த மாதிரி மாத்திட்டாரு. அடுத்த பல நாள்க்கு தலைவர்தான் கன்டன்ட்.
எடப்பாடி பழனிசாமி பண்ணதுலயே ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு. அதுதான் சேக்கிழார் சம்பவம். தஞ்சைல எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தப்போ அதுல ஸ்பெஷல் கெஸ்ட்டா கலந்துகிட்டு பேசுனாரு. அப்போ, தஞ்சை பெருமைகள் எல்லாத்தையும் குறிப்பிட்டு பேசும்போது, “கல்லணை கட்டிய கரிகால் சோழன், எண்ணற்ற கோயில்களை புனரமைத்த ரகுநாத நாயக்கர், தஞ்சையின் கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றை உலகறிய செய்த மன்னர் இரண்டாம் சரபோஜி, மகாத்மா காந்தியின் உதவியாளராக இருந்த பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, சுதந்திர போராட்ட வீரர் சர் சுவாமி ஐயர், கணித மேதை சீனிவாச ராமானுஜம்” இப்படி பட்டியல் போட்டுட்டே போகும்போது குறுக்க இந்த கௌசிக் வந்தா மாதிரி, சேக்கிழார் வந்துட்டாரு. “கம்பராமாயணம் தந்த சேக்கிழார்”னு பேப்பர்ல என்ன இருந்துச்சோ, அதை அப்படியே பார்த்து படிக்க, ட்ரோல், மீம்ஸ் பறக்க அடுத்த கன்டன்ட் ஆனாரு. “கவிப்பேரரசு ஏ.ஆர்.ரஜ்மானையே மிஞ்சுட்ட மாப்ள”னு சொல்ற மாதிரி வைச்சு செஞ்சாங்க. சேக்கிழார் எழுதுனது பெரிய புராணம். கம்பராமாயணம் எழுதுனது கம்பர். நம்ம ஆளுக்கு இதுக்கூட தெரியலனு வருத்தப்படுறதா? இல்லை கலாய்க்கிறதா? ஃப்ளோல பேசிட்டாருனு சொல்லலாம். ஆனால், மேடைப்பேச்சு எவ்வளவு முக்கியம். இவ்வளவு கவனம் இல்லாமதான் வேலை பார்க்குறாங்களா? அப்டினு கேள்வி வரும்ல. அதுக்காக சொன்னேன்.

இந்தியாவையே பதற வைச்ச சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு. அன்னைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி செய்தியாளர்களை சந்திக்கும்போது, இந்த சம்பவத்தை டி.வில பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்னு அசால்ட்டான பதில் ஒண்ணை சொன்னாரு. எவ்வளவு பொறுப்புமிக்க பதவில இருக்காருன்றதை செகண்ட் யோசிட்டுப் பார்த்தாக்கூட இப்படியொரு பதில் வந்திருக்காது. அருணா ஜெகதீசன் ஆணையம், “அப்போது இருந்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்திய மூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர்”னு சொல்லியிருக்காங்க. இதையும் அவங்க மறுக்கலாம். ஆனால், லாஜிக்கா யோசிச்சுப் பாருங்க. அவ்வளவு மக்கள்கூடி போராட்டம் நடக்குது. அதைப் பத்தி எந்தவித தகவலும் தெரியாமலேயா முதலமைச்சர் இருந்துருப்பாரு? யாராலயும் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத, பலரையும் கொந்தளிக்க வைச்ச எடப்பாடியோட ஸ்டேட்மென்ட்னா அதுதான். மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கும், தானாக தேடிபோய் முதல்வர் பதவியை பறித்து உட்கார்ந்த முதல்வருக்கும் இதுதான் வித்தியாசமானுகூட நிறைய பேர் பேசுறதை பார்க்க முடிஞ்சுது.
குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டவந்தப்போ எல்லா மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்துச்சு. அன்று இருந்த எதிர்கட்சிகள் ஆளும்கட்சிகளுக்கு எதிராக பலமா குரல் கொடுத்தாங்க. அப்படி அன்னைக்கு எதிர் கட்சியாக இருந்த ஸ்டாலினும் இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க, அதுக்கு அப்போ முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, “இதையே சொல்லி சொல்லி நாட்டு மக்களை ஏமாத்துறீங்க. இதனால யாரு பாதிக்கப்பட்ருக்காங்கனு சொல்லுங்க. நாங்க தீர்வு காணனும். தமிழ்நாட்டில் வாழும் எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்ருக்காங்கனு சுட்டிக்காட்டுங்க. அமைதியா வாழ்ற இந்த மாநிலத்துல அவதூறு பரப்பி குந்தகம் ஏற்படுற நிலைக்கு தள்றீங்க. யார் பாதிக்கப்பட்ருக்கா? சொல்லுங்க. நான் பதில் சொல்றேன்”னு செமயா கோவப்பட்டாரு. அந்த பேச்சு செம வைரல் ஆச்சு. அப்போதான், நிறைய பேர், அமைதியான முதல்வரதான இதுவரை பார்த்தீங்க? இனி அப்படி இல்லைனு செமயா ஃபயர் விட்டுட்டு இருந்தாங்க. அதெல்லாம் மாஸ்தான். அதேமாதிரி, ஒருதடவை எடப்பாடி பேசும்போது எதிர்கட்சில இருந்து பேசிட்டே இருந்துருக்காங்க. காண்டான நம்ம எடப்பாடி பழனிசாமி, “என்னங்க அர்த்தம். எப்பப்பாத்தாலும் பேசிட்டே இருந்தா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? இதெல்லாம் தவறுங்க”னு கோவமா பேசினாரு.

அ.தி.மு.க பொதுக்குழு கூடத்துல ஏற்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “சில எட்டப்பர்கள் கட்சியில் இருந்து களங்கம் ஏற்படுத்துறாங்க. எதிரிகளோட உறவு வைச்சிருக்காங்க. அதையெல்லாம் முறியடிக்க ஒற்றை தலைமை வேணும்னு முடிவெடுத்தீங்க. பிரச்னை தொடங்கும்போது அண்ணன் ஓ.பி.எஸை மூத்த தலைவர்கள் சந்திச்சு பேசுனாங்க. சமாதானமா போகலாம்னு பேசுனாங்க. கட்சி தொண்டர்கள், மக்கள் எண்ணம் ஒற்றை தலைமை. கடைசி வரைக்கும் அதுக்கு நீங்க இசைந்து கொடுக்கவே இல்லை. இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எனக்கு தெரியும். காவல்துறையை கையில வைச்சிருக்குற ஸ்டாலின் அவர்களும் அண்ணன் பன்னீர் செல்வமும் கூட்டாக இணைந்து அ.தி.மு.க-வை அழிக்க தலைமை கழகத்துல நாடகத்தை நடத்தியிருக்கீங்க. மிக வன்மையாக கண்டிக்கிறோம். ஆட்சி மாற்றம் ஏற்படாதா? பழைய பழனிசாமியா நினைச்சிட்டு இருக்கீங்களா? நடக்காது ஸ்டாலின் அவர்களே நடக்காது!”னு பொரி தெறிக்க பேசுனதை எப்படி மறக்க முடியும்?. ஆனால், அந்த டயலாக்தான் மாஸ். “பழைய பழனிசாமினு நினைக்கிறீங்களா?”னு சொல்லும்போது அனிருத் மட்டும் பி.ஜி.எம் போட்ருந்தா சும்மா தெறியா இருந்துருக்கும். அனிருத் மாம்ஸ அந்த இடத்துல மிஸ் பண்ணேன்.
உதயநிதி கார்ல மாறி ஏறுனது, ஜிம்ல போய் வொர்க் அவுட் பண்ணது, என்னங்க கேள்வி கேக்குறீங்கனு எகிறுனது, சமீபத்துல சும்மா இருக்க மாட்டீங்களானு எழும்பி கத்துனதுனு எடப்பாடி பழனிசாமி சொன்ன சம்பவங்களை சொல்லிட்டே போகலாம். அவர் பண்ண சேட்டைல உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!