2022 ஐபிஎல்லின் தரமான 3 ரிவெஞ்ச் இன்னிங்ஸ்கள்!

ஒரு டீம்ல நீங்க ஒரு டைம்ல முக்கியமான பிளேயரா இருக்கீங்கனு வைச்சுக்கோங்க. நீங்க நல்லாவே பெர்ஃபார்ம் பண்ணாலும் பாலிடிக்ஸ்னால ஓரங்கட்டப்பட்டா, உங்க மனசு என்ன பாடுபடும். அந்த டீம்ல இருந்து வெளிய போய், உங்களை ஓரங்கட்டுன டீமுக்கு எதிராவே வெறித்தனமான பெர்ஃபாமன்ஸ் காட்டுனா எப்படி இருக்கும் கெத்து?

கரியரோட 2 வருஷத்தை வீணடிச்ச கே.கே.ஆருக்கு குல்தீப் யாதவ் எப்படி பதிலடி கொடுத்தாருனு தெரியுமா… அப்படி ஐபிஎல் 2022ல இதுவரைக்கும் நடந்த தரமான 3 ரிவெஞ்ச் இன்னிங்ஸ்களைப் பத்திதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ், இந்தியாவின் ஸ்டார் ரிஸ்ட் ஸ்பின்னர்கள்ல முக்கியமானவரு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் கொல்கத்தா டீமோட மேட்ச் வின்னரா இருந்தாரு. ஆனா, இடையில் இந்த கதையில் ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் நடக்க ஆரம்பிச்சு, பிளேயிங் லெவன்லயே அவருக்கு இடம் கிடைக்காத நிலை. கடந்த இரண்டு சீசனா பெருசா அவர் ஐபிஎல்ல விளையாடவே இல்லைனே சொல்லலாம். ஆனா, இந்த சீசன்ல டெல்லி டீமால செல்க்ட் பண்ணப்பட்ட குல்தீப் யாதவ், தன்னோட வெர்ஷன் 2.0-வைக் காட்டி மிரள வைச்சுட்டு இருக்காரு. அதிலும் குறிப்பா கொல்கத்தா டீமுக்கு எதிரான இரண்டு போட்டிகள்லயும் அவரோட பெர்ஃபாமன்ஸ் டெல்லியோட வெற்றிக்கு முக்கியமானதா அமைஞ்சது. இரண்டு மேட்சுகள்லயும் 4, 4 விக்கெட் எடுத்து அசத்துனாரு குல்தீப். ஒரு மேட்சுல 4 ஓவர் போட்டு 35 ரன் கொடுத்து 4 விக்கெட்டும், இன்னொரு மேட்சுல 3 ஓவர் போட்டு 16 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும்னு அந்த இரண்டு மேட்சுல மட்டுமே 8 விக்கெட்டுகளை அள்ளி கெத்து காட்டுனாரு குல்தீப்.  

நான் ஸ்பின்னர் மட்டும் இல்லீங்க.. எனக்கு இன்னொரு முகம் இருக்குனு ரௌத்திரம் காட்டுன ஒரு இளம் வீரரைப் பத்திதான் நாம அடுத்து பார்க்கப் போறோம். அவர் யாருனு உங்களால கெஸ் பண்ண முடியுதா…

ரஷீத் கான்

சன்ரைசர்ஸ் டீமோட கிட்டத்தட்ட 5 சீசனா டிராவல் பண்ண ரஷீத் கானுக்கு, 2021 சீசன்ல அந்த டீமோட சில நடவடிக்கைகள் பிடிக்காம போகுது. மேட்ச் வின்னர் ரஷீத்தை அவங்க நடத்துன விதமும் மனசை நோகடிச்சிருக்கு. ஒரு கட்டத்துல நான் ஆக்‌ஷனுக்கே போயிடுறேன்னு முடிவெடுத்து, ஏலத்துல குஜராத் டீம் அவரை எடுத்தாங்க. ஹர்திக் பாண்டியாவோட வைஸ் கேப்டனா அவருக்கான ரோல் காத்திருந்துச்சு. இந்த சீசன்ல தான் ஒரு ஸ்பின் பௌலர் என்கிறதைத் தாண்டி ஃபினிஷரா வேற முகம் காட்டிட்டு இருக்காரு ரஷீத்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

குறிப்பா சொல்லணும்னா, தன்னோட Ex-team ஆன ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில ராகுல் தீவாதியாவோட இணைஞ்சு, 6வது விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்து அசத்துனாரு. அந்தப் போட்டில ரஷீத் வீசுன 4 ஓவர்கள்ல 45 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாரு. ஆனா, அதுக்கு பேட்டிங்ல பதில் சொன்னாரு. எப்படினு கேக்குறீங்களா… அந்தப் போட்டியின் கடைசி ஓவரில் 4 பந்துகளில் 3 பவுண்டரி லைனுக்கு வெளியில அனுப்பி குஜராத் டீமை ஜெயிக்க வைச்சாரு. அந்த மேட்சுல 11 பால்ல அவர் 35 ரன் எடுத்து நாட் அவுட்டா நின்னாரு.

அது இருக்கட்டுங்க… கேப்டனா இருந்த தன்னை பெஞ்ச்ல உக்கார வைச்சு வேடிக்கை பார்த்த எஸ்.ஆர்.ஹெச்சுக்கு வார்னர் கொடுத்த கடைசி ஓவர் ரிவெஞ்ச் மெசேஜ் தெரியுமா? அடுத்தது அதைப்பத்தி தான் பார்க்கப்போறோம்.

டேவிட் வார்னர்

எஸ்.ஆர்.ஹெச் டீமுக்கு ஐபிஎல் கப் அடிச்சுக் கொடுத்த கேப்டன். பல சீசன்கள்ல ஆரஞ்ச் கேப்புக்குப் போட்டிபோடுற அளவுக்கு கன்சிஸ்டன்டான பெர்ஃபாமன்ஸ் கொடுக்குற பேட்ஸ்மேன்னு ஐபிஎல்ல தடம் பதிச்சவர் டேவிட் வார்னர். ஆனா, போன சீசன்ல பல போட்டிகள்ல அந்த டீம் தோக்கவே, கேப்டன் பதவியைப் புடுங்கினதோட அவரை பிளேயிங் லெவன்ல இருந்தே தூக்கிவிட்டு வேடிக்கை பார்த்தாங்க… எங்கிருந்தாலும் வாழ்க டோன்ல கேலரில இருந்து ஒரு மேட்சை வார்னர் பார்த்துட்டு இருந்த வீடியோ போன சீசன்ல தாறுமாறு வைரல்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

ஆனா, இந்த சீசன்ல டெல்லியோட ஓபனிங் பில்லரா நின்னு அவர் பண்ணிட்டு இருக்க சம்பவங்கள் பெருசு. குறிப்பா, எஸ்.ஆர்.ஹெச்சுக்கு எதிரான போட்டியில ஓபனிங் இறங்குன அவரு 92 ரன் எடுத்து மிரட்டுனாரு. அதுவும் கடைசி ஓவர்ல சதமடிக்க சிங்கிள் கொடுக்கவானு கேட்ட பாவலுக்கு அவர் சொன்ன பதில், எஸ்.ஆர்.ஹெச்சுக்கே சொன்ன மெசேஜ்னே சொல்லலாம். ‘எவ்வளவு ஹார்டா பாலை ஹிட் பண்ண முடியுமோ, அவ்வளவு ஹார்டா பண்ணு’னு வார்னர் சொன்னதா பாவல் மேட்சுக்கு அப்புறம் நெகிழ்ச்சியா பேசுனாருனா பாத்துக்கோங்க.

இந்த ஸ்வீட் ரிவெஞ்ச்கள்ல உங்க ஃபேவரைட் எது… ஏன் அது உங்க ஃபேவரைட்னு நச்சுனு ஒரு வரில கமெண்ட் பண்ணுங்க மக்களே… 

Also Read -ஐபிஎல் தொடரில் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்ட 5 வீரர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top