தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு எவ்வளவு… யூனிட்டுகள் பயன்பாடு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் புதிய மின் கட்டணம் எவ்வளவு… இதெல்லாம்தான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
மின் கட்டண உயர்வு
ரூ.1.75 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வருவாயை அதிகரிக்க, மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டது. தொடக்கம் முதலே இதற்கு பரவலாக எதிர்ப்பும் எழுந்து வந்தது. ஆனால், மின் கட்டண உயர்வு தவிர்க்கவே முடியாதது என்று மின்வாரியம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, கோவையில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதியும், மதுரையில் ஆகஸ்ட் 18-ம் தேதியும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்ட் 22-லும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்துகொண்ட மக்கள், மின் கட்டண உயர்வுக்கு எதிராகவே கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிற மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கு, ஆளும் தி.மு.க அரசின் கூட்டணி கட்சிகளே கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க சார்பில் செப்டம்பர் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, `தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என்பது கர்நாடகா, குஜராத்தை விடக் குறைவுதான். ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி, கைத்தறி போன்றவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் போன்றவை அப்படியே தொடரும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
சரி வீடுகளுக்கான மின் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது?
தொழில்கள், கடைகளுக்கான மின் கட்டண உயர்வு விவரம்
- தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
- தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
- அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
- தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
- கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
- மாதம் நிலையான கட்டணம் ரூ.550