கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி நடக்குதுனு சொன்னாங்க. அநேகமா டி.டி.எஃப் வாசனுக்கும் கும்ப ராசியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஸ்பீடா பைக்ல போனதுக்கு கேஸ் போட்டாங்க.. சரினு ஸ்லோவா போனாப்ல. ஏண்டா ஹெல்மெட் போடலனு புடிச்சாங்க. பைக்ல போனாதானடா பிரச்னை கார்ல போறேண்டானு போனாப்ல. அப்பயும் கேஸ் வந்துச்சு. என்ன கொடுமைடா இதுனு வீட்லயே உக்கார்ந்து வீடியோ போட்டாப்ல. கொலைமிரட்டல் விடுறாருனு இப்போ அதுக்கும் கேஸ் போட்ருக்காங்க. 22 வயசுல ஒரு மனுசனுக்கு இத்தனை சோதனையானு ஒரு பக்கம் பரிதாபமாவும் இருக்கு. இன்னொரு பக்கம் உனக்கு ஆவனும்டானும் இருக்கு.
உண்மைல பார்த்தா டிடிஎஃப் வாசன் செம்ம ஹிட்தான். ஏன்னா இவ்வளவு பெரிய ஃபேன் பேஸ், கிரேஸ் இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல யாருக்கெல்லாம் வந்திருக்குனு எடுத்து பார்த்தா ஒண்ணு சினிமா நடிகர்களுக்கு வரும். இல்லைனா அரசியல்வாதிக்கு வரும். டிவி ஸ்டாரா இருக்கறவங்களுக்குக்கூட எல்லாருக்கும் இவ்வளவு பாப்புலாரிட்டி கிடைக்கிறது கஷ்டம்தான். இன்னும் சில பேர் அவங்களோட கோமாளித்தனங்களால ரொம்ப பாப்புலர் ஆவாங்க உதாரணத்துக்கு பவர் ஸ்டார், கூல் சுரேஷ் மாதிரி ஆட்கள். ரொம்ப கம்மியான டைம்ல பெரிய அளவுல இவங்களுக்கு பாப்புலாரிட்டி வரும். ஆனா அது வெறும் பாப்புலாரிட்டிதான் இவங்களுக்குனு பெரிய அளவுல கூட்டம் கூடாது. லைவ் எக்ஸாம்பிள் சொல்லணும்னா தேர்தல் பிரசாரங்கள்ல பார்க்கலாம். பெரிய நடிகர்னு நினைச்சிட்டு இருப்போம் ஆனா அவருக்கு கூட்டமே கூடாது. அந்த வகைல பார்த்தா டி.டி.எஃப் வாசனுக்கு ரொம்ப கம்மியான டைம்ல ரொம்ப கிரேஸான ஃபேன்ஸ் கிடைச்சது ஆச்சர்யம்தான். அவரு எங்க போனாலும் கூட்டம் கூடுது. ஒரு மீட்டப் வச்சா ஊரே ஸ்தம்பிக்குது. இவரு ஒரு ஏரியாவுக்கு வர்றாருனு தெரிஞ்சாலே கேஸாகுற அளவுக்கு பஞ்சாயத்தாகுது. இது ஏதோ 2கே கிட்ஸ் விவரம் புரியாம பண்றாய்ங்கனு நினைக்கக்கூடாது. ஒரு வேளை நாளைக்கே வாசன் ப்ரோ தேர்தல்ல நின்னா திடீர்னு அரசியலுக்கு வந்த நடிகர்களை விட அதிக ஓட்டு வாங்குனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. ஆனா அதுல ஒரு சிக்கல் பாருங்க.. அவருக்கு ஓட்டு போட நினைக்குறவங்கள்லாம் இன்னும் ஓட்டுப் போடுற வயசுக்கே வரல. அவிய்ங்க மேஜர் ஆகுறப்போ திருந்திடுவாய்ங்க அதுவும் ஒரு சிக்கல்.
ஏன் இவருக்கு இவ்ளோ பெரிய கிரேஸ்?
நாம திரையில எந்த மாதிரி ஹீரோக்களை ரசிச்சோமோ அதே சைக்காலஜிலதான் 2கே கிட்ஸ் யூடியூபர்ஸை ரசிக்குறாங்க. அதாவது நம்ம பண்ணனும்னு நினைக்கிற விசயங்களை பண்றவரு, நாம வாழணும்னு நினைச்ச வாழ்க்கையை வாழ்றது. சமீபமா நீங்க இன்ஸ்டாகிராம்ல ஆக்டிவா இருந்தாலே தெரியும் நூத்துக்கு தொன்னூறு 2கே கிட்ஸ்க்கு லடாக் டிரிப் போகணும்ங்குறதுதான் வாழ்வின் லட்சியமா இருக்கு. பைக்ல கெத்தா சுத்திட்டே இருக்கணும்ங்குறதை விரும்புறாங்க. அதை வாசன் பண்ணினதும் அவங்களோட ஆதர்சமாகிட்டாரு. இதுக்கு நடுவுல சில பல ஹியுமானிட்டி கண்டண்டுகளை சொருகிவிட்டதுல தலைவன் செம்ம ஹிட் ஆகிட்டாரு. அந்த கெத்துலதான் செல்ஃபி எடுத்து தளபதி விஜய்க்கே டஃப் கொடுக்க நினைச்சதும்.
ஓகே பிறகு ஏன் சொதப்புறாரு?
ஒரே பதில் மெச்சூரிட்டி இல்லை. அவருக்கு 22 வயசுதான் ஆகுதாம். இந்த வயசுல யாரா இருந்தாலும் எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்டானுதான் சுத்துவாங்க. அதேதான் இவரும் பண்றாரு. பின்விளைவுகளை பத்தியோ, சமூகத்தை பத்தியோ யோசிக்காம ஒரு விஷயத்தை பண்றது. டப்புனு டப்புனு வார்த்தைய விடுறது. அது மட்டுமில்லாம இவருக்கு ஒரு ஹெவியான பேக்ரவுண்ட் சப்போர்ட் இருக்குறது இவருக்கு இன்னும் அட்வாண்டேஜா இருக்குது. நெகட்டிவ் கமெண்ட்ஸ்லாம் அசால்டா ஹேண்டில் பண்ணிட்டு கேஸ்னு வந்தா டக்குனு ஆஃப் ஆகுற யூ-டியூபர்ஸ் நிறைய பேரை பார்த்திருப்போம். ஆனா கோர்ட்டுக்கே கோட் சூட்டோட மாஸ் பி.ஜி.எஃப் போட்டு போறார்னா கண்டிப்பா அந்த பேக்ரவுண்ட் சப்போர்ட் இருக்குன்ற நம்பிக்கைதான். அது மட்டுமில்லாம இவ்ளோ ஃபாலோயர்ஸ் வந்தா யாரா இருந்தாலும் நாம பெரியாளுங்குற எண்ணம் வரத்தானே செய்யும்.
Also Read – லோகேஷின் ட்வின் டிராகன்ஸ்.. ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு தரமான செய்கைகள்!
பழைய படங்களையெல்லாம் பார்க்கிறப்போ நமக்கு கிரிஞ்சா தோணும்ல ஆனா அந்த டைம்ல அது ரொம்ப ஹிட்டான படமா இருந்திருக்கும். அதே மாதிரியான ஒரு தலைமுறை இடைவெளி பிரச்னைதான் இப்பவும். இதையாடா ஹிட் ஆக்குனீங்கனு நமக்கு முந்தின தலைமுறையை எப்படி கலாய்க்கிறோமோ அதே மாதிரிதான் அதே கேள்வியை அடுத்த தலைமுறைகிட்டயும் கேட்கிறோம். ரசனைங்குற அளவுல வித்தியாசம் இருக்கு. அதனால அவங்களுக்கு பிடிச்ச சில விஷயங்கள் நமக்கு பிடிக்கல அது வரைக்கும் ஓகே. ஆனா அதுக்காக ஒருத்தர் அவ்ளோ ஸ்பீடுல ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டிட்டு போறது மாதிரி கிரைம்லாம் சப்போர்ட் பண்ண முடியாது. அது எந்த ஏஜ்ல பண்ணாலும் தப்புதான்.
உலகளவுல பாப்புலரான யூ-டியூபர் மிஸ்டர் பீஸ்ட். அவருக்கு 138 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவருக்கும் இதே மாதிரி கிரேஸியான ஃபேன்ஸ் இருக்காங்க. அவரு எப்பவுமே ஒரு பாசிட்டிவிட்டியை Spread பண்ணிக்கிட்டே இருப்பாரு. நெகடிவிட்டி எந்தளவுக்கு Clickbait-னு நினைக்கிறீங்களோ அதே அளவுக்கு பாசிடிவிட்டியும் Clickbait தான்னு சொல்வாப்ல. டி.டி.எஃப் வாசனுக்கு இந்த விஷயம் புரிஞ்சா நல்லாருக்கும். தொடர்ந்து இந்த மாதிரி சர்ச்சைகள்ல சிக்கிட்டு இருந்தா சீக்கிரமே பவர்ஸ்டார் ஆகிடுவாரு.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.