பேரறிவாளனிடம் எடப்பாடி சொன்ன தகவலும்… பின்னணியும்!

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், கடந்த 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், முழுமையான விடுதலையைப் பெற்றுள்ளார். அதையடுத்து, அவர் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் என ஒவ்வொருவரையும் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து வருகிறார்.

பேரறிவாளன் - அற்புதம்மாள்
பேரறிவாளன் – அற்புதம்மாள்

நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை அன்போடு, உணர்வுப்பூர்வமாக அணைத்துக் கொண்டார். அதன்பிறகு, சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு, துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை சந்திக்க நீலகிரி சென்றுவிட்டார்.

பேரறிவாளன் - மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கண்ணாடி தடுப்புக்குப் பின்புறம் அமர்ந்து கொண்டு பேரறிவாளனோடு பேசினார். அதற்குக் காரணம், கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நேரங்களில் இருந்து அவருடைய அலுவலகத்திலும், வீட்டிலும் இதுபோன்ற செட்டப் அமைக்கப்பட்டுள்ளது. தன்னால் பிறருக்கும், பிறரால் தனக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது. அந்த நேரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகமும், கே.சி.வீரமணியும் உங்களுக்காக அடிக்கடி என்னிடம் பேசுவார்கள் என்று குறிப்பிட்டார்.

அதில் விஷயம் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஒருவகையில் பேரறிவாளனின் உறவினர். பேரறிவாளனின் தந்தை குயிலனின் தந்தையும், கே.சி.வீரமணியின் தந்தையும் அண்ணன், தம்பிகள். அந்த வகையிலும் கடந்த ஆட்சியில் பேரறிவாளனுக்கு பரோல் சலுகை அடிக்கடி கிடைத்த து. ஆனால், ராஜிவ்காந்தி படுகொலையில் தண்டிக்கப்பட்ட நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கு பரோல் கிடைப்பதில் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தன. அதுபோல, கடந்தமுறை பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு விண்ணபித்த பைல், முதலமைச்சர் கவனத்திற்கு வந்தபோது, அதில் அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதில் கையெழுத்துப்போட வேண்டாம் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார். அப்போதுதான் முதலமைச்சர் பொறுப்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் அதில் தயக்கம் இருந்த து. அந்த விஷயம் கேள்விப்பட்டு வந்த அமைச்சர் சி.வி.சண்முகம், அந்த பைலை கோபமாக தூக்கியடித்துவிட்டு, தலைமைச் செயலாளர் என்பவர் நாம் சொல்வதை செய்வதற்குத்தான்… அதைவிடுத்து நமக்கு எல்லாம் அவர் உத்தரவுபோட முடியாது.அதனால், எந்த முடிவு என்றாலும் நீங்களே எடுங்கள்.. அதுதான் உங்களுக்கும், உங்கள் பதவிக்கும் மரியாதையைத் தரும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கோபமாக கூறினார். அதன்பிறகு, அந்த விஷயத்தைப் புரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

அதை நினைவுபடுத்தித் தான், எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகமும், கே.சி.வீரமணியும் உங்களுக்காக நிறைய பேசியுள்ளனர் என்று தெரிவித்தார்.

Also Read – 30 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலை… வழக்கு கடந்துவந்த பாதை #Timeline

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top