உங்கள் வெக்கேஷனை ஸ்பெஷலாக்கும் Caravan Tourism!

சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இந்திய அளவில் டிரெண்டாகி வரும் Caravan Tourism பத்தி தெரியுமா?

கொரோனா பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரிய அளவில் பாதிப்படைந்த துறை சுற்றுலாத் துறைதான். கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், சுற்றுலாத் துறை மெல்ல புத்துயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. மக்கள், தங்களின் பேக்கேஜ்களோடு சுற்றுலாத் தலங்களை நோக்கி பயணப்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதில், பலர் பாதுகாப்பாக கார் பயணங்களைத் தேர்வு செய்யும் நிலையில், சிலர் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அட்வெஞ்சர் விரும்பிகள், தங்கள் ஒவ்வொரு பயணத்திலும் புதுவிதமான முயற்சிகளை எடுப்பார்கள். அந்த வகையில், இந்த முறை அவர்களின் தேர்வு பெரும்பாலும் Caravan Tourism ஆக இருக்கிறது.

Caravan Tourism

கேரவன் டூரிஸம் என்பது ஒரு வண்டியில் சிறிய அளவிலான வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதிலேயே பயணம் மேற்கொள்ளும் ஒரு கான்செப்ட். அந்த சிறிய வீட்டில் கிச்சன், பாத்ரூம் மற்றும் சௌகரியமான பெட்ரூம் என அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும். இதனால், ஹோட்டலில் ரூம் புக் செய்ய வேண்டும் என்ற கவலையில்லாமல் சுற்றுலாத் தலங்களுக்கு நீங்கள் விசிட் அடிக்க முடியும். கொரோனா காலத்தில் பாதுகாப்பானது என்பதால், இந்த முறை பயணங்களை ஊக்குவிக்க மத்திய அரசின் சுற்றுலாத் துறையோடு, பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

ஏன் கேரவன்?

இந்திய அளவில் எக்கோ, அட்வெஞ்சர், வைல்ட் லைஃப் மற்றும் பக்தி சுற்றுலாக்கள் பற்றிய ஆர்வம் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் பயணிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியான இடங்களில் Caravan Tourism சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது. ரிமோட்டான இடங்களில் கூட தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே என்கிற கவலையில்லாமல் நீங்கள் பயணிக்க முடியும்.

அதேபோல், பொதுப்போக்குவரத்து மற்றும் ஹோட்டல்களில் தங்கும்போது கூட்டமான இடங்களைக் கடக்க வேண்டி வரும் என்பதால், கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. ஆனால், கேரவன் டூரிஸத்தில் இந்தப் பிரச்னை கிடையாது. அதேபோல், கேரவன்கள் உங்களுக்கான பெர்சனல் ஸ்பேஸைக் கொடுப்பதோடு, நீண்டதூர பயணங்களுக்கும் ஏற்றவை என்பதால் இதன் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

கேரவன் பார்க்ஸ் பத்தி தெரியுமா?

கேரவனை நீங்கள் நினைக்கும் இடத்திலெல்லாம் பார்க் செய்துவிட முடியாது. இரவு நேரங்களில் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் நிறுத்துவதற்கு ஒரு இடம் தேவை. கேரவன் பார்க்ஸ் என்பவை அப்படியான ஒரு இடம். சுற்றிலும் வேலியுடன் பாதுகாப்பு வசதிகள் கொண்ட நல்ல இடவசதி கொண்ட இவை, கேரவன்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

இந்தியாவில் இருக்கும் வசதிகள்

இந்தியாவின் பல மாநிலங்கள் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் கேரவன் டூரிஸத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், கேரவன் டூரிஸத்துக்கான திட்டங்களை முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், கடந்த 2020-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அதுதவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கென பிரத்யேக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. கேரவன்களைப் பொறுத்தவரை அவற்றை நீங்கள் வாடகைக்குக் கூட எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Also Read –

வாட்டர் ஸ்போர்ட் லவ்வரா நீங்க.. ‘Kayaking’ செய்ய இந்தியாவின் 5 பெஸ்ட் ஸ்பாட்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top