விக்ரம் படத்துல இண்டர்வெல் வரைக்கும் ஹீரோ, நம்ம ஃபகத் ஃபாஸில்தான். இதுவரைக்கும் தமிழ் சினிமால ஃபகத் நடிச்சப் படங்கள்லயே அவரை கரெக்ட்டா யூஸ் லோகேஷ் கனகராஜ்தான். ஆனாலும், அந்த மனுஷன் நடிப்புக்கு இதெல்லாம் கண்டிப்பா பத்தாது. மலையாளத்துல முன்னறியிப்புனு ஒரு கிளாசிக் படத்தைக் கொடுத்த டைரக்டர் வேணு. அவரு, “இவ்வளவு சின்ன வயசு உள்ள ஒரு ஆக்டர் என்னை இன்னும் அதிசயப்படுத்துறது சாதாரண விஷயம் இல்லை. மோகன்லாலை கம்பேர் பண்ணி பேசுறாங்கனா அதுக்கு ஃபகத்தோட ரியலிஸ்டிக் ஆக்டிங் தான் காரணம்”னு மோகன்லாலை கம்பேர் பண்ணி சொல்லுவாரு. ஃபகத் அவ்வளவு இண்டன்ஸோட நடிக்கக்கூடியவரு. அதனால, மம்முட்டிகூட கம்பேர் பண்ணி பேசுவாங்க. ஆனால், என்னையெல்லாம் கேட்டா, நடிப்புனு வந்துட்டா ஃபகத் ஃபாஸிலுக்கு இணை ஃபகத் ஃபாஸில் மட்டும்தான். ஏன்னுதான கேக்குறீங்க… அதைத்தான் இந்த வீடியோல தெரிஞ்சுக்கப் போறோம்.
தோல்வியிலிருந்து தொடக்கம்
தமிழ்ல விஜய்க்கு ‘காதலுக்கு மரியாதை’, மலையாளத்துல குஞ்சாக்கோ போபனுக்கு ‘அனியதிபிராவு’னு பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த டைரக்டர் ஃபாஸில், தன்னோட மகன் ஃபகத் ஃபாஸிலை ‘கையெத்தும் தூரத்து’ன்ற படத்துல அறிமுகப்படுத்துனாரு. ஆனால், படம் அட்டர் ஃப்ளாப். ஃபகத்தை மட்டும் அந்தப் படத்துல விமர்சிக்கல. அவரோட அப்பாவையும் சேர்த்து பயங்கரமா விமர்சனம் பண்ணாங்க. “எந்தவிதமான பிரிபரேஷனும் இல்லாமல் நடிக்க வந்தது என்னோட தப்பு. என்னோட அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை”னு ஃபகத் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு படிக்க கிளம்பிட்டாரு. ஏழு வருஷம் கழிச்சு ‘கேரளா கஃபே’ன்ற படத்துல தன்னோட ரெண்டாவது இன்னிங்ஸை ஃபகத் தொடங்கினாரு. அந்தாலஜி மாதிரியான படம் அது. மலையாளத்துல இருக்குற முன்னணி டைரக்டர்ஸ் பலரும் அந்தப் படத்துல இருந்து ஃபகத் நடிப்பை கவனிக்க ஆரம்பிச்சாங்க.
ஃபாஸில்க்கிட்ட ஒரு இண்டர்வியூல, “இன்னைக்கு முன்ன்ணில இருக்குற பல நடிகர்களுக்கும் நல்ல படத்தைக் கொடுத்துட்டீங்க. ஆனால், சொந்தம் மகனுக்கு ஒரு நல்ல சினிமா மூலமா எண்ட்ரி கொடுக்க முடியலையா?”னு கேப்பாங்க. அதுக்கு ஃபாசில், “நானும் சரி, அவனும் சரி கண்டிப்பா திரும்ப வருவோம்”னு பழைய இண்டர்வியூ ஒண்ணுல சொல்லியிருப்பாரு. அந்தப் படம் அட்டர் ஃப்ளாப்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஃபாசில், ஃபகத்கிட்ட, “நீ ஒண்ணும் அவ்வளவு மோசமான நடிகன் இல்லை”னு சொல்லியிருக்காரு. சமாதானம் பண்ணதான் அப்பா சொல்றாருனு நினைச்சிட்டு அமெரிக்கா போய்ருக்காரு. ஆனால், செமயான மெச்சூரிட்டியோட கம்பேக் கொடுத்து இன்னைக்கு மலையாளத்துல மட்டுமில்ல, தமிழ், தெலுங்குனு சவுத் இந்தியால பலரும் நடிக்க தயங்குற கேரக்டரைக்கூட தைரியமா எடுத்துப்பண்ணி மோஸ்ட் வாண்டட் ஆக்டரா ஃபகத் இருக்காரு.
ஃபகத்கிட்ட படம் தோத்துப்போச்சுனா தளர்ந்து போய்டுவீங்களானு எப்பவும் கேப்பாங்க. “நான் என்னோட கரியரை தோல்வியில இருந்துதான தொடங்குனேன். அதுனால, அதுவும் ஃபேஸ் ஆஃப் ஜார்னி. அதுனால தோல்விகள் மேல இருக்குற பயமே போய்டுச்சு”னு டேக் இட் ஈஸியா ஒரு பதில் சொல்லுவாரு. மலையாள சினிமாவோட முகத்தை மாத்துனதுல மோகன்லால், மம்முட்டிக்குலாம் பெரிய பங்கு இருக்குற மாதிரி, மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துட்டு போனதுல தோல்வியில் இருந்து தொடங்கிய நாயகன் ஃபகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. ஆனால், இதை எப்பவும் ஃபகத் ஏத்துக்கமாட்டாரு.
கண்கள் சொல்லும் எமோஷன்ஸ்
கேரளா கஃபே படத்துக்கு அப்புறம் பிரமானி, காக்டெயில், டூர்னமெண்ட்னு சில படங்கள்ல நடிச்சாரு. இருந்தாலும் அவருக்கு பெருசா பேரு வாங்கிக் கொடுக்கல. ஆனால், அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது ‘சாப்பா குரிசு’ன்ற படம். இந்தப் படத்துல நெகட்டிவ் ஷேட் கேரக்டர்லதான் ஃபகத் நடிச்சிருந்தாரு. நடிப்புக்குனு பலராலும் பாராட்டப்பட்டு, கேரளா ஸ்டேட் ஃபிலிம் அவார்டும் வாங்குனது இந்தப் படத்துக்குதான். ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படத்துல ஃபகத் நடிச்ச கேரக்டரை எந்த நடிகரும் நடிக்க அவ்வளவு சீக்கிரம் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. ஆனால், ஃபகத் நடிச்சாரு. ஃபகத்தோட நடிப்பு தனித்துவமா தெரியுறதுக்கு முக்கியமான காரணம் அவரோட கண்கள்கள்தான். 22 ஃபீமேல் கோட்டயம்ல கோபம், இயலாமை, அதிர்ச்சி, வலி, ஏமாத்துறது. தோல்வியை ஏத்துக்குறதுனு எல்லாத்தையும் தன்னோட கண்கள் வழியா பல சீன்கள்ல ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சொல்லியிருப்பாரு.
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லுவாங்கள்ல… அது எல்லாப் படத்துலயும் ஹீரோவுக்கு வரும். ஆனால், அதை நாம உணர்றதுக்கு ஒரு லவ் பி.ஜி.எம், க்ளோஸ் ஷாட், காத்து அடிச்சு முடி பறக்குறது, துள்ளி குதிக்கிறது, உடனே ஃபாலோ பண்ண ஆரம்பிக்கிறதுனு எல்லாமே தேவைப்படும். அன்னயும் ரசூலும் படத்துலயும் நான் சொன்னதுல சில விஷயங்கள் இருக்கும். ஆனால், ஸ்பெஷல் என்னனா… ஃபஸ்ட் டைம் ஃபகத் ஆண்ட்ரியாவை பார்ப்பாரு. கண்ணை பிளிக் பண்ண மாட்டாரு. கருவிழிகள் அசையாது. அதுவரைக்கும் வாழ்க்கைல பார்க்காத ஒரு விஷயத்தை நாம எப்படி பார்ப்போம். அப்படி பார்ப்பாரு. அந்த பார்வையே அவருக்கு ஃபஸ்ட் டைம் லவ் வந்திடுச்சுனு சொல்லும். வேற படங்கள்லலாம் மியூசிக் கட் பண்ணிட்டா… என்ன பண்றாங்க?னு யோசிப்போம். ஆனால், இதுல மியூசிக் கட் பண்ணி பிளாக் அண்ட் வொயிட்ல பார்த்தாக்கூட அந்த லவ் நமக்கு அப்படி தெரியும். காரணம் அந்த கண்ணுல இருக்குற எமோஷன்ஸ்.
ஆர்டிஸ்ட்ன்ற படத்துல கண்ணு தெரியாத ஒரு ஆர்டிஸ்டா நடிச்சிருப்பாரு. அந்தப் படம் பெருசா வரவேற்பு பெறலை. ஆனால், அதுல அந்த மனுஷன் பேய் மாதிரி நடிச்சிருப்பாரு. அந்தக் கண்கள்ல ஒரு ஆர்டிஸ்ட் வாழ்ந்துட்டு இருப்பாரு. நார்த் 24 காதம் படத்துல பக்காவா டைம்க்கு எல்லாம் பண்ற சின்சியரான ஆளா நடிச்சிருப்பாரு. ஒரு நல்ல ஃபீல்குட் மூவி இந்தப்படம். யாரையும் நம்பாத, யாரைப் பற்றியும் கவலைப்படாத கேரக்டர்ல இருந்து எல்லார்க்கிட்டயும் அன்பைக் காமிக்கிற ஒரு மனுஷனா மாறுறதை தான் போட்டிருக்க கண்ணாடிக்குள்ள இருக்கும் கண்கள் வழியா காமிச்சிருப்பாரு. அதுக்கப்புறம் அவர் நடிச்ச பெங்களூர் டேஸ் தவிர மற்ற படங்கள் பெருசா வரவேற்பு பெறலை. அவரோட செகண்ட் இன்னிங்ஸ் முடிஞ்சதா நினைச்சாங்க. ஆனால், மகேஷிண்ட பிரதிகாரம் மூலமா அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாரா வந்தாரு ஃபகத்.
மகேஷிண்ட பிரதிகாரத்துல காதல் தோல்வி, ஃபோட்டோகிராபரா தோல்வி, சாதாரண மனுஷனா ஒரு ரௌடி மாதிரியான ஆள்கிட்ட தோல்வினு தோல்வியை மட்டுமே பார்த்து டிப்ரஷன்ல இருக்குறதை அந்த கண்கள் சொல்லும். கடைசில் ஜெயிச்சப்புறம்கூட நான் சாதாரண ஆளுதான்னு அந்தக் கண்ணு சொல்லும். அந்தப் படம் வந்ததுக்கு அப்புறம் மம்முட்டி ஃபகத்தைப் பத்தி நஸ்ரியாக்கிட்ட கேக்கும்போது, “மகேஷ் இல்லையா”னுதான் கேப்பாராம். சூப்பார் ஸ்டார்ல இருந்து சாதாரண ஆள் வரைக்கும் அந்த கேரக்டர் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துச்சு. பல மொழிகளுக்கும் மலையாள சினிமாவை கொண்டு போய் இந்தப் படம் சேர்த்துச்சு. தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும் படத்துல அப்படியே அசல் திருடனா நடிச்சிருப்பாரு. அந்தக் கண்ணுல அவ்வளவு கள்ளத்தனம் இருக்கும். சீரியஸாதான் இந்த ஆளுக்கு நடிக்க வரும்னு இருந்ததை ‘ஒரு இந்தியன் பிரணயகதா’ல மாத்துனாரு. அந்தக் கண்ணுல அவ்வளவு காமெடி சென்ஸ் தெரியும். ஞான் பிரகாஷன்ல பேராசை புடிச்சவனா இருந்து ஒரு நல்ல மனுஷனா மாறுறதை அவ்வளவு அழகா கண்ணுல காமிச்சிருப்பாரு. குறிப்பா பொய் சொல்ற இடங்கள்லயெல்லாம் கண்ணு அப்படி இருக்கும். டைரக்டர்ஸ்கிட்டலாம், ஃபகத் கண்ணு வேணும்னு கேட்டியாமேனு கண்ணுல நடிப்பை அள்ளி கொடுப்பாருபோல!
கண்ணை வைச்சு இப்படிலாம் நடிக்க முடியுமானு எல்லாரையும் ஆச்சரியப்பட வைச்சப் படம் ‘கும்பளங்கி நைட்ஸ்’. அதுல கிச்சன்ல அக்காவும் தங்கச்சியும் பேசும்போது என்ன பேசுனீங்கனு கேக்குற சீன் இருக்குல. அதைப் பார்த்தாலே ஃபகத் மேல பயம் வந்துரும். மனுஷன் அந்த கேரக்டரை நடிக்கிறதுக்காகவே பிறந்தவர் மாதிரி நடிச்சிருப்பாரு. டிரான்ஸ்ல டிப்ரஷனா இருக்குற ஒருத்தன் எப்படி மோட்டிவேஷன் கொடுக்குறான்றதுல இருந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி கட்டியமைக்கிறான்னு நடிச்சிருப்பாரு. அதுலயும் அந்தக் கண்கள் அவ்வளவு ஷார்ப்பா இருக்கும். அப்புறம் இருள், ஜோஜி, மாலிக் எல்லாமே ஃபகத் நடிப்புக்கு தீனிப்போட்ட படங்கள். எல்லா கேரக்டர்கள்லயும் இருக்குற ப்ளஸ் பாயிண்ட் கண்ணுதான். புஷ்பாலகூட அந்தக் கண்ணு பண்ண வேலை இருக்கே… அதை யாரால ரீபிளேஸ் பண்ண முடியும்? கண்ணை மூடினாக்கூட அதுல ஒரு இம்பேக்டை கிரியேட் பண்ணுவாரு. அந்தக் கண்ணை அடுத்தப் படத்துல வேற கேரக்டர்ல நாம பார்க்கவே முடியாது. அதுதான் ஃபகத் கண்களோட மேஜிக்.
ஸ்டீரியோடைப்ஸை உடைத்த நடிகர்
ஃபகத் தோல்வியில இருந்து திரும்ப வந்ததும் எல்லாரும் கேட்ட கேள்வி உங்களுக்கு தலைல முடி இல்லை. நடிப்புனு வந்தா அதெல்லாம் முக்கியம். உங்களுக்கு அது ஓகேவா இருக்கா?ன்றதுதான். அதுக்கு ஃபகத், “நான் இப்படி இருக்குறதுலதான் கம்ஃபர்ட்டா இருக்கேன். என்னோட லுக்குக்கு ஏற்ற கேரக்டர்கள் வந்தா, அந்த ஸ்கிரிப் என்னை இம்ப்ரஸ் பண்ணா நான் கண்டிப்பா அதுல நடிப்பேன்”னு சொல்லுவாரு. அதேமாதிரி ஒரு நடிகரோட பாடி அவருக்கு இல்லைனும் விமர்சனங்கள் வந்துச்சு. ஆனால், தன்னோட அசாத்தியமான நடிப்பால இந்த ரெண்டையுமே பார்க்குற நம்மள மறக்க வைச்சிடுவாரு. ஒரு ஹீரோனா இப்படிதான் இருக்கணும்ன்ற ஸ்டீரியோடைப்பை நடிப்பு மூலமா ஜஸ்ட் லைக் தேட்னு தூக்கி வீசியிருப்பாரு. முடியை சரி பண்ண இன்னைக்கு பல டெக்னாலஜி வந்திடுச்சு. ஆனால், ஃபகத்துக்கு இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு. தன்னோட சினிமா கரியர்ல ஒரேஒரு படத்துலதான் விக் வைச்சு நடிச்சிருக்காரு.
ஃபகத் பண்ண கேரக்டரை வேற மொழில பண்ண ஆளே இல்லைனு சொல்லலாம். ஃபகத்தோட மகேஷிண்ட பிரதிகாரம் படத்தை வேற மொழிகள்ல ரீமேக் பண்ணாங்க. ஆனால், அது வொர்க் அவுட்டே ஆகலை. மலையாளத்தைத் தவிர எந்த இண்டஸ்ட்ரீல அவர் நடிச்சிருந்தாலும், இப்படியான கேரக்டர்ஸ் அவருக்கு கண்டிப்பா கிடைச்சிருக்காது. அவரோட, சாப்பாக்குருசு, தொண்டிமுதல், டைமண்ட்நெக்ளஸ் படத்தையெல்லாம் ரீமேக் பண்ண மற்ற இண்டஸ்ட்ரீல ரைட்ஸ் வாங்கி வைச்சிருக்காங்க. ஆனால், அந்த கேரக்டர்ஸை பண்ண ஆள் கிடைக்கல. ஆனால், இப்பவும் ஃபகத்கிட்ட நீங்க ஒரு நல்ல நடிகரானு கேட்டா, “கண்டிப்பா இல்லை. என்னைவிட நல்ல நடிகர்கள் இருக்காங்க”னு சொல்லுவாரு. அதனாலதான் சொல்றேன், ஃபகத்தைவிட நல்ல நடிகர்கள் இருக்கலாம். ஆனால், ஃபகத்துக்கு இணை ஃபகத் மட்டும்தான்.
Also Read – கமல்… விஜய் சேதுபதி… ஃபகத் ஃபாசில்… விக்ரம் படத்துல யார் வின்னர்?