குரங்கு அம்மை

உலகளாவிய சுகாதார அவசரநிலை.. குரங்கு அம்மை அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?

பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் முதல்முறையாக Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் யாரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய நோய் மாறுபாட்டின் அதிகமான வழக்குகள் உறுதி செய்யப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வந்த Mpox நோய் பிற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை WHO அறிவித்திருந்தது.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும்.

பொதுவான அறிகுறிகள்

காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது.

பாதிப்புகள்:

· கண் வலி அல்லது பார்வை மங்குதல்

· மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்,

· உணர்வு மாற்றம், வலிப்பு

· சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்

அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்:

  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்
  • இணை நோய் பாதிப்புடையவர்கள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
  • பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்

எப்படிப் பரவும்?

  • நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.
  • உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும்
  • உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறிய முடியாத பொருள்களிலிருந்து மறைமுகமாகவும் இது பரவக்கூடும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • நீங்களோ / உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
  • நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்
  • நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்
  • தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்
  • நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • தகவல் – pib.gov.in

2 thoughts on “உலகளாவிய சுகாதார அவசரநிலை.. குரங்கு அம்மை அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?”

  1. I share your level of appreciation for the work you’ve produced. The sketch you’ve displayed is elegant, and the content you’ve authored is sophisticated. Yet, you appear to be concerned about the possibility of heading in a direction that could be seen as dubious. I agree that you’ll be able to resolve this matter efficiently.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top