அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோபைடன் விலகியதற்குப் பின்னணியில் சதி இருப்பதாக மற்றொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி டெக் உலக ஜாம்பவான் எலான் மஸ்க், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார். இதில், டெக் உலக சமீபத்திய பிரச்னைகள், உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து டிரம்ப் பேசியிருந்தார்.
அந்த நேர்காணலில் இருந்து சில துளிகள்…
- ஜோபைடன் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியதன் பின்னணியில் சதி இருப்பதாகவே கருதுகிறேன். விவாதத்தில் அவரை மிக மோசமாக நான் தோற்கடித்திருந்தேன். அவரை மிரட்டி பணிய வைத்திருக்கிறார்கள்.
- ஜோபைடன் அமெரிக்க அதிபராக இருந்ததால்தான் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபராக அவர் இல்லாமல் இருந்திருந்தால், இந்தத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
- தற்போதைய சூழலில் சரியான அதிபர் இல்லாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மோசமான நிலையில் இருக்கிறது. பைடனுக்குப் பின் கமலா ஹாரிஸ் அதிபரானால் நிலைமை இன்னும் மோசமாகும்.
- துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் நான் மட்டும் தலையைத் திருப்பியிரா விட்டால், அந்த குண்டு என் தலையில் பதிந்திருக்கும். குண்டு என் காதை உரசிக் கொண்டு சென்றது. நான் தைரியமாக இருக்கிறேன் என்பதைக் காட்டவே, உடனே எழுந்து நின்றேன். அந்தத் தருணத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவோம் என்று குறிப்பிட்ட டிரம்ப், அது அமெரிக்க வரலாறு இதுவரை பார்க்காத அளவு பிரமாண்டமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நேர்காணல் தொடங்குவதாக இருந்த நேரத்தைக் காட்டிலும் 40 நிமிடங்கள் தாமதாமாகவே தொடங்கியது. எக்ஸ் தளத்தைக் குறிவைத்து நடந்த சைபர் தாக்குதலே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், அதை சரி செய்யும் வேலைகள் நடந்து வருவதாகவும் சொன்னார்.
நேர்காணல் தொடங்கி 15 நிமிடங்கள் கடந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் அது தடைபட்டது. சிறிதுநேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு நேர்காணல் தொடங்கியது. எக்ஸ் தளத்தில் நேரலையாக நடந்த இந்த நேர்காணலை லைவில் மட்டும் 2.7 கோடிக்கும் அதிகமானோர் கேட்டனர். இதேபோல், கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
Also Read – NIRF Ranking 2024: நாட்டின் டாப் கல்லூரி, பல்கலை. எது… தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
I do not even know how I ended up here but I thought this post was great I do not know who you are but certainly youre going to a famous blogger if you are not already Cheers
Real Estate Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.
Real Estate I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.