மனசிலாயோ பாடல்

ரஜினியின் ‘மனசிலாயோ’… மலேசியா வாசுதேவன் சம்பவங்கள்!

ஷாகுல் ஹமீது, பவதாரணி, பாம்பே பாக்யாவோட குரல்களை ஏ.ஐ மூலமா கிரியேட் பண்ணி நம்மளை எஞ்சாய் பண்ண வைச்சாங்க. அந்த வரிசையில் இப்போ ரஜினியோட வேட்டையன் படத்துல மலேசியா வாசுதேவன் குரல்ல மனசிலாயோ? பாடல் ரிலீஸாகியிருக்கு.

மலேசியா வாசுதேவன் பண்ண முதல் சம்பவம்னா என்ன?

ரஜினி – மலேசியா வாசுதேவன் காம்போ மாஸ் பாடல்கள்?

லெஜண்ட் பாடகர்களின் வாய்ஸை ரீகிரியேட் பண்றது நல்லதா?

தமிழ் சினிமால மோஸ்ட் அன்டர்ரேட்டட் சிங்கர்னு இன்னைக்கு கொண்டாடப்படுற பாடகர்கள்ல முக்கியமானவரு, மலேசியா வாசுதேவன். அவரர் வாழ்க்கையை திருப்பிப்போடுற வாய்ப்பு கிடைக்கவே எஸ்.பி.பிதான் காரணம். 16 வயதினிலே… பாரதிராஜா, ரஜினி, கமல், இளையராஜா எல்லாருக்குமே ஸ்பெஷல். ஏன், தமிழ் சினிமாவுக்கே ரொம்ப ஸ்பெஷல். அந்த லிஸ்ட்ல வாசுவும் இருக்காரு. இந்தப் படம்தான் அவரை மக்கள் மனசுல கொண்டு போய் உட்கார வைச்சுது.

இளையராஜா சகோதரர்களோட பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழுவில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தவர் தான், மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே பூஜைக்கு எல்லாரும் வந்துருக்காங்க. அன்னைக்கு பாட்டும் ரெக்கார்டிங் இருக்கு. சம்பவம் என்னனா, அன்னைக்கு பாட்டைப் பாட எஸ்.பி.பியை வர சொல்லிருக்காங்க. அவர் லேட்டா வந்துருக்காரு. வந்தவருக்கு தொண்டை கட்டியிருக்கு. பாட முடியாத நிலை. என்னய்யா இது, இப்படியொரு பிரச்னையானு பாரதிராஜா புலம்பியிருக்காரு.

பாரதிராஜாவை தேத்திட்டு… மலேசியா வாசுதேவன் வந்துருக்கான். அவனைக் கூப்பிட்டு பாட வைப்போம்.  சரியா பாடலைனா, பாலுவை பாட வைப்போம்னு சமாதானப்படுத்தியிருக்காரு. அரை மனசோட எல்லாரும் ஒத்துக்குறாங்க. இளையாராஜா வாசுவைக் கூப்பிட்டு, உனக்கு அருமையான சந்தர்ப்பம். கமல்ஹாசனுக்கு பாடப்போற. இதுல ஒரு அடி அடிச்சேன்னா எங்கயோ போய்டுவேன்றாரு. இவருக்கு வயிறு கலக்க்கியிருக்கு. சுசீலாம்மாகூட பாடுறாருன்றது அவருக்கு இன்னும் நடுக்கம். இருந்தாலும் ஒரு தைரியத்துல பாடுறாரு. இவர் பாடி முடிச்சதும் எல்லாருக்கும் இவர் குரல் புடிச்சுப் போய்டுது.

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாட்டுதான் அந்தப் பாட்டு. அந்தப் பாட்டு எல்லாருக்கும் புடிக்க முக்கிய காரணம். அந்த கிராமத்து ஸ்லாங் எல்லாருக்கும் கனெக்ட் ஆயிடுச்சு. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு இப்பவும் சோஷியல் மீடியால கேக்கலாம். இளையராஜா சொன்ன மாதிரி அந்தப் படத்துக்கு அப்புறம் செமயா டேக் ஆஃப் ஆயிட்டாரு. அப்புறம் பாடுனதெல்லாம் ஹிட்டுதான். என்னதான் கமலுக்கு இவர் பயங்கரமா பாடி புகழ் பெற்றிருந்தாலும், ரஜினிக்கு இவர் பாடுன பாடல்கள் எல்லாம் வேறமாறி.

ரஜினி, கமலுக்குலாம் செட்டான சில பேரோட வாய்ஸ்ல டாப் 2ல எஸ்.பி.பியும் மலேசியா வாசுதேவனும்தான் இருப்பாங்க. ரஜினி – வாசு  காம்போனு சொன்னதும் நியாபகம் வர்ற முதல் பாடல், பொதுவாக எம்மனசு தங்கம். ப்பா… என்னா பாட்டு, என்னா வைப், என்னா மாஸ், இப்போ கேட்டாலும் கூஸ்பம்ப்ஸ்தான். அப்புறம் என்னோட ராசி நல்ல ராசி. வருஷ ராசிப்பலனுக்குலாம் பி.ஜி.எம் இப்பவும் இதுதான். ஆசை நூறு வகை, எஜமான் காலடி மன்னெடுத்து, சிங்கம் ஒன்று புறப்பட்டதே, என்னம்மா கண்ணுனு பண்ண சம்பவங்கள் ஏராளம். இதைத் தவிர டூயட் பாடல்கள் லிஸ்ட்ல இருக்கு. அதிசயப்பிறவில எல்லாமே இவர் பாடுனதுதான்.

மலேசியா வாசுதேவன் மாஸா ஒருபக்கம் பாடல்களை பாடினா இன்னொரு பக்கம் அப்படியே ஆப்போசிட்ல மெலடிலயும் பின்னிருவாரு. ஒரு பாட்டைக் கேட்டா நேரா அந்தப் பாட்டு இதயத்துக்குப் போனும். இன்னொரு காது வழியா வந்துடக்கூடாதுனு மலேசியா வாசுதேவன் சொல்லுவாரு. அதை பெர்ஃபெக்ட்டா அவரோட பல பாடல்கள் வழியா பண்ணியிருக்காரு. பூங்காற்று திரும்புமா, ஆகாய கங்கை, ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தங்க ரதத்தில், கோவில் மணியோசை, வா வா வசந்தமேனு லிஸ்ட் சொல்லிட்டே போகலாம். அதுலயும் உள்ள அழுகுறேன்… வெளிய சிரிக்கிறேன் வரிகளை அவர் வாய்ஸ்ல கேக்கும்போது உயிர் மெல்ட்டாகும்.

உயிரை உருக்குற அந்த வாய்ஸ் மலேசியா வாசுதேவனுக்கு அவ்வளவு அற்புதமா அமைஞ்சுருக்கு. எஸ்.பி.பி மெனக்கெட்டு பண்றதை இவர் அசால்ட்டா பண்ணிடுவாங்கனு சொல்லுவாங்க. அதுனாலதான் அவர் ஸ்பெஷல். இப்போ வாய்ஸ் ரீகிரியேட் டிரெண்டாகுது. பொதுவா அவங்க வாய்ஸ் இருந்த அந்தப் பாட்டு ரொம்ப நல்லாருக்கும்னு ரீசன் இருந்து, அந்தப் பாட்டும் சரியா செட்டாச்சுனா ரீகிரியேட் பண்றது சரியான விஷயம். ஆனால், இசை நல்லால்லை. அவர் வாய்ஸ் செட்டாகலைனு, கேட்கும்போது தோணிச்சுனா அவர் வாய்ஸை யூஸ் பண்றது, சரியா இருக்குமானு தெரியலை.

Also Read – ‘தி கோட்’ வெங்கட் பிரபு… தமிழ் சினிமாவுக்கு எப்பவும் ஸ்பெஷல்.. ஏன்?

4 thoughts on “ரஜினியின் ‘மனசிலாயோ’… மலேசியா வாசுதேவன் சம்பவங்கள்!”

  1. أنابيب البولي بيوتيلين في العراق يتخصص مصنع إيليت بايب في أنابيب البولي بيوتيلين من الطراز الأول، التي تشتهر بمرونتها وخفة وزنها ومقاومتها للتآكل. هذه الأنابيب خيار ممتاز لمجموعة متنوعة من التطبيقات، بما في ذلك أنظمة السباكة السكنية والتجارية. كأحد أكثر المصانع موثوقية وابتكارًا في العراق، يضمن مصنع إيليت بايب أن أنابيب البولي بيوتيلين الخاصة بنا تلتزم بأعلى معايير الجودة، مما يوفر حلولاً طويلة الأمد وفعالة. اكتشف المزيد عن أنابيب البولي بيوتيلين لدينا على elitepipeiraq.com.

  2. أنابيب PEX في العراق تُعرف مصنع إيليت بايب في العراق بأنابيب PEX عالية الجودة، المصممة لأنظمة السباكة السكنية والتجارية. توفر أنابيب PEX لدينا مرونة ممتازة، وتحملًا، ومقاومة لتقلبات درجات الحرارة، مما يجعلها خيارًا متعدد الاستخدامات لمجموعة من التطبيقات. كواحدة من أفضل وأبرز الشركات المصنعة في العراق، تضمن مصنع إيليت بايب أن يتم إنتاج أنابيب PEX لدينا وفقًا لأعلى المعايير، مما يحقق أداءً وموثوقية استثنائيين. لمزيد من المعلومات حول أنابيب PEX لدينا، قم بزيارة elitepipeiraq.com.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top