டிரைவிங் லைசென்ஸ்

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி… எளிய வழி!

டிரைவிங் லைசென்ஸ் ஆன்லைனிலேயே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் தெரிஞ்சுக்கப்போறோம்.

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்
டிரைவிங் லைசென்ஸ்

நாடு முழுவதும் போக்குவரத்து அலுவலகங்கள் தொடர்பான சேவைகளை மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறையின் www.parivahan.gov.in இணையதளம் வாயிலாக எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. Learners licence எனப்படும் பழகுநர் உரிமம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றோடு, வாகனத்தின் உரிமையாளர் பெயரை மாற்றுவதற்கான விண்ணப்பம், ஃபேன்சி நம்பர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இந்த இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

அந்தவகையில், பழகுநர் உரிமத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

 • www.parivahan.gov.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று கீழே ஸ்கோரால் செய்தால், ‘License Related Services’ என்கிற முதல் பாராவுக்குக் கீழ் ‘Drivers/ Learners License’ என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.
 • அதன்பின்னர் வரும் டயலாக் பாக்ஸில் `Apply for Learner Licence’ என்கிற முதல் ஆப்ஷனைத் தேர்வு செய்து, உங்களுக்கு ஏற்கெனவே லைசென்ஸ் இல்லை என்பதை உறுதி செய்து சப்மிட் கொடுக்கவும்.
 • அதன்பின்னர், ஆதார் தகவல்களைக் கொடுத்து ஓடிபி மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும். அதன்பின்னர் வரும் டயலாக் பாக்ஸில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும். கியர் இல்லாத டூவீலர், எல்.எம்.வி எனப்படும் இலகுரக வாகனங்கள், வணிகப் பயன்பாட்டு வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் என இவற்றில் எதற்காக நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்துகொள்ளவும்.
 • அடையாளம் மற்றும் முகவரிச் சான்றிதழ்களின் நகல்களை அப்லோடு செய்யவும்.
 • பழகுநர் உரிமத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை நெட் பேங்கிங்/UPI உள்ளிட்ட பல வசதிகளைப் பயன்படுத்திக் கட்டவும். உங்களின் பேமெண்ட் ஸ்டேட்டஸ் ஓகே ஆனதும், அதற்கான ரசீது கிடைக்கும். அதை நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு, உங்கள் அருகிலிருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர் உரிமம் பெறுவதற்கான நேரத்தை (Slot) புக் செய்து கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம்

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு உங்களால் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும். பழகுநர் உரிமம் பெற்று அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ள அனுமதி இருக்கிறது. இந்த கால அவகாசத்தை மீறும்பட்சத்தில், புதிதாகப் பழகுநர் உரிமம் விண்ணப்பித்து, மீண்டும் 30 நாட்களைக் கடந்த பிறகே ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.Streamlining Driving in India: The Parivahan Sewa Portal's Benefits

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 • `https://sarathi.parivahan.gov.in/sarathiservice/sarathiHomePublic.do’ என்கிற இணையதள முகவரியில் இரண்டாவதாக இருக்கும் ’Apply for Driving License’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்ளவும்.
 • அதை கிளிக் செய்தால் வரும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து, உங்கள் பழகுநர் உரிமத்தின் எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.
 • விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்யவும். புகைப்படம் மற்றும் தேவைப்பட்டால் உங்கள் டிஜிட்டல் கையெழுத்து நகலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
 • ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நேரடித் தேர்வில் பங்கு பெறும் டைம் ஸ்லாட்டை புக் செய்யவும்.
 • தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற பிறகு, லைசென்ஸுக்கான கட்டணத்தைச் செலுத்தவும். பேமெண்ட் ஸ்டேட்டஸ் ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அந்த ரசீதை அருகில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து உங்கள் ஸ்மார்ட் லைசென்ஸைப் பெற்றுக்கொள்ளலாம்.

Also Read – பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன?

31 thoughts on “ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி… எளிய வழி!”

 1. buy medicines online in india [url=http://indiapharmast.com/#]reputable indian pharmacies[/url] indian pharmacies safe

 2. indian pharmacy [url=https://indiapharmast.com/#]buy medicines online in india[/url] Online medicine order

 3. mexico pharmacies prescription drugs [url=https://foruspharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexico drug stores pharmacies

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top