போலந்தில் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு Rail Force One ரயிலில் செல்கிறார். வழக்கமாக விமானங்களில் செல்லும் அவர் இந்தப் பயணத்தை ரயிலில் மேற்கொள்வது ஏன்? அந்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?
Modi in Ukraine
போலந்திலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்கு பிரதமர் மோடி 10 மணி நேர பயணமாக Rail Force One-ல் பயணிக்கிறார். இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் உக்ரைன் செல்ல இந்த ரயிலைப் பயன்படுத்தியிருந்தனர். அதேபோல், தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த ரயிலையே பயன்படுத்துகிறார்.
உக்ரைனில் சுமார் 7 மணி நேரம் மட்டுமே செலவிடும் மோடி, அங்கிருந்து போலந்துக்கு மீண்டும் Rail Force One ரயில் மூலமே திரும்புகிறார். இதன்மூலம் உக்ரைன் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். உக்ரைன் அதிபருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
ஏன் Rail Force One?
ரஷ்யா – உக்ரைன் போர் நடந்துவரும் சூழலில் பாதுகாப்புக் கருதி வான்வெளியைத் தவிர்த்து ரயிலில் பயணிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரயில் போக்குவரத்தும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இருப்பினும், உக்ரைன் மக்களின் தற்போதைய முக்கியமான போக்குவரத்து ரயில் மூலமாகவே நடந்து வருகிறது. அதேபோல், போர் தொடங்கியது முதல் தற்போது வரை உக்ரைனிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களைப் பாதுகாப்பாக எல்லைதாண்டி கொண்டு சென்றது ரயில் போக்குவரத்துதான். இப்படியான பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்தே பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ரயிலில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
Rail Force One சிறப்பம்சங்கள்
கிரீமியாவின் சுற்றுலாப் பயணிகளுக்காக 2014-ல் பல்வேறு சிறப்பம்சங்களோடும் வசதிகளோடும் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், கிரீமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக்கொண்ட பிறகு உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், உயர் அதிகாரிகள் என விவிஐபிகளுக்கான ரயிலாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் மேம்படுத்தப்பட்டன.
குண்டு துளைக்காத கண்ணாடிகள், சிறப்பான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தனித்துவமான தகவல்தொடர்பு வசதி, பிரத்யேக பாதுகாப்புப் படை என நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது இந்த ரயில். இதுதவிர, மீட்டிங்குகளுக்கென பிரத்யேக நீளமான மேசையுடன் கூடிய அறைகள், சோபா, படுக்கை வசதிகள் என நகரும் நட்சத்திர விடுதி என்றே இதை அழைக்கிறார்கள்.
Techno rozen I do not even understand how I ended up here, but I assumed this publish used to be great
Hi, I’m Jack. Your blog is a treasure trove of valuable insights, and I’ve made it a point to visit daily. Kudos on creating such an amazing resource!