திமுக

மோடிக்கே ஃப்ளைட்ல டிக்கெட் புக்கிங்… திமுக-வின் சமீபகால அலப்பறைகள்!

பா.ஜ.கல தொடங்கி பா.ம.க வரைக்கும் எல்லாருமே நமக்கு தொடர்ந்து கலாய்க்க கண்டண்ட் தரக்கூடிய ஆள்கள்தான். திமுகவும் அப்பப்ப நிறைய கண்டண்ட் தருவாங்க. ஆனால், கடந்த சில நாள்கள்ல பாசிட்டிவாவும், நெகட்டிவாவும் நிறைய இண்ட்ரஸ்டிங்கான கண்டண்ட்களை திமுக தந்துருக்காங்க. பேனர் வைச்சதுல தொடங்கி நான் திமுக சொம்புதான்னு சொன்னது வரைக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. ஷார்ட்டா சொல்லணும்னா.. குப்பைத் தொட்டில இருந்து ஏகப்பட்ட மாத்திரைகள் கிடைச்சிருக்கு.. வாங்க தர்றேன்.

கல்யாண சத்தியம்

நான் ரெடிதான் வரவாலாம் என்ன பாட்டு? சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே.. கல்யாணம் செய்துக்கிறோம் #$!$% வீட்டுப் பையனையேனு ஏகதேச காம்போதி ராகத்துல பாடி திமுக கூட்டணில உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியோட பொருளாளர் பாலு இளம்பெண்களிடம் சத்தியம் வாங்குனதுதான் விஷயம். திமுக கூட்டணில இருந்ததாலயே இந்த வீடியோவை ஷேர் பண்ணி திமுகவையும் போட்டு பொளந்து எடுத்தாங்க. ஏங்க இப்படிலாம் பண்றது சரியானு கேட்டா.. எங்க வீட்டுப் பெண்கள்கிட்ட சத்தியம் வாங்குனேன் இதுல என்ன தப்புனு விளக்கம் ஒண்ணு கொடுத்தாரு பாருங்க. உனக்கென்னப்பான்ற மோட் தான் இருந்துச்சு. கூட்டணினு இவங்களை நம்பி சேத்ததுக்கு இவங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டாங்கனு திமுக வெளிப்படையா பொலம்பல அவ்வளவுதான்.

Also Read – இந்தியாவில் எம்.எல்.ஏ-வான முதல் திரைப்பட நடிகர் – எஸ்.எஸ்.ஆரின் அரசியல் பயணம்!

மோடிக்கே ஃப்ளைட்

மணிப்பூர்ல சமீபத்துல கலவரம் ரொம்ப பெருசாவே நடந்துச்சு. இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும், மோடி சும்மாகூட அந்தப் பக்கம் போய் பார்க்கலை. சமூக வலைதளங்கள்ல இதை வைச்சு மோடியை வைச்சு செய்தாங்க. இதுக்கு திமுக ஐ.டி விங், மணிப்பூருக்கு ஃப்ளைட்ல டிக்கெட் புக் பண்ற மாதிரி ஸ்கிரீன் ஷாட் ஒண்ணு போட்டு கலாய்ச்சாங்க. மோடிகோ விமானம்னும் போட்ருந்தாங்க. மோதானினு எக்ஸ்ட்ரா டிக்கெட்டும் போட்ருந்தாங்க. திமுக கடந்த சில நாள்கள்ல பண்ண தரமான சம்பவம்னு பலரும் பேசிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள பா.ஜ.க ஐ.டி விங் பதிலடி கொடுக்குற மாதிரி, சென்னைல இருந்து வேங்கைவயல் பஸ் டிக்கெட் புக் பண்ணியிருக்கோம். ரெட் ஜெயிண்ட் பஸ், சீட் நம்பர் 2 ஜி, பயண கட்டணம் 200, பயணி பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு போட்ருந்தாங்க. நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி ஆவ்ஸம்.

குட்டிக் கதை

திமுக இளைஞரணி மாநாடு சம்பந்தமா இருசக்கர வாகன பேரணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வச்சாரு. கன்னியாகுமரில நடந்த இந்த சம்பவத்துல உதயநிதி ஸ்டாலின் குட்டிக்கதை சொன்னாரு. என்னாங்க.. போங்க.. எல்லாரும் குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சா எப்படிங்கனு மனசுக்கு தோணுனாலும், அவர் சொன்ன குட்டிக்கதை சோஷியல் மீடியால டிரெண்ட் ஆச்சு. பூட்டப்பட்ட பூட்டு, சுத்தியல், சாவி மூணும் இருக்கு. அந்தப் பூட்டை திறக்க சுத்தியல் ரொம்ப முயற்சி பண்ணுது. பூட்டோட தலைல அடிக்குது.. முடியல. ஆனால், அந்த சாவி சுலபமா பூட்டை திறந்திடுச்சு. அப்போ, சுத்தியல் சாவியைப் பார்த்து, நான் உன்னைவிட வலிமையா, பெருசா,பலமா இருக்கேன்.. என்னால முடியல, நீ மட்டும் எப்படி திறந்தனு கேட்டுச்சு. அதுக்கு சாவி, நீ பூட்டை மதிக்காமல் தலைல ஓங்கி அடிக்கிற. நான் நேரா போய் பூட்டோட இதயத்தை தொட்ருவ்வேன்னு சொல்லிச்சு. பூட்டு தமிழ்நாடு, சுத்தியல் பா.ஜ.க, சாவி திமுகனு சொன்னாரு. ஏற்கெனவே, கழுகு.. காக்கானு சண்டை போய்ட்டு இருக்கு. இடைல பூட்டு வேறயா? நான் கேக்கல.. பொதுவா சொல்றாங்க.

திமுக சொம்பு

சமீபத்துல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சில பத்திரிக்கையாளர் பார்வைன்ற பெயர்ல ப்ரியன்றவரு கலந்துட்டு பேசுனாரு. மனுஷன் நார்மலா பேசுனா பரவால்லை. திமுகவை என்ன சொல்லி கலாய்ப்பாங்களோ.. அந்த வார்த்தைகளை வைச்சு பேசுனாரு. தமிழ்நாட்டுல ஸ்டாலிக்கு நிகரான் தலைவர் யாருமில்லை. அவரப்போய் அண்ணாமலைக்கூடலாம் ஒப்பிட்டு பேசக்கூடாது. இதை நான் சொல்றதுனால என்னை திமுக சொம்புனு சொன்னாலும் பரவால்லைனு அவர் சொல்ல.. அந்த வார்த்தையை மட்டும் திரும்பவும் எடுத்து.. திமுக சொம்புனு போட்டு வைச்சு செய்யுறாங்க. ஆனால், ஒரு முடிவோடதான் திமுக காரங்க இறங்கியிருக்காங்க போல.. என்னத்தையாவது பேசி திமுகவுக்கு அடி வாங்கி கொடுத்துடுறீங்க. இதையும் நான் சொல்லல.. வெளிய பேசிக்கிறாங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top