மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசு… ஒரே நாளில் திமுக, அதிமுக கூட்டங்களில் கண்டனத் தீர்மானம்!

2023-24 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகியவற்றில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடக்கும் முதல் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இதுவே.
கூட்டத்தில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெரும் முப்பெரும் விழா கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு, கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவருக்கு வாழ்த்துகள்- நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் – ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்தும், அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம்

அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை வகித்தார்.


இந்தக் கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளில் உரிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்குக் கட்டணம், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் தேர்தலில் கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்குக் கண்டணம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Also Read – `மூன்றாவது தரப்பு.. தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு’ – செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கின் இறுதிவாதம்!

7 thoughts on “பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசு… ஒரே நாளில் திமுக, அதிமுக கூட்டங்களில் கண்டனத் தீர்மானம்!”

  1. I share your level of appreciation for the work you’ve produced. The sketch you’ve displayed is elegant, and the content you’ve authored is sophisticated. Yet, you appear to be concerned about the possibility of heading in a direction that could be seen as dubious. I agree that you’ll be able to resolve this matter efficiently.

  2. Your work has captivated me just as much as it has captivated you. The visual presentation is elegant, and the written content is sophisticated. However, you appear concerned about the possibility of presenting something that could be considered dubious. I’m confident you’ll be able to resolve this issue promptly.

  3. Batida magnífica, gostaria de aprender enquanto você altera seu site, como posso me inscrever em um blog? A conta me ajudou a um acordo aceitável. Eu estava um pouco ciente disso, sua transmissão ofereceu uma ideia brilhante e clara

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top