தவெக கொடி

தவெக கொடி யானைக்கு சிக்கல்?… விலங்குகளை சின்னங்களாக வைத்திருக்கும் கட்சிகள்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே யானையைத் தங்கள் சின்னமாக வைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தவெக கொடி

இரண்டு யானைகள் காலைத் தூக்கியபடி நிற்க நடுவில் வாகை மலர் இருக்குபடியான சிவப்பு, மஞ்சள் இருவண்ணக் கொடியைத் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். கொடி, கொடிப்பாடல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை இந்தக் கொடியில் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

TVK Vijay Flag
TVK Vijay Flag

இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பேசியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆனந்தன், `1968 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தில் 2003-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டு 2004-ல் அது சட்டமாக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின்படி, அசாம் – சிக்கிம் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளில் யானையை சின்னமாகப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

விலங்குகள் – பறவைகளைக் கொடியில் வைத்திருக்கும் கட்சிகள்

இந்திய தேர்தல் ஆணையத் தலைவராக டி.என்.சேஷன் இருக்கையில், அதிமுகவில் ஜெ அணி – ஜா அணி பிளவைத் தொடர்ந்து ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரசாரத்தில் வேன்களின் மீது கால்கள் கட்டப்பட்ட நிலையில் சேவல்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானது.
1969 வரையில் ஒன்றிணைந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம் இன்னிக்கு இருக்க கை சின்னம் கிடையாது. இரட்டை காளை சின்னம்தான் அந்த கட்சியோட சின்னமா இருந்துச்சு. பிளவுபட்ட பிறகு ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு ராட்டை நூற்கும் பெண் சின்னமும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஒதுக்கப்பட்டுச்சு. ஒரு கட்டத்துல ஜனதா கட்சி, இந்திரா காங்கிரஸோடு இணைந்து 1977-ல இன்னைக்கு இருக்க கை சின்னத்தை வாங்கிருக்காங்க.
இதேபோல், கோவாவில் போர்த்துக்கீசிய ஆட்சி முடிந்து முதல்முறையாக ஆட்சியில் அமர்ந்த எம்.ஜி.பி கட்சியும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹில் ஸ்டேட்ஸ் பீப்புள்ஸ் டெமாக்ரடிக் பார்டி ஆகியவை சிங்கத்தைத் தங்கள் சின்னமாக வைத்திருக்கின்றன.

மேற்குவங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி, தங்கள் கொடியில் புலியை வைத்திருக்கிறார்கள். இந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட வரலாறும் உண்டு. அதேபோல், மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சி, தங்கள் கொடியில் புலியை வைத்திருக்கிறது. அதேநேரம் அந்தக் கட்சியின் சின்னம் வில்-அம்பு ஆகும்.

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் எதிரும் புதிருமாகத் தேர்தலில் களமாடும் டிரம்பின் குடியரசுக் கட்சியும் கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியும் தங்கள் கொடியில் விலங்குகளையே வைத்திருக்கின்றன. டிரம்ப் கட்சியின் சின்னம் யானை; கமலா ஹாரிஸ் கட்சியின் சின்னம் கழுதை. இவை உள்பட உலகில் 48-க்கும் மேற்பட்ட கட்சிகள் தங்கள் கொடியில் அல்லது சின்னமாக விலங்களை வைத்திருக்கின்றன.

Also Read – TVK Vijay Flag: போர் யானைகள்; வாகை மலர்.. மூன்றெழுத்து மந்திரம்… த.வெ.க கொடிப்பாடல் குறியீடுகள் என்ன சொல்கின்றன?

5 thoughts on “தவெக கொடி யானைக்கு சிக்கல்?… விலங்குகளை சின்னங்களாக வைத்திருக்கும் கட்சிகள்!”

  1. Ny weekly naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.

  2. What i do not understood is in truth how you are not actually a lot more smartlyliked than you may be now You are very intelligent You realize therefore significantly in the case of this topic produced me individually imagine it from numerous numerous angles Its like men and women dont seem to be fascinated until it is one thing to do with Woman gaga Your own stuffs nice All the time care for it up

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top