TVK Vijay Flag

TVK Vijay Flag: போர் யானைகள்; வாகை மலர்.. மூன்றெழுத்து மந்திரம்… த.வெ.க கொடிப்பாடல் குறியீடுகள் என்ன சொல்கின்றன?

தமிழக வெற்றிக்கழக கொடியும் கொடிப்பாடலையும் அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் பயணம்

நடிகர் விஜய் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்ததோடு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நோக்கியே செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடியையும் கொடிப்பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

த.வெ.க கொடி

சிவப்பு, மஞ்சள் என இருவண்ணப் பின்னணியில் உள்ள தமிழக வெற்றிக்கழகக் கொடியில் இருபுறமும் போர் யானைகள் முன்னங்கால்களைத் தூக்கியபடி நிற்கின்றன. அதற்கு நடுவில் வெற்றியைக் குறிக்கும் வாகை மலர் இடம்பெற்றிருக்க, அதைச் சுற்றிலும் நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் இடம்பெற்றிருக்கும் 28 நட்சத்திரக் குறியீடுகளில் 5 நட்சத்திரங்கள் மட்டும் வெளிர் ஊதா நிறத்திலும் மற்றவை பச்சை நிறத்திலும் இடம்பிடித்திருக்கின்றன.

த.வெ.க கொடிப்பாடல்

கொடியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொடிப்பாடலின் வரிகளில் பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. `வெற்றிக்கழக கொடி ஏறுது… நம்ம சனங்க விதிமாறுது…’ எனத் தொடங்கும் பாடலை கவிஞர் விவேக் வரிகளில் இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் உருவாகியிருக்கிறது.

அம்பாரி மீதமர்ந்து இரண்டு வெள்ளையாடை உடுத்திய நபர்கள் மக்கள் கூட்டத்தில் கறுப்பு நிற யானைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, வெள்ளை நிறக் குதிரையில் காப்பானாக ஒருவர் கையில் கொடியுடன் வருகிறார். அவர் குதிரையில் இருந்து கீழிறங்கும் வரையில் இரண்டு வெள்ளை நிற யானைகள் அமைதி காக்க, அவர் குதிரையில் இருந்து கீழிறங்கி கையில் கொடியைப் பிடித்து நிற்க இருபுறமும் யானைகள் முன்னங்கால்களைத் தூக்கி வணங்கி நிற்கின்றன. அதன்பின், இரண்டு கறுப்பு நிற யானைகளையும் தாக்கி அவற்றிடமிருந்து மக்கள் திரலைக் காப்பாற்றுகின்றன… முடிவில், த.வெ.க கொடி ஏறுகிறது. இப்படியாக கிராபிக்ஸ் காட்சியோடு தொடங்குகிறது த.வெ.கவின் கொடி பிரசாரப்பாடல்.

கொடியை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என வீட்டு காலெண்டர் தொடங்கி பூக்கடை, ஆட்டோ, சுவரோவியம் என பல ரெஃபரென்ஸ்களை ஐடியாவாகெவே பாடலில் கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் அடையாளமான காளை மாடு கழுத்தில் மாலை, நெற்றியில் திலகத்தோடும் கொம்பில் த.வெ.க கொடி நிறத்தோடும், ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், குழந்தைகள், குடும்பத்தினரின் கொண்டாட்டம், மீனவர்கள், உழவு, கைத்தறி நெசவாளர் என தமிழ்நாட்டின் பல்வேறு அடையாளங்கள் த.வெ.க கொடியின் பின்னணியில் வந்து போகின்றன.

`தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பொறக்குது: மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது…., மனசில் மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது… சிகரம் கிடைச்ச பின்னுன் இறங்கி வந்து சேவ செஞ்சு, ஒரு கறை இல்லாத கையைப் பிடிச்சு போகப்போறோமே… விஜயக்கொடி, தருமக்கொடி’ என பாடல் வரிகள் தவெக விஜய்யின் நேற்றைய, இன்றைய, நாளைய நிலைப்பாட்டைப் பேசுகின்றன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் த.வெ.க கொடி பறக்க, தமிழ்நாடு மேப்பில் கொடி நிறத்தில் மாற கொடிப்பாடல் நிறைவடைகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகக் கொடி மற்றும் கொடிப் பாடல் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… அதை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – IMAX-ல் வெளியாகும் விஜய்யின் GOAT – IMAX என்றால் என்ன தெரியுமா?

6 thoughts on “TVK Vijay Flag: போர் யானைகள்; வாகை மலர்.. மூன்றெழுத்து மந்திரம்… த.வெ.க கொடிப்பாடல் குறியீடுகள் என்ன சொல்கின்றன?”

  1. Estou navegando on-line há mais de três horas hoje, mas nunca encontrei nenhum artigo interessante como o seu. Vale bastante para mim. Na minha opinião, se todos os proprietários de sites e blogueiros criassem um bom conteúdo como você, a Internet seria muito mais útil do que sempre antes

  2. Real Estate naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top