`ஒரு தற்கொலை; ஒன் மில்லியன் ஹார்டின்ஸ்’ – GP Muthu விழுந்து, எழுந்த கதை!

தூத்துக்குடியில இருக்க உடன்குடிதான் இவருக்கு சொந்த ஊர். ஜி.பேச்சிமுத்துதான் இவரோட முழு பெயர். அப்பா பெயர் கணேசன். அவரோட பெயரை சுருக்கி ஜி.பி.முத்துன்னு ஸ்டைலா மாத்திக்கிட்டார். அவரோட பெயரை சொன்னாலே 10-ல் 9 பேருக்கு கட்டாயம் தெரிஞ்சிடும். அந்தளவுக்கு மெள்ள மெள்ள தனக்கான ஒரு இடத்தை அமைத்துக்கொண்டார். இப்படி அமைத்துக்கொண்ட இவருக்கு 2 பிசினஸ் படு தோல்வி ஆனது. தனது உடன் பிறந்த தம்பியை இழந்தார். ஊரே இவரை வசை பாடியது. சில வருடங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தனக்கான தனி இடத்தை பிடித்த இவருக்கு யூடியூபில் இருக்கும் ரசிகர்கள் ஒரு மில்லியன். ஒற்றை ஆளாக இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவருடைய வீழ்ச்சியும் வளர்ச்சியும் என்ன? வாங்க பார்க்கலாம்!

வீழ்ச்சி

இவருக்கு 3-வதுக்கு மேல படிப்பு ஏறலை. படிப்பை பாதியிலே நிறுத்திடுறாங்க. அந்த டைம் ஒரு பட்டறைக்கு 30 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப் போறார். குடும்பமும் கஷ்டப்படுற குடும்பம். இதுக்கு இடையில் தம்பி இசக்கிமுத்துவோடு இடைவிடாமல் சண்டை ஏற்படும். எப்போது பார்த்தாலும் இவரும் சரமாரியாக சண்டை போட்டுக்கொள்வார்கள். இவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தால் சில தழும்புகள் தெரியும். அதற்கு காரணம் இவரது தம்பி இசக்கி முத்துதான். ஒரு நாள் உச்சக்கட்ட சண்டையில் இவரது முகம் மட்டுமின்றி மொத்த உடம்பிலும் ஷேவிங் செய்யும் ப்ளேடை வைத்து கிழித்திருக்கிறார். மொத்தம் 170 தையல் போட்டிருக்கிறார். அதன் பின்னர் தனக்கு முன்பே தம்பிக்கு திருமணம் ஆகிறது.

அதன் பிறகு இவர் எவ்வளவோ மறுத்தும் இவருக்கும் திருமணம் ஆனது, கடமைகள் ஜாஸ்தி ஆகிறது, பணத்தேவை அதிகரிக்கிறது, அடுத்ததாக ஆரம்பித்த ஒரு பிசினஸும் தோல்வியடைகிறது. இதற்கு இடையில் இவரது தம்பி இசக்கி முத்து ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறார். அவருக்கு பிறந்த இரு குழந்தைகளையும் தன்னுடைய 4 குழந்தைகளோடு சேர்த்து பார்த்துக்கொள்கிறார். இன்னும் ஜாஸ்தியான கடமைகள் வந்து சேர எதையாவது செய்து முன்னேற எண்ணி பிசினஸ் செய்கிறார் அது தோல்வியில் முடிகிறது. மனைவியின் நகையை விற்று பிசினஸ் செய்து தோல்வி, கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை. இப்படித்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது அழுத்தத்தை போக்கிக்கொள்ள டிக்டாக், இன்ஸ்டா, யூடியூப் போன்ற ப்ளாட்ஃபார்மில் நகைச்சுவையான வீடியோக்களை பதிவிடுகிறார். அது ட்ரோல் செய்யப்பட்டாலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

ஒரு கட்டத்தில் அதன் மீது போதையான இவர், குடும்பம் குழந்தைகள் என எதையும் கவனிக்காமல் முழுநேர வேலையாக அதையே செய்துகொண்டிருந்தார். பின் டிக் டாக் செயலிக்கு தடை விதித்ததை அடுத்து மூன்று நாட்களுக்கு இவர் சாப்பிடமாலே இருந்த்திருக்கிறார். அந்தளவிற்கு அதன் மீது அடிக்ட்டாக இருந்துள்ளார். வீட்டில் மனைவி ஏதோ ஓரளவு சப்போர்ட் என்றாலும் எவ்வளவு தூரம் ஒருவரை சகித்துக்கொண்டு இருக்க முடியும். சொந்தக்காரர்களும் பயங்கர வசைபாட, பிசினஸ் எதை ஆரம்பித்தாலும் தோல்வியும் நஷ்டமுமாக போனது. இதற்கு இடையில்தான் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். 

வளர்ச்சி

பரம்பரையிலே இவர் மட்டும்தான் இவரது குடும்பத்தில் கார் வாங்கியிருக்கிறார். இவர் எப்படிப்பட்ட ஆள்ன்னா ஒரு சின்ன பையன் இவரை இன்டர்வியூ பண்ண வர்றார். அவர் சொல்றார், நீங்க இதுவரைக்கும் நிறைய இன்டர்வியூ கொடுத்துருப்பீங்க, ஆனா இந்த பேட்டியில உங்களோட சோகமான பக்கங்கள், கஷ்டமான பக்கங்கள் பத்தி பேசலாம்னு சொல்றார். அதற்கு ஜி.பி.முத்து இதுவரைக்கும் நான் பெருசா அது மாதிரி பேசுனது இல்ல, ஆனா நீங்க வளர்ந்து வர்ற தம்பி உங்ககிட்ட சொல்றதுல தப்பு இல்லனு சொல்லி ஆரம்பிக்கிறார். அப்புறம் ஒருத்தர் ஜிபி.முத்துவோட ஃபேன் இவருக்கு லெட்டர் போட்டிருந்தார். அதுல, ‘உங்களை தப்பா பேசி ட்ரோல் பண்ற எல்லாருக்கும் கொரோனா வரட்டும்’னு சொல்லியிருந்தார். அதற்கு உடனே இவர் பதறிப்போய், ‘அப்படிலாம் சொல்ல கூடாது. அவங்களுக்கு இதுதான் சந்தோஷம்ன்னா அதை பண்ணட்டுமே. இப்படி எல்லாம் சொல்லாதீங்க’னு சொன்னார்.

இப்போ எல்லாம் யூடியூப் ஒரு மிகப் பெரிய வியாபாரம் ஆகிடுச்சு. வியூஸ் தேடி ஓடுற இந்த காலத்தில் தன்னுடைய எந்த வீடியோவுக்கும் இவர் காபிரைட் க்ளைய்ம் செய்தது இல்லை. அதில் இவருக்கு உடன்பாடும் இல்லை. தன்னுடைய வீடியோவை நண்பர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கட்டும், இதுல என்ன இருக்குனு ஒரு வீடியோவுல சொல்லியிருந்தார். சொன்னதுபோல் பல வீடியோக்கள் இவர் அப்லோட் செய்யாத இவர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் யூடியூபில் கொட்டிக்கிடக்கிறது. gp muthu thug life என்று தேடிப்பார்த்தால் மில்லியன் கணக்கில் வியூஸ் இருக்கும் பல வீடியோக்களை நாம் பார்க்கலாம். இப்படி இவரது வளர்ச்சிக்கு இவரது குணாதிசியங்கள்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். இவரது அப்பா இவரை என்னதான் செய்தாரோ தெரியவில்லை. கணேசன் என்று குறிப்பிட்டு அவரை கலாய்த்தாலே இவரால் சிரிப்பை கொஞ்சம் கூட கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

ஒவ்வொரு வீடியோவிலுமே இது கட்டாயம் இருக்கும் நோட் பண்ணி பாருங்க். 35 வயது வரைக்கும் பட்டன் போன் பயன்படுத்திக்கொண்டிருந்தவர், 35 வயதுக்கு பிறகு இவரே சம்பாதித்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்குகிறார். மணி, ஆனந்த ஆகிய இருவருக்குமே இவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் முக்கிய இடங்களுக்கு இவரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். பொது இடத்தில் இவர் வெளியே வந்தால் பல நூறு ரசிகர்கள் இவரை சூழ்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் இவரது நல்ல மனசும் வெள்ளந்தித்தனமும். எல்லோரைப் போலவும் இவரும் இவரது வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கிறார்தான். ஆனால், அதிலிருந்து கற்றுக்கொண்டு தன்னுடைய நெகடிவிட்டியையே பாசிட்டிவாக மாற்றிக்கொண்டதுதான் இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். 

இதே போல் எந்த நிலையிலும் தன்னுடைய கேரக்டரை மாற்றிக்கொள்ளாமல் இருங்க தலைவரே..!

Also Read – கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top