ஐஸ்வர்யா ராய்

`புஷ்பவள்ளி, மதுமிதா, மீனாட்சி, நந்தினி’ – ஐஸ்வர்யா ராயும் தமிழ் படங்களும்..!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாகவே இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானது இருவர் என்கிற தமிழ் படம் மூலமாகத்தான். அவர் நடித்த தமிழ் படங்களில் அவர் நடிப்பு எப்படி இருந்தது.. இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் படங்களில் ஐஸ்வர்யா ராயின் கேரக்டர்கள் எப்படிப்பட்டவை… அவங்க எந்த அளவுக்கு ஸ்கோர் பண்ணிருந்தாங்க.. அப்டின்றதைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

இருவர்

தமிழ்நாட்டோட இருதுருவங்களாக் கருதப்பட்ட எம்.ஜி.ஆர் – கருணாநிதிங்குற ரெண்டு லெஜண்டுகளோட வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டதா சொல்லப்படுற படம் இருவர். மோகன்லால் – பிரகாஷ் ராஜ், தபுனு பெரிய ஸ்டார் கேஸ்டிங்கே நடிச்ச இந்தப் படம் மனிரத்னத்தோட எவர்கிரீன் கல்ட் கிளாசிக். இதுல கிராமத்துப் பெண்ணான புஷ்பவள்ளி, பெரிய ஃபேன் பாலோயிங் கொண்ட கல்பனாங்குற நடிகைனு டூயல் ரோல் பண்ணிருப்பாங்க ஐஸ்வர்யா ராய். உலக அழகியா பட்டம் சூடப்பட்டு 3 ஆண்டுகள் கழிச்சு அவங்க நடிச்சிருந்த படம் இருவர். பாலிவுட் நடிகையாகவே அவங்க பார்க்கப்பட்டாலும், அவங்களைத் திரையுலகுக்கு நடிகையா அறிமுகப்படுத்துன பெருமை நம்ம கோலிவுட்டுக்கும் டைரக்டர் மணிரத்னத்துக்குமே சேரும். மோகன்லால் மாதிரியான ஒரு லெஜண்ட் ஆக்டருக்கு ஈக்வலா பல சீன்கள்ல நடிப்பில் அழகா ஸ்கோர் பண்ணிருப்பாங்க ஐஸ்வர்யா ராய். அந்தவகையில், ஒரு பெருமைமிகு அறிமுகமாகவே இந்தப் படம் அவங்களுக்கு இருந்துச்சு.

ஜீன்ஸ்

ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் இரட்டை வேடங்களில் நடித்து 1998ம் ஆண்டு வெளியான படம் ஜீன்ஸ். மதுமிதா என்கிற கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் மிரட்டியிருப்பாங்க. ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்களான விசுவுவுக்கும் ராமுவுக்கும் அவர்களைப் போன்ற இரட்டையர்களைத்தான் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று அவர்களோட அப்பா நாச்சியப்பன் முடிவு பண்ணியிருப்பார். அப்படியான சூழல்ல தன்னோட பாட்டியின் ஆபரேஷனுக்காக அமெரிக்கா வரும் மதுமிதா, விசு மீது காதல் கொள்வார். இந்த காதலுக்காக பாட்டி கிருஷ்ணவேனி (லட்சுமி), தம்பி மாதேஷ் (ராஜூ சுந்தரம்) ஆகியோருடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டி படத்தோட முக்கியமான போர்ஷன்னே சொல்லலாம். நாச்சியப்பன் ஃபேமிலியை ஏமாத்த வைஷ்ணவிங்குற தங்கச்சி இருக்கதா சொல்லி ஏமாத்துவாங்க. அந்த கேரக்டர்லயும் சரி, விசு மீதான காதலில் தவிக்கும் இடங்கள்லயும் சரி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பயங்கரமா ஸ்கோர் பண்ணியிருப்பார். ரஜினிக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஜீன்ஸ் படம். காமெடிலயும் அவங்க செஞ்சுரி அடிச்சிருப்பாங்க.  

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

இயக்குநர் ராஜீவ் மேனனோட மாஸ்டர் பீஸ் படங்கள்ல முக்கியமான படம். மம்மூட்டி, அஜித், தபு, அப்பாஸ் இவங்களோட ஐஸ்வர்யா ராய், மீனாட்சிங்குற கேரக்டராவே வாழ்ந்திருப்பாங்க. இவ்வளவு ஸ்டார்ஸ் மத்தியிலயும் அவங்க கேரக்டர் அவ்வளவு அழகா வடிவமைக்கப்பட்டிருக்கும். சுட்டிப் பெண்ணான மீனாட்சிக்குக் கவிதை, இசை, பாடல்கள்னா அவ்வளவு பிடிக்கும். தாத்தாவோட உயில்னால சொத்துக்களை இழந்து சென்னை வந்தபிறகு ஒரு பிளேபேக் சிங்கரா ஆகணும்னு டிரை பண்ற மீனாட்சி, முதல் ரெக்காடிங் அப்போ தன்னோட காதலனான ஸ்ரீகாந்த் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போற தகவல் தெரியுது. அந்த சிச்சுவேஷன்ல வர்ற எங்கே எனது கவிதை பாடல் ஐஸ்வர்யா ராயோட நடிப்புக்கு சாட்சி சொல்லும். தன்னை விட பல வயசு மூத்தவரான மேஜர் பாலா மேல காதல் ஏற்படுறது… அதை நாசுக்கா வெளிப்படுத்துறதுனு செகண்ட் ஹாஃப்லயும் கிடைச்ச எல்லா கேப்லயும் ஐஸ்வர்யா ராய் சிறப்பாகவே ஸ்கோர் செஞ்சிருப்பாங்க…  

ராவணன்

ராமாயணம்ங்குற எபிக் கதையை மாடர்ன் ஸ்கிரீன்பிளேவுக்குள் பொருத்தி மணிரத்னம் எடுத்திருந்த ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராயோட கேரக்டர், சீதையோட கேரக்டரை அடிப்படையாகக் கொண்ட ராகினி சுப்ரமணியம். நக்ஸலைட்டான வீராவால கடத்தப்பட்ட 14 நாட்கள் பிணைக் கைதியா அடைபட்டிருக்க ராகினி காட்டுற வீரம் அசாத்தியமானது. வீரா கையால சாகுறதை விரும்பாம வரையாடு கூட குதிக்க பயப்படுற மலை உச்சியில இருந்து உயிரை மாய்ச்சுக்கிறதுக்காக ராகினி குதிச்சுடுவாங்க. தற்கொலை முயற்சியில் தோல்வியடைஞ்சாலும் வீராவோட கரிசனத்தை எல்லா இடங்கள்லயும் வெறுப்பாங்க. `உசுரே போகுதே’ பாடல்ல அவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்திருப்பாங்க.. இந்தப் படமும் ஐஸ்வர்யா ராயோட கரியர்ல ரொம்ப முக்கியமான படமா பதிவாகிடுச்சு.  

எந்திரன்

ஷங்கர் – ரஜினி கூட்டணியில வசூலில் மிகப்பெரிய சாதனை படைச்ச படம் எந்திரன். இதுல, நம்ம அழகிய ராட்சஷி ஐஸ்வர்யா ராய், சனாங்குற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. சயிண்டிஸ்டான வசீகரனைக் காதலிக்குற இவங்க மேல சிட்டி ரோபோவுக்குக் காதல் வந்துடும். எந்திரன் படத்துல சிட்டி ரோபா தடம் மாற முக்கியமான காரணமே சனா மீதான காதல்தான். சனாவா பல இடங்கள்ல அவங்க கேரக்டர் நம்ம மனசுல நிப்பாங்க.. வசீயுடனான காதலை ரத்து பண்ண காதல் ரத்து காண்ட்ராக்டோட இவங்க நடந்து வர்ற சீன், திருமண மேடையில இருந்து தன்னைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணப் போறதா சொல்ற சிட்டிகிட்ட இவங்க பேசுற இடம் இப்படி எந்திரன் படம் நெடுக சூப்பர் ஸ்டார் ரஜினி அளவுக்குப் பல இடங்கள்ல இவங்க தனித்துத் தெரிவாங்க…

பொன்னியின் செல்வன்

ஐஸ்வர்யா ராயோட தமிழ் படங்கள் வரிசைல சமீபமா சேர்ந்திருக்க படம் பொன்னியின் செல்வன். கல்கியோட பொன்னியின் செல்வன் நாவல்ல வர்ற நெகடிவ் ஷேட் கொண்ட கேரக்டர்தான் நந்தினி. அழகும் அபாயமும் ஒருங்கே அமையப்பெற்ற ரொம்பவே சிக்கலான கேரக்டர் அது. ஐஸ்வர்யா ராய்தான் இந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பாங்கனு மணிரத்னம் சரியாகவே முடிவெடுத்திருக்கார்னே சொல்லலாம். சமீபத்தில் வந்த டீசர்லயே சென்டர் ஆஃப் தி அட்ராக்‌ஷனே நந்தினி ஐஸ்வர்யா ராயும் குந்தவை த்ரிஷாவும் மீட் பண்ற சீன்தான்… உங்களை மாதிரியே நந்தினியா ஐஸ்வர்யா ராய் எப்படி பெர்ஃபார்ம் பண்ணிருக்காங்கனு பார்க்க நாங்களும் மரண வெயிட்டிங்!

தமிழ்ல ஐஸ்வர்யா ராய் பண்ணதுலயே உங்களுக்கு எந்த கேரக்டரை ரொம்பப் பிடிக்கும்… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க! 

1 thought on “`புஷ்பவள்ளி, மதுமிதா, மீனாட்சி, நந்தினி’ – ஐஸ்வர்யா ராயும் தமிழ் படங்களும்..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top