யோகி பாபு

போலீஸ் விசாரணை.. விரட்டிய நாய்.. சந்தித்த அவமானங்கள்.. யோகிபாபு ஜெயித்த கதை!

சம்பவம் நம்பர் 01 : சினிமா வாய்ப்பு தேடிட்டு இருக்குற நேரம். அப்போ, நண்பர் மூலமா ஒரு வாய்ப்பு தெரியவருது. நல்ல மழை.. நனைஞ்சிட்டே போறாரு. டைரக்டர் ஆபீஸூக்கு போறாரு.. உள்ள இருந்த இயக்குநர் டோர் தொறக்காமலே, யார்ன்னு ஜன்னல் வழியா கேட்குறார். ஆரிடிஸ்ட் சார்.. சான்ஸ் தேடி வந்திருக்கேன்னு யோகிபாபு சொல்லுறார். போட்டோ வச்சிருக்கியான்னு கேட்க அந்த போட்டோவையும், யோகிபாபுவையும் கொஞ்ச நேரம் ஜன்னல் வழியா பாக்குறாரு.. இந்த மூஞ்சிக்கு இந்தப் படத்துல வாய்ப்பு இல்லைன்னு சொல்லிடுறார்.. இப்பவும் படம் பண்ணிட்டு இருக்குற இயக்குநர் அவர். 

சம்பவம் நம்பர் 02 : யோகி பாபு கூட்டத்துல ஒருத்தனா படங்கள்ல நடிச்சிட்டு இருந்த டைம். ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம்.. 10 நாள் ஷூட்.. 3000 சம்பளத்துக்கு பதிலா 1500 குடுக்குறாங்க. மீதி பணத்தை கேட்டதுக்கு புரொடியூசர்ட்ட கேட்டுக்கோன்னு சொல்லிடுராங்க. அவரு புரொடியூசர் வீட்டுக்கு போறார். புரொடிச்யூசரோட மனைவி பாக்க ரவுடி மாதிரி இருக்கான்னு நாயை விட்டு கடிக்க விட்டு தொரத்தி விடுறாங்க.

சம்பவம் நம்பர் 03 : சின்ன சின்ன ரோல் நடிச்சிட்டு இருந்த டைம். நைட் ஷூட் முடிச்சிட்டு வீட்ட்டுக்கு போய்ட்டு இருக்கும் போது, போலீஸ் வழிமறிக்கிறாங்க. சைக்கோ திருடன் சுத்திட்டு இருந்த டைம். அதுனால, யோகிபாபுவோட தொற்றத்தை வச்சி போலீஸ் அவங்க ஸ்டைல்ல விசாரிக்கிறாங்க. அப்போ, ஒவ்வொரு படத்துலயும் சின்ன சின்ன ரோள்ல நடிச்சதையெல்லாம் சொல்லுறார். சின்ன அவமானத்துக்குப் பெறகு தான் போலீஸ் அவரை விடுறாங்க. 

சினிமாவுல வாய்ப்பு தேடிட்டு இருந்த டைம்ல குறைஞ்சது 100 பட கம்பெனிக்கு மேல வாய்ப்பு தேடி போயிருக்காரு யோகிபாபு. ஆனா.. இந்த உருவமும், தலை முடியும் அவரை பார்த்து கிண்டல் பண்ண தான் வச்சிருக்கு. அதே உருவத்தையும், தலைமுடியையுமே வச்சி காமெடியனா.. ஹீரோவான்னு தமிழ் சினிமாவோட பிஸியான நடிகர்கள்ள ஒருத்தரு யோகி. தமிழ்ல சூப்பர் ஸ்டார்ல தொடங்கி பாலிவுட்டோட கிங்கான் ஷாரூக் கூட வரைக்கும் படம் பண்னிட்டார் யோகிபாபு. 

காமெடியனா இருந்த யோகிபாபு ஹீரோ ஆக காரணம் சிவகார்த்திகேயன் தான். அது என்ன படம்னு Guess பண்னிட்டீங்கன்னா கமெண்டுல சொல்லுங்க. அந்த சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு டீடெயிலா இந்த வீடியோவுல சொல்லுறேன். அதுமட்டுமில்லாம.. யோகியோட சினிமாவை பொறட்டிப் பொட்ட இரண்டு சம்பவம்.. அது என்னென்னும் இந்த வீடியோவுல சொல்லுறேன். 

அப்பா இராணுவத்துல வேலை செஞ்சதுனால, அவரும் இராணுவத்துல சேரணும்னு ஆசைப்படுறார். புட்பால் நல்லா விளையாடுவார்ங்கிறதுனால ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல போகணும்னு முயற்சி செய்யுறாரு.. ஆனா அது நடக்காம போய்டுது. 

பெருசா படிக்கலைங்கிறதுனால செக்யூரிட்டி, ஹோண்டா கம்பெணி, சிலிண்டர் கம்பெனில வேலைன்னு எதேதோ செய்துட்டு இருக்கார். 

யோகிபாபு தீவிர முருகர் பக்தர். வேலை இல்லாத டைம். கையில 200 ரூபாயோட எங்க போறதுன்னு தெரியாம பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவரு, நேரா திருத்தணி முருகன் கோயிலுக்கு போறாரு.  அங்கேயே படுத்துக்கவும் செய்வாராம். அப்போதான், லொல்லு சபா ஷூட் பக்கத்துல போறது கேள்விப்பட்டு கெளம்பி போறாரு.. இவரோட கெட்டப் பாத்துதான், ராம் பாலா நடிக்க கூப்பிட்டிருக்கார். கூட்டத்துல ஒருத்தனா இருக்கணும். அவ்ளோதான்.  ஷூட்டுக்கு போனா 50 ரூபாய் சம்பளம்.. அதுக்கு ஸ்ரீபெரும்புதூர்ல இருந்து 100 ரூபாய் செலவு பண்ணி போய்ட்டு வருவாராம். 

வடபழனி மயூரா ஹோட்டல் பக்கத்துல இருக்குற விநாயகர் கோயிலுக்கு தினமும் போயிடுவாராம். அங்கே போய் அமர்ந்துகொள்வாராம். அங்க தொன்னையில கொடுக்குற பொங்கல்தான் டிஃபன். இப்படித்தான் அநேக நாட்களை ஓட்டியிருக்காரு. 

ஆரம்பகால கட்டதுல இவரு சினிமாவுல இருந்தது  அப்பாவுக்கு பிடிக்கலை. ஏரியாவுல எல்லோரும் கிண்டல் தான் பண்ணிருக்காங்க.. காக்க முட்டை படம் பாத்துதான் அப்பா இவன் சினிமாவுல ஜெயிச்சிடுவான்னு நம்பியிருக்காரு. 

யோகிபாபு ஹீரோவா நடிச்ச படம் கோலமாவு கோகிலா. இந்தப் படத்துல இவர் நடிக்க காரனம் சிவகார்த்திகேயன் தான். அவர் தான் சொல்லிருக்காரு.. என் ஃப்ரெண்டு ஒருத்தர். உங்களுக்காக கதை வச்சிருக்காரு. நீங்க கேளுங்கன்னு.. எனக்குலாம் ஹீரோவா கதையான்னு அப்டி தான் நெல்சன் அறிமுகம் கிடைக்கிது. யார் ஹீரோயின்னு கெட்டதுக்கு நயன்தாரா அப்டின்னு சொன்னதும், நம்மல வச்சி ப்ராங்க் பண்றாஙக்ன்னு நினைச்சிருக்காரு. அப்படி டேக் ஆஃப் ஆனது தான் கோலமாவு கோகிலா. 

யோகிபாபு சினிமாவுல காமெடியனாகுறதுக்கு முக்கிய காரணம் சுந்தர்.சி. தூங்கா நகரம்ல அஞ்சலியோட கரகாட்டம் டான்ஸ் ஆடியிருப்பாரு யோகி. அதை நோட் பண்ண சுந்தர்.சி யார் இந்த பீஸ்..வித்தியாசமா இருக்குன்னு கூட்டிட்டுப் போய் கலகலப்பு வாய்ப்பு கொடுத்தாரு. சினிமாவுல யோகியோட மெண்டார் சுந்தர்.சி தான். இப்போ வரைக்கும் சுந்தர். சி படங்கள்ல யோகி இல்லாம இருந்ததில்லை. 

அதேமாதிரி, மான் கராத்தே படத்துல தான் சிவா கூட சேர்ந்து நடிக்கிறாரு யோகிபாபு. படத்துல மொதல்ல ஹன்சிகா வோட பொண்ணூ பார்க்குற சீன் மட்டும் தான் இருந்திருக்கு. யோகியோட நடிப்பை பார்த்து தான் சீன் கூட்டுறாங்க. அப்டிதான் வவ்வால் – மான் கராத்தே ஃபைட் சீன்லாம் வந்துச்சாம். 

ஒரு பக்கம் யோகிபாபு.. பரியேறும் பெருமாள், மண்டேலா, பொம்மை நாயகின்னு போனா.. இன்னொரு பக்கம் சூரி கருடன், விடுதலைன்னு நடிக்கிறார். இரண்டு பேருக்குள்ள பெரிய போட்டி இருக்குன்னு ரசிகர்கள் நினைச்சா.. அதுதான் இல்லை. ரெண்டு பெருமே நல்ல நண்பர்கள். சூரிக்காக  ராக்காயி அம்மன் கோயில்ல யோகிபாபு அர்ச்சனை பண்ணிருக்காராம்.. அந்த அளவுக்கு நட்பு. 

யோகி தீவிர முருக பக்தர்ன்னு தெரியும். யோகியோட கார் எல்லா முருகன் கோவிலுக்கும் போய்ட்டு வந்திருக்கும்னு யோகியோட காரை சுத்தி வருவாராம் விஜய்சேதுப்தி. அதோட, யோகியோட கார் சீட்டை தொட்டு கும்பிடுவாராம். அதுமட்டுமில்ல… கடைசி விவசாயி படத்துல விஜய்சேதுபதி கையில நிறைய கயிறு கட்டிருப்பாரு. அதுவுமே, யோகிபாபு கையில கயிறு கட்டியிருக்குற ரெஃபரென்ஸா வச்சி தா மணிகண்டன் பண்னிருப்பாரு. 

சமீபத்துல, குருவாயூர் அம்பள நடையில்னு மலையாள படத்துல நடிச்சிருப்பார் யோகி. ஆரம்பத்துல கேட்கும் போது டேட் இல்லைனு சொல்லிருக்காரு. இவர் தான் நடிக்கணும்னு அவங்க ஷூட்டிங்கைத் தள்ளி வச்சி, இவர் வர வரைக்கும் வெயிட் பண்ணி க்ளைமேக்ஸ் ஷூட் எடுத்தாங்களாம்.. 

யோகிபாபுவோட எந்த ரோல் உங்களுக்கு பிடிக்குங்கிறதை கமெண்டுல சொல்லுங்க.

Also Read – `தி கோட்’ விஜய்… ஆடியோ லாஞ்சை ஏன் மிஸ் பண்றோம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top