கடந்த 24-ம் தேதி வெளியாகுறதா இருந்த துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாம தள்ளிப் போய்ட்டு இருக்கு. அதுக்கு ஃபைனான்ஸ் ரீதியான சிக்கல்கள் காரணம்னு சொல்லப்படுது. ஆனா இந்த ப்ராஜெக்ட்ல இவங்கள்லாமா இருந்தாங்கனு நினைக்கிறப்போதான், செம்மையா இருக்கும்லனு நினைக்க தோணுது. ஆமாங்க இந்த ப்ராஜெக்ட் முதல்ல மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடத்தான் ஆரம்பிச்சது. அப்படி இந்த படம் கடந்து வந்த பாதையைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
சீயான் விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணி முதன்முறையா இணைஞ்ச படம் துருவ நட்சத்திரம். 2016-ம் வருஷம் தொடங்கப்பட்ட படம் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்திச்சது. இந்தப் படம் எடுக்க நடந்த சம்பவங்களையும் முயற்சிகளையுமே வைச்சு புதுசா ஒரு படமே பண்ணிடலாம். அப்படி ஒரு சுவாரஸ்யமான கதை அது.
துருவ நட்சத்திரம் கதையை முதலில் சூர்யாகிட்டதான் கெளதம் மேனன் சொல்லியிருக்கிறார். சார், இந்திய சினிமாவுல இப்படி ஒரு ஸ்பை த்ரில்லர் வந்ததில்லை. நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்டிருக்கார். கதை நல்லா இருக்கு, ஆனா என்னால ரிலேட் பண்ண முடியலை, எனக்கு ஒரு ரெஃபரென்ஸ் காட்ட முடியுமானு கேட்டிருக்கார். என்கிட்ட அப்படி ஏதும் இல்லை. ஆனா, வாரணம் ஆயிரம் எப்படி கான்ஃபிடண்ட்டா இருந்தேனோ, அப்படி ஒரு கான்ஃபிடண்ட் இதுல தெரியுதுனு சொல்ல, சூர்யாவுக்கு இந்தக் கதையை முழுசா மாத்தி கொண்டுவாங்கனு சொல்ல, ரொம்ப நாள் ஆகியும் முழுகதையையும் அவரால ரெடி பண்ண முடியலை. சிங்கம் 2-வுக்குப் பின்னாலயே இந்தப்படம் ஆரம்பிச்சிருக்க வேண்டியது. ஆனா காலதாமதம் ஆனதால, 6 மாதங்கள் வெயிட் பண்ண சூர்யா, அந்தப் படத்துல இருந்து விலகிட்டார். அப்போ அவர் வெளியிட்ட காட்டமான அறிக்கை பரபரப்பை கிளப்பின ஒன்னு. அதுல பூஜைலாம் போட்டு, கெட்டப்லாம் பார்க்க நான் ஒத்துழைச்சேன்னு சொல்லியிருப்பார், சூர்யா. அப்படி சூர்யாவுக்காகவே உருவாக்கப்பட்ட கதைதான் துருவ நட்சத்திரம். அப்படி திட்டமிட்டபடி சூர்யா உள்ள வந்து படம் ஆரம்பிச்சிருந்தா, சூர்யா, த்ரிஷா, நயன்தாரா, ஏ.ஆர் ரகுமான், பார்த்திபன், சிம்ரன், அருண்விஜய்னு பெரிய காம்போவுல படம் உருவாகி இருக்கும். அன்னைக்குக் காலக்கட்டத்துல எல்லா நடிகர்கள், டெக்னீஷியன்கள்னு ஒன்னு சேர்க்கிற முயற்சியில் இருந்தார். ஆனா கடைசிவரைக்கும் யாரையும் உள்ள கொண்டுவர முடியலை. அப்போவே துருவ நட்சத்திரம்னு பெயரும் வைக்கப்பட்டது. அதுக்கப்புறம் ரஜினிக்கும் கதையைச் சொன்னார், கெளதம். ரஜினிக்கும் கதை பிடிச்சிருந்தது. ஆனால் சில காரணங்களால அவரும் நடிக்க முடியாமல் போயிடுச்சு.
சூர்யாவுக்காக பண்ண கதையில ஒரு உணர்வுப்பூர்வமான எமோஷனல் ப்ளாஷ்பேக் இருந்தது. ஆனா விக்ரம் உள்ள வந்ததுக்குப் பின்னால அந்த ப்ளாஷ்பேக்கை தூக்கிட்டார். இப்போ அவர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், உங்க படத்துல வில்லன்கள் எல்லாருமே பலமா இருப்பாங்க, இதுலயும் அப்படித்தானானு கேட்டிருக்கார். வில்லன் பலமானவன், ஆனா அவனை ஜெயிக்கிற ஹீரோ வில்லனை விட பலமானவன்னு சொல்ல, விக்ரம் இம்ப்ரஸ் ஆகி உள்ள வந்திருக்கார்.
படம் ஆரம்பிக்கப்பட்ட பின்னால விக்ரம் எதுவுமே மாற்றம் சொல்லாமல், கெளதம் மேனன்னுக்கு குறுக்கே வரவே இல்லை. விக்ரம் ஒரு ஸ்கூல் டீச்சர், இது அவரோட ஐடன்டிட்டி. ஆனா அவருக்கு வேற உலகம் இருக்கு, நாட்டுக்கு ஆபத்து வர்ற நேரத்துல ஒரு டீம் எப்படி சேர்ந்து செயல்படுதுங்குறதுதான் கதை. இதுல ஒரு உயர் அரசுப் பதவி வகிக்கிற கேரக்டருக்காகவே அமிதாப் பச்சனை கேட்டார், கெளதம் மேனன். அவரும் வெளிநாட்டுப் பயணத்துல இருந்ததால மறுத்துட்டார். இப்படி தமிழ் சினிமாவுல நினைச்சுப் பார்க்க முடியாத கேஸ்டிங்கை உருவாக்க ஆசைப்பட்டார் கெளதம். துருவ நட்சத்திரம் படத்துல ஒரு லீட் கொடுத்து அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகவும் வாய்ப்புகள் இருக்கு.
2013-ம் வருஷத்துல இருந்தே துருவ நட்சத்திரம் தள்ளிப்போய்ட்டுத்தான் இருக்கு. முதல்ல டீசரை ஷூட் பண்ணி ரிலீஸ் பண்ண, யூட்யூபே பரபரத்தது. அப்படி ஒரு எதிர்பார்ப்பு. அஃபீசியலாக 2017-ம் வருஷம் படப்பிடிப்பு முழுமையாக துவங்கப்பட்டது. அதன் பின்னர் முக்கால்வாசிக் காட்சிகள் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டன. இப்படி ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட படம் நாளடைவுல கொஞ்சம் தாமதமா இடைவெளிவிட்டு நடக்க ஆரம்பிச்சது. அப்படி முடிக்கப்பட்ட படம் ஃபைனான்ஸ் சிக்கல்கள்ல சிக்கித் தவிக்க, நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார், கெளதம் வாசுதேவ் மேனன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக துருவ நட்சத்திரத்தை கரையேற்றிக் கொண்டுவந்தார்.
Also Read – லோகேஷின் ஃபேவரைட் உறியடி…. அப்படி என்ன ஸ்பெஷல்?
அப்படி நவம்பர் 24-ம் தேதி ரிலீஸ் செய்யலாம்னு முடிவு பண்ணி அறிவிச்ச பின்னாலயும் கொஞ்சம் சந்தேகம் இருக்கவே செஞ்சது. ஆனா, வழக்கம் போல கடைசி நேரத்துல ரிலீஸ்ல பிரச்னையை சந்திச்சது, துருவ நட்சத்திரம். சிம்புவை ஹீரோவா வைச்ச ஒரு படத்தை இயக்க இருந்தார், கெளதம் மேனன். இந்தப் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கிட்ட கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கினார். ஆனா அதை முடிக்காததால் அந்த தயாரிப்பு நிறுவனமும் பணத்தைக் கேட்டது. இது கோர்ட்டுக்குப் போய் பணத்தைக் கொடுத்துட்டு ரிலீஸ் பண்ணிக்கங்கனு சொல்ல, அதுக்காகத்தான் இப்போ இந்தப்படம் வெயிட்டிங்.
மேலோட்டமா பார்த்தா 6 வருஷமா இது நடக்கிறதாவே தெரியும். ஆனா, சூர்யாகிட்ட சொல்ல ஆரம்பிச்சது, 2013-ம் வருஷம். ஆனா இன்னும் அந்தப்படம் ப்ரெஷ்ஷா இருக்கு. வர்ற டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கு. ஆரம்பக் காலக்கட்டங்கள்ல விக்ரம் கால்ஷீட் இல்லாததால, ஜெயம் ரவி வரைக்கும் போய் அந்த கதையை டிரை பண்ணார், கெளதம். துருவ நட்சத்திரம் பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.