வெற்றிமாறன்

வடசென்னை லவ் சீன் நிஜமா நடந்துச்சா… வெற்றிமாறன் லவ் ஸ்டோரி!

வெற்றிமாறன் படங்கள்ல லவ் சீன்ஸ்லாம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அதைவிட ஸ்பெஷலானது வெற்றியோட நிஜமான லவ் ஸ்டோரி.

வெற்றிமாறனோட தோழி ஹேமாவோட ஃப்ரெண்ட்தான் ஆர்த்தி. ஹாஸ்டல்ல தங்கியிருந்த தன்னோட ஃப்ரெண்ட் ஹேமாவை மீட் பண்ண வர்றப்போலாம் ஆர்த்தியை மீட் பண்ணிருக்காரு. அப்பறம் ஹேமாவுக்குத் தெரியாம ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சு காதல் டெவலப் ஆகுது. ஒரு முறை  ஹேமா வெற்றிகிட்ட ‘ஆர்த்தி யாரையோ லவ் பண்றானு நினைக்கிறேன். ரொம்ப நேரமா யார்கூடவோ போன்ல பேசிட்டு இருக்கா?’னு கம்ப்ளைண்ட் பண்றாங்க. ‘ஏன் அது நானாக்கூட இருக்கலாம்’னு வெற்றி சிரிக்கிறாரு. ஒரு சுபயோக சுபதினத்துல பெசண்ட் நகர் பீச்ல வச்சி ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு ஆர்த்திதான் வெற்றிகிட்ட கேட்டிருக்காங்க. வெற்றியும் ‘ஓகே… பண்ணிக்கலாம்’னு டக்குனு சொல்லிடுறாரு.

ஆனா நான் இப்போதான் சினிமாவுக்குள்ள வந்திருக்கேன். நான் ஒரு படம் பண்ண எப்படியும் 10 வருசம் ஆகிடும். அதுவரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியுமானு பார்த்துக்கோனு சொல்லிடுறாரு. அப்போ வெற்றிமாறன் அசிஸ்டெண்ட் டைரக்டர்தான் அவரோட செலவுக்கே ஆர்த்திதான் காசு கொடுப்பாங்க. அதுவும் அவங்க சம்பளமே 2000 ரூபாய் அதுல 1000 ரூபாயை கொடுத்தாங்க. ஆர்த்திக்கு 20 ஆயிரம் சம்பளம் வரும்போது 10 ஆயிரம் வெற்றிக்கு கொடுத்தாங்க.  வெற்றிக்கு பைக் வாங்கிக்கொடுத்ததும் ஆர்த்திதான்.

வெற்றி சொன்ன மாதிரியே அவர் காதலிக்க ஆரம்பிச்சு பத்து வருசம் கழிச்சுதான் படம் பண்ண வாய்ப்பு வருது. முதல் படத்துக்கான அட்வான்ஸ் வாங்கின கையோட இப்போ நான் டைரக்டர் ஆகிட்டேன். நீ நம்ம காதலை வீட்டுல சொல்லுனு சொல்றாரு. ஆனா ஆர்த்தி வீட்டுல அவங்க அப்பா ஒத்துக்கல. உடனே நேரா அவங்க வீட்டுக்கே கிளம்பி போய்,  ‘சினிமாலதான் எனக்கு வேலை. டைரக்டராக முயற்சி பண்ணிட்டிருக்கேன். தம் அடிப்பேன்; தண்ணியடிக்க மாட்டேன். நாளைக்கு பாலு மகேந்திரா சாரை வந்து பாருங்க’ அப்படினு படபடனு பேசுறாரு. பரவாயில்லை நேர்மையா பேசுறான்னு அவங்க மாமனாரை கன்வின்ஸ் பண்ணி ஆர்த்தியை திருமணம் பண்ணாரு.

Also Read – யுவன் ஷங்கர் ராஜா – மதன் கார்க்கி, முதல் பாடலின் செம சீக்ரெட் தெரியுமா?

திருமணச் செலவுல இருந்து ரிசப்சன் செலவு வரைக்கும் ஆர்த்திதான் பாத்துக்கிட்டாங்க. கடைசி நேரத்துல ஒரு 50 ஆயிரம் தேவைப்பட்டிருக்கு. வேற வழியில்லாம தனுஷ்கிட்ட கேட்க, தனுஷ் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துதான் வெற்றிமாறன் திருமணம் நடந்தது.

ஆக பொல்லாதவன் ரொமான்ஸ் சீன்ல இருந்து வடசென்னை பொண்ணு கேட்கிற சீன் வரைக்கும் வெற்றிமாறனோட நிஜமான கதைதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top